ரமலான் நோன்பின் மாண்பு!

இலக்கியம் கவிதைகள் (All)

ரமலான் நோன்பின் மாண்பு!

நோன்பு!
மனசாட்சியால் விதைத்த
மனங்களின் விரதம்!
கட்டவிழ்ந்து விட்ட மனத்தை
கைப்பிடிக்குள் கொண்டுவரும் நோன்பு!

பசியின் சோகத்தை
பணக்காரர்களுக்கும்
ருசியாய் பரிமாறி
கட்டாயமாக்கிய ரமலான்!

உணவை மட்டும் துறப்பதா நோன்பு?
ஊனாசை உடம்பாசை
பேராசை பொருளாசை
ஒருசேர ஒத்திவைக்கப்பட்ட மாதம்!

புறம் கோள் பொய் சொல்வதை
புறந்தள்ளிய மாதம் ரமலான்!
அறம் அன்பு நேசமதை
பறை சாற்றிய ரமலான்!

ஈட்டிய செல்வமதில்
,ரண்டரை சதவீதம்
ஏழைக்கு விதியாக்கி
ஏற்றத்தாழ்வு நீக்கிய ரமலான்!

வணக்கமும், வழிபாடும்
,ரவு பகல் பேதமின்றி
வல்லவன் ,றைவனிடம்
வார்த்தளிக்கும் மாதம்!

வஞ்சனை, சூது
வில்லங்கம், விவகாரம்
சொல்லிலே கெடுதல்கள்
அல்லவே விலக்கும் மாதம்!

வான்மறை குர்-ஆன்
வழங்கிய மாதம்!- ரமலான்
நாம் ‘வாழ்வது சகோதரமாய்’ என
முழங்கிய மாதம் !!!

பஷீர் முகமது, மஸ்கட்,
basheerm@yahoo.com
http://basheermohd.blogspot.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *