துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் மற்றும் தேரிருவேலி முஸ்லிம் ஜமாஅத் ஆகியவற்றின் சார்பில் தமிழக பிரமுகர்கள் மதுரை மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் மவ்லானா பி.கே.என். அப்துல் காதர், முதுகுளத்தூர் திடல் பள்ளிவாசல் ஜமாஅத் தலைவர் மவ்லவி ஏ. உமர் ஜஹ்பர் ஆலிம் ஆகியோருக்கு விருது வழங்கும் விழா, வரவேற்பு நிகழ்ச்சி மற்றும் தகவல் கையேடு வெளியீடு ஆகிய முப்பெரும் விழா 28.05.2009 வியாழக்கிழமை மாலை துபாய் அஸ்கான் டி பிளாக்கில் நடைபெற்றது.
விழாவிற்கு ஜமாஅத் ஒருங்கிணைப்பாளர் ஹெச். இப்னு சிக்கந்தர் தலைமை வகித்தார். தேரிருவேலி மவ்லவி முஹம்மது சாதிக் இறைவசனங்களை ஓதினார். துணைப் பொதுச்செயலாளர் ஏ. அஹ்மத் இம்தாதுல்லாஹ் வரவேற்புரை நிகழ்த்தினார்.
ஜமாஅத் துணைத்தலைவர் எஸ். சம்சுதீன் சிறப்பு விருந்தினர்கள் குறித்த அறிமுகவுரை நிகழ்த்தினார்.
கவானிஜ் ஹிப்ஸ் மதரஸா நிர்வாகி மவ்லவி அப்பாஸ், மார்க்க சொற்பொழிவாளர் ஆவூர் முஹம்மது இஸ்மாயில் ஹஸனி, அபுதாபி ஜமாஅத் ஒருங்கிணைப்பாளர் எஸ். அமீனுதீன், மவ்லவி அலி பாதுஷா மன்பயீ உள்ளிட்டோர் வாழ்த்துரை நிகழ்த்தினர்.
மதுரை மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் மவ்லானா பி.கே.என். அப்துல் காதர் அவர்களது சமுதாய சேவையினைப் பாராட்டும் முகமாக சமுதாய சேவையாளர் என்ற பொருள்படும் காதிமுல் மில்லத் பட்டமும், முதுகுளத்தூர் திடல் முஸ்லிம் ஜமாஅத் தலைவரும், முதுகுளத்தூர் & கமுதி வட்டார ஜமாஅத்துல் உலமா சபை செயலாளருமான முதுவைக் கவிஞர் மவ்லவி அல்ஹாஜ் ஏ. உமர் ஜஹ்பர் ஆலிம் பாஜில் மன்பயீ அவர்களது இலக்கியச் சேவையினைப் பாராட்டி சமுதாயக் கவிஞர் எனப் பொருள்படும் சாயிருல் மில்லத் என்ற பட்டமும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து திடல் முஸ்லிம் ஜமாஅத்தினரால் தகவல் கையேடு வெளியிடப்பட்டது. ஈமான் அமைப்பின் அலுவலக மேலாளர் ஏ. ஹமீது யாசின் நினைவுப் பரிசு வழங்கினார். மவ்லவி உமர் ஜஹ்பர் ஆலிம் அமீரகத்தில் பேசிய நிகழ்வுகளின் தொகுப்புகளின் விசிடி வெளியிடப்பட்டது.
மவ்லானா பி.கே.என். அப்துல் காதர் ஆலிம் அவர்களது தனது ஏற்புரையில் முதுகுளத்தூரைச் சேர்ந்தவர்கள் சமுதாயப் பணிக்கு ஆற்றிய சேவைகளை நினைவு கூர்ந்தார்.
மவ்லவி ஏ. உமர் ஜஹ்பர் ஆலிம் பாஜில் மன்பயீ அவர்கள் கல்விப் பணிக்காக அமீரக முதுகுளத்தூர் ஜமாஅத்தினர் ஆற்றிவரும் பணிகளைப் பாராட்டினார்.
பொருளாளர் ஏ. ஜஹாங்கீர் நன்றி கூறினார். பொதுச்செயலாளர் முதுவை ஹிதாயத் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார்.
பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது. இரவு உணவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.