துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் திருச்சி மாவட்ட அரசு டவுண் காஜியும், முதுகுளத்தூரைச் சேர்ந்த மவ்லானா மவ்லவி அல்ஹாஜ் க. ஜலீல் சுல்தான் மன்பயீ அவர்களுக்கு 21.04.2009 செவ்வாய்க்கிழமை மஹ்ரிப் தொழுகைக்குப் பின்னர் வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் அமீரக வாழ் ஜமாஅத்தார்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இரவு உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் தங்களது வருகையினை பொதுச்செயலாளர் கே. முஹம்மது ஹிதாயத்துல்லாஹ் 050 51 96 433 எண்ணுக்கு தொடர்பு கொண்டு உறுதிப்படுத்த கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மிகவும் குறுகிய நேரத்தின் காரணமாக அனைவரையும் தொலைபேசியில் தொடர்பு கொள்ள இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதனையே அழைப்பாக ஏற்று விழா சிறப்புற தங்களது ஒத்துழைப்பினை நல்கிட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மவ்லவி ஜலீல் சுல்தான் அவர்கள் முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் சிராஜுல் உம்மத் மவ்லவி அல்ஹாஜ் எஸ். அஹ்மத் பஷீர் சேட் ஆலிம் அவர்களது பெரியத்தா மகன் ஆவார்.