முதுகுளத்தூர் மாணவி அஜிபா சாதனை

ஐ. மு. மு. ஜமாஅத்

http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Edition-Madurai&artid=60694&SectionID=113&MainSectionID=95&SEO=&Title=

முதுகுளத்தூர், மே 14:  முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேனிலைப்பள்ளி மாணவி கே.அஜிபா நஸ்ரின் பாத்திமா, பிளஸ்-2 தேர்வில் பரமக்குடி கல்வி மாவட்டம் அளவில் 2-வது இடமும், ராமநாதபுரம் வருவாய் மாவட்டம் அளவில் 4-வது இடமும் வகித்து சாதனை புரிந்துள்ளார்.

அஜிபா நஸ்ரின் பாத்திமா பெற்ற மதிப்பெண் விவரம்:

தமிழ்-181, ஆங்கிலம்-182, இயற்பியல்-197, வேதியியல்-192, உயிரியியல்-195, கணிதம்-196, மொத்த மதிப்பெண் 1200-க்கு 1153.

மாணவியின் பெற்றோர் பெயர் எஸ்.காஜா முகைதீன்-யாஸ்மின் நிஷா. தந்தை அதே பள்ளி வணிகவியல் ஆசிரியராகவும், தாயார் பள்ளிவாசல் தொடக்கப்பள்ளி ஆசி ரியையாகவும் பணியாற்றுகின்றனர்.

சாதனை மாணவியை பள்ளி தாளாளர் எஸ்.கமால் நாசர், கல்விக் குழு தலைவர் எஸ்.திவான் உள்ளிட்ட பலரும் பாராட்டினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *