துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் மற்றும் தேரிருவேலி முஸ்லிம் ஜமாஅத் ஆகியோர் இணைந்து மே 28 ஆம் தேதி வியாழக்கிழமை மாலை 7.00 மணிக்கு அஸ்கான் டி பிளாக்கில்
மதுரை மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்
மவ்லவி பி.கே.என். அப்துல் காதர் ஆலிம்
மற்றும்
முதுகுளத்தூர் திடல் பள்ளிவாசல் ஜமாஅத் தலைவர்
முதுவைக் கவிஞர்
மவ்லவி அல்ஹாஜ் ஏ. உமர் ஜஹ்பர் ஆலிம் மன்பயீ
ஆகியோருக்கு
வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் அமீரகத்தில் வாழ்ந்து வரும் ஜமாஅத் பிரமுகர்கள் அனைவரும் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு சிறப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
சிறப்பு விருந்தினர்களது சொற்பொழிவினை நாம் அனைவரும் கேட்கும் விதமாக நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ் குறிப்பிட்ட நேரத்தில் துவங்கப்படும்.
இரவு உணவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே தங்களது வருகையினை ஜமாஅத் பொருளாளர் ஏ. ஜஹாங்கீர் 050 251 23 78 எனும் எண்ணில் தொடர்பு கொண்டு உறுதி செய்து கொள்ளவும்.
இந்த நிகழ்ச்சி சிறப்புடன் நடைபெற ஜமாஅத்தார்கள் ஒத்துழைப்பினை நல்குவதுடன், குறிப்பிட்ட நேரத்திற்கு வருகை தந்து சிறப்பிக்க மீண்டும் கேட்டுக் கொள்கிறோம்.
இவண்
ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத்
ஐக்கிய அரபு அமீரகம்
www.mudukulathur.com