ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் – ஐக்கிய அரபு அமீரகம்

ஐ. மு. மு. ஜமாஅத்

அஸ்ஸலாமு அலைக்கும்  வரஹ்

ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் கடந்த 1990 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது.

எனினும் அதன் செயல்பாடுகள் 2000 ஆம் ஆண்டுக்குப் பின்னர் மிகவும் உத்வேகத்துடன் செயல்பட்டு வருகிறது. முதுகுளத்தூரைச் சேர்ந்தவர்கள் அமீரகத்தில் பணிபுரிய அதிக அளவில் சென்றதின் காரணமாக இது புத்துணர்ச்சி பெற்று வருகிறது.

தற்பொழுது ஏறக்குறைய 125 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் அமீரகத்தில் உள்ளனர்.

ஏறக்குறைய 15 பேர் குடும்பத்துடன் இருந்து வருகின்றனர்.

பணிகள் :

கல்விச்சேவையே இதன் தலையாயப் பணி

கடந்த ஐந்து வருட காலமாக பள்ளி மாணவர்களுக்கு சிறப்புத் தனிப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

ஆரம்பத்தில் பத்தாம் வகுப்பிற்கு மட்டும் பயிற்சி துவங்கப்பட்டது.
பின்னர் ஒன்பதாம் வகுப்பிற்கும், பத்தாம் வகுப்பிற்கும் பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு முதல் பதினொன்றாம் வகுப்பிற்கும், இவ்வாண்டு முதல் பனிரெண்டாம் வகுப்பிற்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

வருடந்தோறும் சுமார் 60 மாணவர்கள் இதன் மூலம் பயன்பெற்று வருகின்றனர்.

இதன் காரணமாக நமது மாணவர்கள் பத்தாம் வகுப்பு மற்றும் பணிரெண்டாம் வகுப்பில் சிறப்பிடம் பெற்று வருகின்றனர்.
கடந்த ஆண்டு நமது சமுதாய மாணவர்கள் 7 பேர் 400 க்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர்.
இவர்களுக்கான பரிசளிப்பு விழா 25-10-2008 அன்று நடைபெற உள்ளது.

அமீரக நிர்வாகிகல் தமிழகத்திற்கு கோடை விடுமுறையின் போது வந்தால் கோடைப் பயிற்சி முகாம்களுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

வருடந்தோறும் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவ, மாணவியர்க்கு பரிசளிப்பு விழா
மார்க்க போதனை வகுப்புகளில் சிறப்பிடம் பெறுவோருக்கு பரிசளிப்பு
30 நோன்பு நோற்கும் மாணாக்களுக்கு பரிசளிப்பு
உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளின் மூலம் மாணாக்கர்கள் உற்சாகப்படுத்தப்படு வருகின்றனர்.

படிப்புக கட்டணம் மாணாக்கர்களிடம் வாங்குவது இல்லை.
முற்றிலும் இலவசம்.

இதற்கான வருடாந்திர கட்டணம் மட்டும் ரூ. 50 ஆயிரம்
பரிசளிப்பு விழா செலவு சுமார் ரூ. 15 ஆயிரம்

2. வசதியற்ற ஏழை மாணவர் ஒருவரை பொறியியல் படிக்க வைத்தது.

3. ஐ.டி.ஐ. படிக்க வசதியற்ற மாணவருக்கு உதவி

4. பிற சமுதாய அமைப்புகள் மூலம் பொறியியல் படிக்கும் மாணாக்கர்களுக்கு உதவி

5. அமீரகத்தில் எதிர்பாராதவிதமாக இறக்கும் நபர்களை அங்குள்ள இந்திய தூதரகம் உதவியுடன் தாயகத்திற்கு அனுப்புதல் ( சாதி, மத பேதமின்றி )

6. நூலகம் ஏற்படுத்தி செயல்பட்டு வருகிறது.
நூலகத்தில் ஆயிரக்கணக்கான நூல்கள், சஞ்சிகைகள் வருகின்றன.

7. எதிர்காலத்தில் தனிப்பயிற்சிக்கென தனியிடம் வாங்கி அதற்கு கட்டிடம் கட்டுவது. அதனை இஸ்லாமியப் பயிற்சி மையமாக ஆக்குவது

8. www.mudukulathur.com எனும் இணையத்தளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
முதுகுளத்தூர் தொடர்பான தகவல்களைப் பறிமாறிக்கொள்வது.
உலகெங்கிலும் உள்ள முதுகுளத்தூர் வாசிகளை இணையம் மூலம் தகவல் பரிமாற உதவுதல்

9. muduvai@googlegroups.com எனும் மின்னஞ்சல் குழுமம் மூலம் முதுகுளத்தூர் வாசிகளை தொடர்பு கொண்டு பல்வேறு தகவல்களை பரிமாறி வருகிறோம். இதில் இணைய இரும்புவோர் muduvaihidayath@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்ளவும்

10. அமீரகத்திற்கு வேலைவாய்ப்பு தேடி வரும் நமது ஊர் வாசிகளுக்கு உதவுதல்

உள்ளிட்ட பல்வேறு பணிகள்

கல்விப் பணி மூலம் சமுதாய மறுமலர்ச்சியை ஏற்படுத்துவோம்

மிக்க அன்புடன்

முதுவை ஹிதாயத்
பொதுச்செயலாளர்
ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத்
ஐக்கிய அரபு அமீரகம்
00971 50 51 96 433

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *