அஜ்மானில் முதுகுளத்தூர்.காம் மூன்றாம் ஆண்டு துவக்க விழா
அஜ்மான் : அஜ்மானில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் முதுகுளத்தூர்.காம் ( www.mudukulathur.com ) இணையத்தளத்தின் மூன்றாம் ஆண்டு துவக்க விழா ஹமீதியா பூங்காவில் 28.11.2009 சனிக்கிழமை நடைபெற்றது.
துவக்கமாக மார்க்க ஆலோசகர் சீனி நைனார் தாவூதி இறைவசனங்களை ஓதினார். துணைத்தலைவர் சம்சுதீன் தலைமை தாங்கினார். அவர் தனது உரையில் முதுகுளத்தூர்.காம் வலைத்தளம் மூலம் ஆற்றி வரும் பணிகளை விவரித்தார். கல்வி மற்றும் பல்வேறு தகவல்களை உலகெங்கிலும் வாழ்ந்து வரும் முதுகுளத்தூர் வாசிகள் அறிந்து கொள்ளும் வண்ணம் அதனை வடிவமைத்து வருபவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.
பொதுச்செயலாளர் முதுவை ஹிதாயத் வரவேற்புரை நிகழ்த்தினார். தாயகத்திலிருந்து வருகை புரிந்துள்ள ஹபீப் முஹம்மது சாஹிப், நஜுமுதீன், கத்தார் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் ஒருங்கிணைப்பாளர் ஏ. பக்ருதீன் அலி அஹ்மத் உள்ளிட்டோருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
சமீபத்தில் தாயகத்தில் மறைந்த முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் ஜமாஅத்தின் முன்னாள் தலைவர் ஹாஜி என். ஜெய்னுலாபுதீன் அவர்களது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அவர்களது மறுமைப் பேருக்காக துஆச் செய்யப்பட்டது.
அமீர் சுல்தான், அமீனுதீன், பக்ருதீன் அலி அஹ்மது, அஹ்மத் இம்தாதுல்லாஹ், இளங்கொவன் உள்ளிட்ட பலர் பேசினர். பொருளாளர் ஏ. ஜஹாங்கீர் நன்றி கூற விருந்து உபசரிப்புக்குப் பின்னர் விழா இனிதே நிறைவுற்றது.