மணிச்சுடர் முஸ்லிம் லீகின் ஒளிச்சுடர்! – கே.எம்.கே

கட்டுரைகள்

மெட்ராஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் என்னும் பெயரில் நிறுவனம் உருவாக்கி, அதன் சார்பில் மணிச்சுடர்| நாளிதழை தலைவர் சிராஜுல் மீல்லத் அல்ஹாஜ் ஏ.கே.ஏ. அப்துஸ் ஸமது சாஹிப் தொடர்ந்து நடத்தி வந்து, அதனை தமிழக இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் பிரச்சார ஏடாகப் பரிணமிக்கச் செய்துள்ளார்கள்.

1987-ல் ஆரம்பமான மணிச்சுடர்| இத்தனை காலமாகப் பலப்பல ஏற்ற இறக்கங்களைச் சந்தித்துத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. சிராஜுல் மில்லத் அவர்களின் கனவை தமிழக இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் நனவாக்கிக் கொண்டிருக்கிறது.

அப+ர்வ சகோதரர்கள் என்று வர்ணிக்கப்பட்ட டாக்டர் ஷேகு நூருத்தீன், ஹ{சைன் அப்துல் காதர், ஆலிம் செல்வன் ஷம்சுதீன் ஆகிய மூவரும் அவர்கள்தம் அருமைக் குடும்பத்தினரும், மறைந்த தேவிப்பட்டினம் பாருக் சாஹிப் போன்றவர்களும் மெட்ராஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பங்குதாரர்களாக இருந்து உதவி வந்துள்ளனர்.

நிறுவனமும், மணிச்சுடரும் காலப்போக்கில் பல்வேறு சோதனைகளுக்கு ஆட்பட்டபோது, பங்குதாரர்களும், இயக்குநர்களும் 1996-ல் கூடி நிறுவனத்தையும், மணிச்சுடர் நாளேட்டையும் தலைவர் சிராஜுல் மில்லத் அல்ஹாஜ் ஏ.கே.ஏ. அப்துஸ் ஸமத் சாஹிப், அன்றைய தமிழக இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் பொதுச் செயலாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் ஆகிய இருவரிடத்தில் மெட்ராஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் மற்றும் மணிச்சுடர் சம்பந்தப்பட்ட அனைத்து முந்திய பிந்திய கொடுக்கல் வாங்கலுக்கும் இருவர் பொறுப்பேற்க வேண்டும் என்று தீர்மானித்து ஒப்படைத்தனர்.

தலைவர் சிராஜுல் மில்லத் அவர்களின் மறைவுக்குப் பின்னர் அவரின் புதல்வரும், நிறுவன ஸ்தாபகர்களில் ஒருவருமாக இருந்த ஜனாப் ஏ. அப்துல் ஹக்கீம் அவர்களுடைய ஒத்துழைப்போடு இதுகாறும் நிறுவனமும், மணிச்சுடரும் தொடர்ந்து வரப் பாடுபட்டு வந்துள்ளோம். முஸ்லிம் லீகர்களின் முழு ஒத்துழைப்போடும், சமுதாயப் பிரமுகர்களின் ஆதரவோடும் மணிச்சுடர் நாளேடு இதுகாறும் நடந்து வந்திருக்கிறது.

ஜனாப் அப்துல் ஹக்கீம் அவர்கள் திடீரென மரணமெய்திய பிறகு நிறுவனத்தையும், மணிச்சுடரையும் தொடர்ந்து நடத்துவதற்கு புதிய இயக்குநர் குழுமம் உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆகவே, பங்குதாரர்கள் மற்றும் இயக்குநர்கள் பொதுக்குழு கடந்த 6-11-09-ல் மூத்த இயக்குநரும், சமுதாயப் புரவலருமாகிய டாக்டர் ஷேகு நூருதீன் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் பழைய இயக்குநர்கள் குழுமம் முற்றிலுமாகக் கலைக்கப்பட்டு புதிய குழுமம் அமைத்துத் தீர்மானிக்கப்பட்டது. மெட்ராஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனப் பங்குதாரர்கள் யாவரும் முஸ்லிம் லீக் பதிப்பக அறக்கட்டளைக்குத் தங்களின் பங்கு பத்திரங்களை நன்கொடையாக மாற்றிக் கொடுப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. மலையாள நாளிதழ் ~சந்திரிகா|, கேரள மாநில முஸ்லிம் லீக் சார்பில் நடத்துவது போல மெட்ராஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தையும், மணிச்சுடர் நாளேட்டையும் முஸ்லிம் லீகர்களே ஏற்று நடத்துவதற்கு வழி செய்யப்பட்டுள்ளது.. அதன் அடிப் படையில் புதிய இயக்குநர்கள் குழுமம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

மெட்ராஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை இயக்கும் இயக்குநர் குழுவில் கீழ்க்கண்டவர்கள் புதிய பொறுப்புக்களுடன் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

புதிய இயக்குநர்கள் குழுமத்தின் தலைவர் எம். அப்துர் ரஹ்மான் எம்.பி., மணிச்சுடர் நாளேட்டின் அச்சிட்டு வெளியிடுபவர் மற்றும் நிர்வாக இயக்குநர் தமிழ்நாடு மாநில இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அப+பக்கர், மணிச்சுடர் ஆசிரியர், முஸ்லிம் லீகின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், முஸ்லிம் லீக் பொருளாளர் வடக்குக் கோட்டையார் வி.எம். சைஃயது அஹமது, யு.ஏ.இ. காயிதெ மில்லத் பேரவைத் தலைவர் எம். லியாகத் அலி, மகளிர் அணி அமைப்பாளர் ஏ.எஸ். பாத்திமா முஸப்பர், முஸ்லிம் லீக் முன்னாள் பொதுச் செயலாளர் டாக்டர் எஸ்.ஏ. ஹக்கீம் சையத் சத்தார் ஆகியோர் இயக்குநர்களாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள்.

முழுமையாக முஸ்லிம் லீக் சார்பில் பொறுப் பேற்றுள்ள இந்த புதிய இயக்குநர்கள் குழுமம் மணிச்சுடரை பிரபல்யமான பத்திரிகையாக உயர்த்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு பிரைமரி முஸ்லிம் லீகிலும் மணிச்சுடர்| சென்றிட வேண்டும். தமிழகத்தல் உள்ள பதினோராயிரம் மஹல்லா ஜமாஅத்துகள் ஒவ் வொன்றுக்கும் மணிச்சுடர் செல்ல வேண்டும். தமிழகத்தில் உள்ள கல்விச் சாலைகள், அரபி கல்லூரிகள் மற்றும் சமுதாய நிறுவனங்கள் அனைத்திற்கும் மணிச்சுடர் சென்றிட வேண்டும்.

இதற்கு உங்களின் ஒத்துழைப்பும், உதவியும், ஆதரவு மிகமிகத் தேவை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *