வைத்தியம்..!

மருத்துவக்குறிப்புகள்

தீராத விக்கலை நிறுத்த…
1. ஒரு 30 வினாடிகள்…
இரு காது துவாரங்களையும்
விரல்களால் அடைத்துக்கொள்ளுங்கள்…

நின்று போகும் தீராத விக்கல்!
2. ஒரே ஒரு சிறு கரண்டி அளவுக்கு
சர்க்கரையைவாயில் போட்டு
சுவையுங்கள்..

பறந்து போகும் விக்கல்!
கொட்டாவியை நிறுத்த…
கொட்டாவி வருவதற்கான காரணம்: Oxigen பற்றாக்குறை தான்..

அதனால்…

ஒரு நான்கு அல்லது ஐந்து தடவை, நன்கு மூச்சை இழுத்து விடுங்கள்…

கொட்டாவி போய், நன்கு சுறுசுறுப்பாகி
விடுவீர்கள்!
_____________________________________

உடல் துர் நாற்றத்தைப்போக்க…

குளிக்கும் போது…

நீங்கள் குளிக்கும் தண்ணீரில்
ஒரே ஒரு தக்காளிப் பழத்தின் சாற்றினை
கலந்து பிறகு குளிக்கவும்…

அவ்வளவு தான்…

நாள் முழுக்க புத்துணர்வுடன்
திகழ்வீர்கள்!
______________________________________

வாய் துர்நாற்றத்தால் சங்கடமா?
எலுமிச்சை சாற்றில் சிறிது உப்பு  சேர்த்து குடித்து வந்தாலும், வாயைக் கொப்பளித்து வந்தாலும் வாய் துர்நாற்றம் நீங்கும்.
______________________________________

தலைமுடி வயிற்றுக்குள் போய் விட்டதா?
வாழைப்பழத்தினுள் அல்லது வெற்றிலையில் ஒரு நெல்லை வைத்து விழுங்க, முடி வெளியேறி பேதியும் நிற்கும்.
______________________________________

வேனல் கட்டி தொல்லையா?
வெள்ளைப் பூண்டை நசுக்கி சிறிது சுண்ணாம்பு கலந்து கட்டி மீது தடவி வர அது உடையும்.
______________________________________

1) பொன்மேனி தரும் குப்பைமேனி
குப்பை மேனி இலையையும் உப்பையும்
சேர்த்து அரைத்து சொறி, சிரங்குகளுக்குத்
தேய்த்துவர குணமாகும்.

2) தேளை விரட்டும் குடியோட்டிப்பூண்டு
பிரம்மதண்டின் பச்சை வேரைச் சிதைத்து
தேள்கடி வாயில் வைத்துக் கட்ட நஞ்சு நீங்கும்.

3) வயிற்றுவலி போக்கும் நறுவலி
நறுவிலிப்பட்டையை இடித்துச் சாறு பிழிந்து,
தேங்காய்ப் பாலில் கலக்கி குடிக்க கடினமான
வயிற்றுவலி போகும்.

4) காற்று சுத்திகரிப்பான் – சர்க்கரை
சர்க்கரையை நாட்பட்ட நோயாளிகளின்
படுக்கை அறையில் புகைக்க சுத்தக்காற்று
உண்டாகி அறை சுத்தப்படும்.

5) தலைபாரம் நீக்கும் கிராம்பு

கிராம்பை நீர்விட்டு மை போல அரைத்து
நெற்றியிலும் மூக்கு தண்டின் மீதும் பற்றிட
தலைபாரம் நீரேற்றம் குணமாகும்.

6) காயத்துக்கு காட்டாமணக்கு
காயம்பட்டு, இரத்தம் வெளிப்பட்ட இடத்தில்
காட்டாமைக்கு பாலைப் பூச குருதி நிற்கும்.
காயமும் ஆறும்.

7) உப்பலுக்கு உப்பிலாங்கொடி
மாந்தத்தினால் குழந்தைகளின் வயிறு
உப்பிக் காணின், உப்பிலாங்கொடியை
அரையில் கட்டத் தீரும்.

8) குழந்தையை காப்பான் கரிப்பான்

கரிசாலைச் சாறு 2 துளியுடன், 8 துளி தேன்
கலந்து கொடுக்க கைக்குழந்தைகளுக்கு
உண்டாகும் நீர்க்கோவை நீங்கும்.

9) கடலையும் அடிதடியும்
கடலை இலையை வேகவைத்து அடிபட்ட வீக்கம்,
மூட்டுப் பிசகல் முதலியவைகளுக்குச் சூட்டோடு
வைத்துக் கட்ட தீரும்.

10) மயக்கத்துக்கு ஏலம்
ஏலக்காய் 1 பங்கு, பனைவெல்லம் ½ பங்கு சேர்த்து,
எட்டுப்பங்கு நீர்விட்டுக் காய்ச்சி கொடுக்க
பித்த மயக்கம் நீங்கும்.

11) புளியிருக்க புண்ணேது?
புளியிலை, வேப்பிலை இவ்விரண்டையும்
சமஅளவு எடுத்து இடித்து எட்டுபங்கு நீர்விட்டுக்
காய்ச்சி புண்களைக் கழுவி வர, ஆறாத புண்கள்
ஆறும்.

12) பால்கட்டுக்கு பாசிப்பயிறு
பாசிப்பயிறு மாவை வெந்நீர் விட்டுக் களியாகக்
கிளறி மார்பில் பற்றிட பால்கட்டு குறைந்து
வீக்கமும் குறைந்து போகும்.
மார்பின் நெறிக்கட்டிகளும் குறையும்.

13) மயிர்கறுக்க மருதோன்றி
மருதோன்றி இலை, நிலவாரை இரண்டையும்
சேர்த்து அரைத்துப் பூச மயிர் கறுக்கும்.

14) வாந்தி நீக்கும் நெல்லி
நெல்லியீர்க்கு, கருவேம்பீர்க்கு, வேப்பீர்க்கு
மூன்றையும் சேர்த்து இடித்து, நீர்விட்டுக்
காய்ச்சிக் கொடுக்க வாந்தி உடனே நிற்கும்.

15) படர்தாமரைக்கு
அறுகம்புல்லும், மஞ்சளும் சேர்த்து அரைத்து
படர்தாமரையில் பூச தீரும்.

16) பல் ஈறு, வீக்கம், வலிக்கு
கிராம்பு, கற்பூரம், ஓமம் எடுத்து நன்றாகத் தட்டி
வீக்கம் உள்ள ஈறுகளில் வைத்து சிறிது நேரம்
சென்றபின் வாய் கொப்பளிக்க பல் ஈறு, வீக்கம்
தீரும்.

17) மலச்சிக்கலுக்கு
பிஞ்சு கடுக்காய் – 100 கிராம், சுக்கு – 100 கிராம்,
எடுத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *