பத்திரிக்கையின் திருப்பிய பக்கங்களும்,தெலைக்காட்சி சேனல்களும் நம்மையும் அறியாமல் ஒரு செய்தியை நமக்கு கொடுத்துக்கொண்டிருக்கின்றன. நவயுக உலகில் மரணம் என்பது நாம் குடிக்கும் காலை “டீ” க்கு ஒப்பாக்கிக்கொண்டிருக்கிறது என்று.
ஒரு இடத்தில் விபத்து நிகழ்ந்து ஒரு மரணம் ஏற்பட்டால் கூட அது பற்றி பெரிதாக பேசிய காலம் போய் சில நொடிப்பொழுதில் பல்லாயிரக்கணக்கானோர் கை, கால்களை இழுந்து, உயிருக்கு போராடி உயிரைவிடுகிற காட்சிகள் சில வினாடிகளில் நம் தொலைக்காட்சி திரைகளில் தினம்தினம் கரைந்து போகின்றது நம் சிந்தனை கூட அவற்றை தொடுவதில்லை..
சமீபகாலமாக தொடர்ந்து வருகிற மரணச்செய்திகள் யாவும் ஆலிம்கள்,சன்மார்க்கஊழியர்கள், சமூக ஆர்வலர்களைப் பற்றியதாகவே இருப்பது நம்மை மிகப்பெரிய கவலையில் ஆழ்த்துகிறது.
மரணம் என்பது விதிக்கப்பட்ட ஒன்றாக இருந்தாலும் அது மனித வாழ்வில் எப்படி ஆட்கொள்கிறது என்பது பற்றி குர்ஆன் பல விதங்களில் எடுத்துரை பாங்கு அலாதியானது பல்வேறு சமூகத்தருடைய முடிவுகள் எப்படி இருந்தது என்பது பற்றி அறிவிக்கும் குர்ஆன், நமக்கெல்லாம் மிகவும் பரிச்சியமான, குர் ஆனில் அதிகமாக குறிப்பிடப்பட்டுள்ள நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வரலாற்றில் அவர்களின் எதிரியான ஃபிர்அவுனின் சமூகத்திற்க்கு முடிவுரை எழுதிய நிகழ்வை இறைவன் இப்படி வர்ணிக்கிறான்.
அவர்களின் மரணித்திற்க்காக வானமும் அழவில்லை பூமியும் அழவில்லை (துஹான்: 29) என்று கூறி முடிக்கிறான்.
நம் புழக்கபாஷையில் ” உலகமே அழுதுச்சி அவர் இறந்தப்ப” கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அது என்ன வானம் அழுவது பூமி அழுவது??? அப்படி அழுவுமோ!!! அது எப்படி அழுவும்? ஏன் அழுவும்? ஏதற்க்காக அழுவும்…
(இன்ஷாஅல்லாஹ் மலரும்)
உங்கள் சமுதாய ஊழியன்
” ஹஸனீ “