யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸின் சில வெளியீடுகள்
யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்,
2, வடக்கு உஸ்மான் ரோடு,
(கோடம்பாக்கம் மேம்பாலம் அருகில்)
தியாகராய நகர், சென்னை -17.
2834 3385, 94440 47786
நெடுங்காலம் வாழ்வது எப்படி?
ஒருவன் முறைப்படித் தன்னுடைய வேலைகளை வகுத்து, முறைப்படி அவற்றைச் செய்து, முறைப்படி உண்டு, முறைப்படி துயிலெழுந்து வருவானாயின் அவன் நூறு ஆண்டும் வாழலாம். அதற்கு மேலும் வாழலாம். அவ்விதம் வாழ்வதற்கான வழிமுறைகள் பலவற்றை இந்நூலில் எடுத்தியம்பியிள்ளார். பன்னூலாசிரியர் அறிஞர் அப்துற் – றஹீம் அவர்கள்.
குறிப்பிடத்தக்க வாழ்வியல் நூல் ..!
ஆசிரியர்: அப்துற் – றஹீம்
பக்கங்கள்: 136
விலை : ரூ 45/-
இதயத்தின் இரகசியம்
இதயத்தின் இரகசியம் எனும் இந்நூல் அல்லாமா இக்பால் எழுதிய ‘அஸ்ரா ரெகுதி’ என்னும் நூலின் தமிழாக்கமாகும். இக்பால் அவர்கள் தம் குருவான ஜமாலுத்தீன் ரூமியின் மூச்சுக் காற்றிலிருந்து உயிர் பெற்ற தாம் இதுவரை எவரும் கூறாத இரகசியத்தை இந்நூலில் கூறப்போவதாகத் தெரிவிக்கிறார்.
நூல்: முழுக்க ஆழமான தத்துவக் கருத்துகள்.
ஆசிரியர்: அல்லாமா இக்பால்
தமிழாக்கம்: M.R.M. முகம்மது முஸ்தபா
பக்கங்கள்: 144
விலை: ரூ 45/-
மனமே பயமேன்?
நாம் நம் அறிவில் திறனில் நம்பிக்கை கொண்டு எவர் முன்னிலையிலும் தலைநிமிர்ந்து நிற்கலாம். அச்சமோ, நடுக்கமோ அணுவளவும் கொள்ள வேண்டியதில்லை. நாம் பேசுவதற்கோ, நடந்து கொள்வதோ பிறருக்குப் பிடிக்காது என்று ஏன் நாம் எண்ணவேண்டும்? உண்மையில் நாம் கூறிய கருத்துகள் பலரைக் கவர்ந்திருக்கலாம். நாம் நடந்து கொண்ட முறை பலரின் பாராட்டைப் பெறத் தக்கதா யிருக்கலாம்.
தன்னம்பிக்கை ஊட்டும் உற்சாக நூல் ..!
ஆசிரியர்: M.R.M. முகம்மது முஸ்தபா
பக்கங்கள் : 80
விலை : ரூ 25/-
அறிவுச் சுருள்
ஆதரவற்ற எளிய மக்களை வாட்டி வதைக்க வேண்டாம்!
புதைகுழியின் குறுகலைப் பற்றிய அச்சமின்றி கொடுமை யின் கடைப்பக்கம் சாய்ந்துவிடாதே !
மனிதர்களின் இதயங்களிலிருந்து பொங்கி எழும் புகையைப் பொருட்படுத்தாது இருந்துவிடாதே !
அவசரக்காரனே, நீ மனித இனத்தை வாட்டி வதைக்கும் கொடுமைக்காரனாய் ஒருபோதும் இராதே !
ஏனெனில் நீ எதிர்பாராதிருக்கும்போது ஒரே நொடியில் இறைவனின் சினமானது உன்னை மிகைத்து விடும் !
ஏதுமறியா எளியவரைக்
கொடுமைக்குள்ளாக்காதே !
ஏனெனில் நிச்சயமாகக் கொடியவன்
நெருப்பையே அடைவான் !
ஷைகு சஅதியின் ‘பளீர் பளீர்’ வரிகள் ..!
ஆசிரியர்: ஷைகு சஆதி
தமிழாக்கம் : M.R.M. முகம்மது முஸ்தபா
பக்கங்கள் : 64 விலை ரூ 20/-
நான்கு நூல்களும் கிடைக்குமிடம் :
யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்,
2, வடக்கு உஸ்மான் ரோடு,
(கோடம்பாக்கம் மேம்பாலம் அருகில்)
தியாகராய நகர், சென்னை -17.
2834 3385, 94440 47786