சத்தான உணவு உயிர் காக்கும்

மருத்துவக்குறிப்புகள்

பரம்பரைத் தன்மை, சூழ்நிலை, வளர்ச்சியின் அளவு, உணவு ஆகியவற்றைப் பொருத்து ஒருவன் உடல் வளர்ச்சி அமைகிறது. இதில் உணவு முக்கியப் பங்கு வகிக்கிறது.

உண்ணும் உணவில் புரதச் சத்து, மாவுச் சத்து, கொழுப்புச் சத்து, உயிர்ச் சத்துகள், உப்புச் சத்துகள் ஆகியவை இருந்தால்தான் உடலின் வளர்ச்சி முழுமையாக இருக்கும். நன்கு காய்ச்சி வடிகட்டப்பட்ட குடிநீரும் உடலுக்குத் தேவை. அதாவது நாள் ஒன்றுக்குக் குறைந்தபட்சம் 3 லிட்டர் (8 முதல் 10 டம்ளர்) தண்ணீர் தேவை.

மேற்சொன்னவற்றில் புரதச் சத்து உடலை வளர்க்கக் கூடியது. மாவுச் சத்தும் கொழுப்புச் சத்தும் ஆற்றலைத் தரக் கூடியது. உப்புச் சத்துகள், உயிர்ச் சத்துகள் ஆகியவை நோய்கள் வராமல் உடலைப் பாதுகாக்கக் கூடியவை. புரதச் சத்துக்கு உடலைப் பாதுகாக்கும் சக்தி உண்டு.  பால், பருப்பு, மீன், முட்டை, மாமிசம் போன்றவற்றில் வளர்ச்சிக்கு உதவும் புரதச் சத்துகள் உள்ளன.

தானிய வகைகள், உருளைக் கிழங்கு, எண்ணெய், நெய், சர்க்கரை போன்றவற்றில் ஆற்றலைக் கொடுக்கும் கொழுப்புச் சத்துகள் உள்ளன.

பச்சைக் காய்கறிகள், கீரைகள், பழங்கள் ஆகியவற்றில் உடலைப் பாதுகாக்கக் கூடிய உயிர்ச் சத்துகள் உள்ளன. குறிப்பாக கீரைகளில் உடல் இயக்கத்துக்குத் தேவைப்படும் முக்கிய ஊட்டச் சத்துகள் அதிகமாக உள்ளன. அதாவது வைட்டமின் ஏ, வைட்டமின் சி, இரும்பு, சுண்ணாம்பு, ஃபோலிக் அமிலம் ஆகியவை ஏராளமாக உள்ளன. கீரைகளை தானியப் பயறு வகையுடன் (உதாரணம்: பயத்தம் பருப்பு) சேர்த்துச் சமைத்துச் சாப்பிடும் நிலையில் உணவில் உள்ள புரதத்தின் தரத்தை அதிகக்கும்.

எனவே தினச உணவில் அனைத்து விதச் சத்துகளும் (புரதம், கொழுப்பு, உயிர்ச் சத்துகள்-உப்புச் சத்துகள்) ஆகிய அனைத்தும் கலந்திருக்குமாறு பார்த்துக்கொள்வது டாக்டடம் செல்லும் தேவையின்றி உடல் நலனைச் சீராக வைத்துக்கொள்ள உதவும்.

எந்தச் சத்து எந்த உணவுப் பொருளில் உள்ளது, அந்தச் சத்தினால் உடலுக்குக் கிடைக்கும் பலன் ஆகியவை அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன.

சத்து  உணவுப் பொருள் கிடைக்கும் பலன்

வைட்டமின் ஏ  பால், தயிர், வெண்ணெய், நெய், கேரட், பப்பாளி, கீரைகள், மஞ்சள் நிறக் காய்கள், மீன் எண்ணெய், ஈரல். மாலைக் கண் வராமல் தடுக்கும். உடல் செல்களைப் புதுப்பிக்கும். தோல் காக்கும். நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கும்.

வைட்டமின் B1  (தயமின்) பருப்புகள், பயறு வகைகள், முளை கட்டிய தானியங்கள், புழுங்கல் அசி, முட்டை, ஈரல் ஜீரணத்துக்கு உதவும். நன்கு பசி எடுக்கும். நரம்பு மண்டலம் வலுப்படும்.
வைட்டமின் B2  போஃப்ளேவின் பால், வெண்ணெய் எடுக்கப்பட்ட பால், பாலாடைக் கட்டி, முழுத் தானிய வகைகள், பருப்பு வகைகள், கீரைகள், முட்டை. வாய்ப் புண் வராது. தோலில் வெடிப்பு வராமல் தடுக்கும். பார்வை தெளிவாக இருக்கும்

வைட்டமின் சி கொய்யாப் பழம், நெல்லிக்காய், எலுமிச்சை, ஆரஞ்சு, மாம்பழம், தக்காளி, முளை கட்டிய பயறுகள், வெங்காயம், உருளைக் கிழங்கு காயம் விரைவில் ஆற உதவும். எலும்பு முறிவுகள் விரைவில் குணமாகும். நோய்த் தொற்றைத் தடுக்கும். ரத்த நாளங்களை வலுப்படுத்தும். இச் சத்து குறைந்தால் ஈறுகள் வீக்கம் அடைந்து ரத்தம் கசியும்.

வைட்டமின் டி சூய ஒளி, பால், முட்டையின் மஞ்சள் கரு, வெண்ணெய், நெய், பாலாடைக் கட்டி, மீன் எண்ணெய் உடலில் சுண்ணாம்புச் சத்தை கிரகிக்கும். எலும்பு, பற்கள் வலுப்பட உதவும். குழந்தை பிறந்த பிறகு தினமும் சிறிது நேரம் வெயிலில் காண்பிப்பது எலும்புகள் வலுப்பட உதவும்.
வைட்டமின் இ கோதுமை முளை, எண்ணெய், பருத்திக் கொட்டைகள் ரத்த சிவப்பு அணுக்களின் ஆயுளை அதிகக்கிறது. இனப் பெருக்கத்துக்கு உதவும்

வைட்டமின் கே முட்டைக் கோஸ், காலி ஃபிளவர், கீரை, கோதுமை, தவிடு, சோயாபீன்ஸ், முட்டையின் மஞ்சள் கரு ரத்தம் உறைதலுக்கு இது அவசியம் தேவை. இச் சத்து இல்லேயேல் ரத்தப் போக்கு ஏற்படும்
வைட்டமின் நியாசின் மீன்.பருப்புகள், பயறுகள், முழு உணவுத் தானியங்கள், இறைச்சி, ஈரல் வயிறு, குடல், தோல், நரம்பு மண்டலம் ஆகியவற்றின் ஆரோக்கியம் காக்கும்

கால்ஷியம் (சுண்ணாம்புச் சத்து) பால், பால் பொருள்கள், கீரைகள், பீன்ஸ், முட்டை, பட்டாணி, பச்சைக் காய்கறிகள், மீன். எலும்பு, பற்கள் வலுப்பட உதவும். நரம்புகள், தசைகள் இயல்பாக இயங்க இது அவசியம். கர்ப்பிணிகள், முதியோருக்கு இச் சத்து மிகவும் அவசியம்

இரும்புச் சத்து சுண்டைக்காய், கீரைகள், முழுத் தானியங்கள், பேரீச்சை உள்ளிட்ட பழங்கள், வெல்லச் சர்க்கரை, புளி, முட்டை, ஈரல் ரத்த சோகை வராமல் தடுக்க உதவும். புரதத்துடன் சேர்ந்து உயிர் அணுக்களுக்கு ஆக்சிஜன் கொடுக்கும். ரத்த சிவப்பணு உற்பத்திக்கு உதவும்

அயோடின் அயோடின் கலந்த உப்பை தினமும் தவறாமல் சேர்த்துக் கொள்ள வேண்டும். காய்கறிகளிலும் இச் சத்து உள்ளது குழந்தைகளின் முழுமையான வளர்ச்சிக்கு உதவும். இச் சத்துக் குறைபாட்டால் முன் கழுத்துக் கழலை நோய் வரும். தைராய்டு சுரப்பிகள் சவர இயங்க இச் சத்து தேவை

புரதச் சத்து பால், பாலாடைக் கட்டி, எண்ணெய் வித்துக்கள், உணவுத் தானியங்கள், சோயாபீன்ஸ், முட்டை, மீன், இறைச்சி உடலில் நோய்த் தொற்றை எதிர்க்க உதவும். எதிர் உயிகளை உருவாக்கப் பயன்படும். ரத்தம், தசை நார்கள், திசுக்களை வலுப்படுத்தும்

கொழுப்புச் சத்து வெண்ணெய், நெய், முட்டையின் மஞ்சள் கரு, எண்ணெய் வித்துக்கள், மீன், ஈரல் ஆற்றலை அளிக்கும். உயிர்ச் சத்துகள் கரைய உதவும் மாவுச் சத்து உணவுத் தானியங்கள். உருளைக் கிழங்கு, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, மரவள்ளிக் கிழங்கு, சர்க்கரை, வெல்லம். உடலுக்கு ஆற்றலை அளிக்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *