தர்பூசணியை பிழிந்தால் ஓர் சுவையான ஜூஸ் மட்டுமே கிடைக்கும் என்று…

மருத்துவக்குறிப்புகள்

தர்பூசணியை பிழிந்தால் ஓர் சுவையான ஜூஸ் மட்டுமே கிடைக்கும் என்று நினைத்து கொண்டிருந்தவர் எல்லாம், ‘ஐயையோ, இவ்வளவு நாளா இது தெரியாமல் போச்சே…!” என்று அங்கலாய்க்கும் தகவல் இது.

அதாவது, தர்பூசணி பழம் ஓர் இயற்கையான ‘வயாக்ரா’ என்பது தான்.

அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் ஏ&எம் புரூட்ஸ் அண்ட் வெஜிடபிள் இம்ப்ரூவ்மெண்ட் மையத்தின் இயக்குனரான பீமு பாட்டீல் என்ற இந்தியர், இதுகுறித்து மேற்கொண்ட ஆய்வில் பல்வேறு ஆச்சரியமான தகவல்கள் தெரியவந்துள்ளன.

அதன்படி, தர்ப்பூசணியில் உள்ள ஃபைட்டோ – நியூட்ரியன்ட்ஸ் என்ற சத்துக்கள், உடம்பை ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கின்றன.

இதில் உள்ள மூலப்பொருட்கள் ரத்தம் வழியாக சென்று நரம்புகளுக்கு கூடுதல் சக்தியை தருகிறது.

அதாவது, ஒரு வயாக்ரா மாத்திரையில் அடங்கியுள்ள சக்தி, தர்பூசணி பழத்திலும் இருப்பது தெரியவந்துள்ளது.

இது தொடர்பான ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *