நியூயார்க்: தினமும் ஐம்பது கிராம் வேகவைத்த வேர்க் கடலைச் சாப்பிட்டால், இளமையாக இருக்கலாம். நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.நியூயார்க், எல்பாசா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உணவுப் பழக்கம் தொடர்பாக ஓர் ஆய்வு நடத்தினர். அதில் பல்வேறு உணவுப் பொருட்களில் உள்ள பயன்பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட்டது. வேகவைத்த வேர்க்கடலையில், விஷக்கிருமிகளை கொல்லும் ஆற்றல் அதிகமாக இருப்பதாக கண்டறிந்துள்ளனர்.
அன்றாடம் சாப்பிடும் உணவு மற்றும் காய்கறிகள் மூலமாகவும் உயிர்க்கொல்லி நோய்கள் ஏற்படுகின்றன. இது போன்ற விஷக்கிருமிகளோடு போராடும் சக்தி வேர்க்கடலையில் அதிகமாக உள்ளது. தினமும் 50 கிராம் வேகவைத்த வேர்க்கடலையை காலையில் சாப்பிட்டால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அத்துடன் உடல் இளமையோடும் இருக்கும் என்கிறது ஆய்வு