கோடையும் வாடையும்

கவிதைகள் (All)

கோடையும் வாடையும்
வாழ்க்கை பயணத்தின் ஆடை
வடகாற்று வாசனையில்
நம்மனம் தேடுவது ஒடை …
கோடைக்கால மேகத்தில்
ஜாடைத் தேடும் நம்கண்கள்
வாடைகாற்று வீச்சத்தில்
வாடிவிடும்  குடும்பபெண்கள்…
ஏழைகளின் வாழ்க்கையில்
என்றுமே வரட்சியான கோடை
ஏந்தலர்கள் எத்தனித்தால்
ஏழ்மைப் பெற்றிடும் கொடை
பாலைவான மனிதர்களுக்கு
வீசிடும் பாசத்தின் வாடை
ஏற்றமிகு வாழ்க்கைக்கு
இவைகள் இல்லை தடை
உஷ்னத்தில் உருவாகுவது
உயிர்களின் ஊட்டம்
ஆனால்
உக்கிரத்தில் உருகுலைவது
மனித உறவின் ஆட்டம் …
புறத்தேடலில் வீழ்பவனுக்கு
வசந்த காலமும் கோடைதான்
ஆனால்
அகத்தேடலில் முழ்கியவனுக்கு
எக்காலமும் வாடைதான் …

-கிளியனூர் இஸ்மத்
kiliyanurismath@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *