பாண்டியனும், பல்லவனும்,
சேரனும், சோழனும்….
ஆண்டு பார்த்து…..அமிழ்ந்த..
தமிழ் மண் இது……
குற்றமும்…துரோகமும்…
அன்றில்லையா…?
சபித்ததும்…எரித்ததும்..
அன்றில்லையா….?
மோகமும்…..சோகமும்…
அன்றில்லையா…?
கொடிக்காக வாழ்ந்ததும்
அன்றில்லையா…?
பட்டமும்……பதவியும்…
சட்டமும்…..உதவியும்….
நோட்டுப் பறக்கும் முன்னே…..!!
அந்த சீட்டைப் பிடிக்கும் பின்னே ……!!
போட்டி போட்டு வந்தார்….
முன்னோர் வழி சென்றார்……
அன்றில் இருந்து இன்று வரை….
ஏனோ இதயம் மாறவில்லை……
ஆட்சி பேய்க்கு சாக்ஷி யார்..?
அமர்ந்ததும்……..கேட்டவர்……
நீங்கள் யார்..?
உங்கள் உரிமைகளைப்… பறித்து…
அங்கே சுதந்திரமாய்….
சுரண்ட வழி இருக்கு…….
இதில்…….
வறுமைக்கு மட்டுமே….
இந்தியாவில் என்றும்…..
இடம் இருக்கு….!!!!
ஜெயஸ்ரீ ஷங்கர்….
jayashree43@gmail.com