அரசியல்…….

ஆயிரம் வாக்குறுதி அள்ளி வீசி வந்து சேர்ந்தது….நாற்காலி…. பதவி மோகம்…பாரம் ஏற…. பிடித்ததும்…..பறந்தது… வேகமாய்….வாக்குறுதி…… நம்பிய மனங்கள்… நித்தம்..குவிக்கும்… விண்ணப்ப மூட்டைகள்.. நாளை பார்க்கலாம்…என.. நாளும் நகர்ந்தோட….. நாற்காலி வந்த வழி மறக்க….. காற்றுள்ள போதே தூர்க்கும்…குணம்… தூபம் போடும் தோழர்கள் …. பத்து வித மோதிரம்…… புலிநகம் பதித்த சங்கிலி… மின்னும் உடை…மிடுக்கு நடையுமாய்…. கௌரவம் காப்பாற்றி…… சுயநலம் கூத்தாட…… கும்பிட்டுக் கேட்ட ஓட்டு… நிழலாய் மனம் விட்டு நகர….. பதவியின்……இறுமாப்பு……… மனசெல்லாம்  ஆள… படித்துப் […]

Read More

ஏழையின் சிரிப்பில்…!

அனைத்துப் புகழுக்கும் நன்றிக்கும் உரியவனே யா அல்லாஹ்! எச்சில் வாயாலா உனைப் புகழ்வது? பன்மடங்கு புண்ணியமளிக்கும் ரமதானை எமக்குக் கடமையாக்கினாய்! உன் அடியாரின் நல்வினைகட்கு உன் வற்றாத அருட்கொடையால் நிறையாக்கினாய்! பசியறியா திருந்தோரையும் பசியுணர வைத்தாய்! பசித்திருந்தோரையும் நிறைவாய்ப் புசிக்க வைத்தாய்! ஈகையையும் மார்க்கவரியையும் கட்டாயமாக்கி இருப்போரைக் கொடுக்கவைத்தும் இல்லாதோரைப் பெறவைத்தும் களிப்பளித்தாய்! ரமதானை எமக்களித்து வையத்தில் நல் அறத்தைத் தழைக்க வைத்தாய்! ‘ஈகைத் திருநாள்’ மூலம் ஏழையின் சிரிப்பில் உனைக் காணவைத்த எம் இறைவா! அகிலத்தின் […]

Read More

பிரிவு உபசாரம்!!

-இமாம்.கவுஸ் மொய்தீன். வாழ்க்கைப் பயணத்தில் அசாதரணமாக அளிக்கப்படும் கௌரவம்! கொடுப்பவர்கட்கு அது தொடர் பயணம் பெறுபவர்க்கோ பயணத்தில் மாற்றம்! சேவைக்கும் திறமைக்கும் நற்பண்புகட்கும் அளிக்கப்படும் மரியாதை! ஒருவரின் நடத்தை சிறப்பு முக்கியத்துவதின் அளவு கோல்! விலக்கும் தூரம் நெருங்க வைக்கும் அன்பும் பாசமும் நட்பும்! மொத்தத்தில் மனம் ஒப்பாமலேயே கொடுக்கப்படும் பிரியா விடை! Last update : 24-10-2008 15:07 நன்றி: அதிகாலை. அன்புடன், இமாம். http://thamizheamude.blogspot.com/

Read More

பெற்றோர்கள் சிந்தனைக்கு … சில துளிகள் !

வழக்கறிஞர் உதுமான் மைதீன் கல்வி கல்வியின் முக்கியத்துவம் பற்றி அறியாதவர்கள் அகிலத்தில் மிக அரிது. பொதுவாக அனைத்து நாடுகளிலும் கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. இஸ்லாமும் கல்வி கற்பது ஆண் – பெண் ஆகிய இருபாலருக்கும் கட்டாயக் கடமை என்கிறது. தற்போது கல்வியைக் காசு கொடுத்து வாங்கக் கூடிய அளவில் ஒவ்வொரு கல்விக்குமென தனித் தனியான மதிப்பீடுகளை அரசாங்கமும் நிர்ணயித்துள்ளது. அது  போன்றே காசுக்காக பட்டங்கள் வழங்கவும் பல்வேறு பல்கலைக்கழகங்களும் தோன்றியுள்ளன. இவ்வாறு அரசும், தனியார் நிறுவனங்களும் கல்வியைத் […]

Read More

சுதந்திரமாய் சுரண்டல்.!

பாண்டியனும், பல்லவனும், சேரனும், சோழனும்…. ஆண்டு பார்த்து…..அமிழ்ந்த.. தமிழ்  மண்  இது…… குற்றமும்…துரோகமும்… அன்றில்லையா…? சபித்ததும்…எரித்ததும்.. அன்றில்லையா….? மோகமும்…..சோகமும்… அன்றில்லையா…? கொடிக்காக வாழ்ந்ததும் அன்றில்லையா…? பட்டமும்……பதவியும்… சட்டமும்…..உதவியும்…. நோட்டுப் பறக்கும் முன்னே…..!! அந்த சீட்டைப் பிடிக்கும் பின்னே ……!! போட்டி போட்டு வந்தார்…. முன்னோர் வழி  சென்றார்…… அன்றில் இருந்து இன்று வரை…. ஏனோ இதயம் மாறவில்லை…… ஆட்சி பேய்க்கு சாக்ஷி யார்..? அமர்ந்ததும்……..கேட்டவர்…… நீங்கள்  யார்..? உங்கள் உரிமைகளைப்… பறித்து… அங்கே சுதந்திரமாய்…. சுரண்ட வழி […]

Read More

மகிழ்ச்சி – ஒரு கலை …!

மகிழ்ச்சியான, உறுதியான, அமைதியான உள்ளம் தான் அருட்கொடைகளில் மிகவும் உயர்ந்தது. ஏனெனில் உள்ளம் மகிழ்ச்சியாக இருக்கும்போது உறுதியான ஆக்கப்பூர்வமான நல்ல சிந்தனைகள் பிறக்கும். மகிழ்ச்சி என்பது ஒரு கலை. அதைக் கற்றுத்தான் அறிந்து கொள்ள முடியும் என்பவை அறிஞர்களின் கருத்து. எனவே மகிழ்ச்சிக்கலையைக் கற்றவர் மிகச் சிறந்த அருட்கொடையைப் பெற்றவர் ஆகி விடுவார். அவரது வாழ்க்கை மிகவும் ஆனந்தமாக அமையும். மகிழ்ச்சியை எவ்வாறு கற்பது? எதையும் தாங்கும் இதயமும், மன வலிமையும்தான் மகிழ்ச்சியின் ஆணி வேர். எனவே, […]

Read More

ஊடகங்களை வெல்லுவோம் வாருங்கள்!

புகாரியின் புதல்வன் இன்று இன்பர்மேஷன் டெக்னாலஜி என்று சொல்லப்படக்கூடிய ஐ.டி (IT)துறைக்கு நிகராக வருமானத்தை அளிக்கக் கூடிய துறையாக மீடியா துறை (Media) இருந்து வருகிறது. ஆனால் இன்றைய அமெரிக்கா பொருளாதார வீழ்ச்சிக்கு பின்னர் உலகளவிலும் ஐ.டி துறை பின்னடைவு அடைந்திருப்பதையும், பிரபலமான ஐ.டி நிறுவனங்களே தங்களின் ஊழியர்களை அன்றாடம் வெளியே அனுப்பி வருகிறது. ஆனால் அதற்கு பகரமாக ஊடகத்துறையின் வளர்ச்சி ராக்கெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கின்றது. இந்த ஊடகத்துறையின் தொடர்பாக முதலில் என்னென்ன கல்விகள் தமிழகத்தில் […]

Read More

கண்ணியமிக்க ஒரு தலைவர்….

http://quaidemillathforumuae.blogspot.com/ கண்ணியமிக்க ஒரு தலைவர் காயிதெ மில்லத் இஸ்மாயில் நுண்ணிய நெல்லை மாவட்டம் நாட்டுக்களித்த பரிசெனலாம் உறுதி படைத்த நெஞ்சமுடன் உயரிய பண்புகள் பூண்டவராம் இறுதிவரையில் நன்னெறியை இறுகபிடித்த நல்லவராம் தேன்போல் சுவைக்கும் தாய்மொழியாம் தெவிட்டா வளமார் தமிழ்மொழியை மாண்பார்நாட்டின் மொழியாக்க மக்களவையில் மொழிந்தவராம் கூட்டம் ஒன்றில் உரையாற்ற கோழிக்கோடு நகருக்கு நாட்டம் கொண்டு, சென்றாராம் நண்பர் பலரை கண்டாராம் மாசறுதலைவரை வரவேற்க்க மாளிகை பலவும் காத்திருக்க பாசமுடன் ஒரு விடுதிக்கு பரிவாய் சென்றே உறைந்தாராம் தனியறை […]

Read More