ச‌ம‌வுரிமை மாத‌ இத‌ழ்

“தாடிக்குத் தடை”, “கஅபாவுக்குள் பெண்கள் வரத்தடை” என்ற துடிப்பான செய்திகளை அறிமுகப்படுத்தி எழுத்துலகில் முகம் திறந்து மலர்ந்திருக்கிறது “சமவுரிமை” மாத இதழ். அல்ஹம்துலில்லாஹ். “ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுப்பது எப்படி?” என்ற நபிவழியைத் திறந்து வைத்து ஜெயிக்கப் போவது யாரு? என்று இந்திய அரசியலை இலேசாக விரல் விட்டுக் கிண்டி இருப்பது எடுத்து வைக்கும் அடி எத்தனை இதயங்களை இடித்துரைக்கப் போகிறதோ? என்று எதிர்பார்க்கத் தோணுகிறது. தகுதியான ஆசிரியர் குழுவைக் கொண்டு தடம் போட்டு வைத்திருக்கும் ‘சமவுரிமை’ புடம் போட்டெடுத்துச் […]

Read More

தமிழே என்னை…?

ஓ! இயற்கையே! என் ஆயுளை இன்னும் அதிகப்படுத்து! வாழ்வில் செல்வம் சேர்க்க அல்ல! செந்தமிழைக் காக்க! என் சின்ன விரல்களே இன்னும் உறுதிப்படுங்கள்! உங்களை ஊன்றி நான் எழ அல்ல! உயிர்த் தமிழை எழுதத்தான்! கற்பனைகளே நீங்கள் ஒரு முகப்படுங்கள்! உங்களின் ஒருமுகத்தால் தமிழின் திருமுகத்தை அலங்கரிக்கத்தான்! அன்னைத் தமிழே! உன்னை எனக்கு அடையாளம் தெரியும்! என்னைப் பிறர்க்கு அடையாளம் காட்ட காலக் கரங்களில் என்னை நீ ஒப்படைப்பாயா? – நன்றி மஞ்சை மயிலன் ஐயா அவர்களுக்கு!!!

Read More

அல்லாஹ்வின் உதவிப்படை

அர்ரஹ்மானைத் தவிர உங்களுக்கு (உதவிப்) படையாக இருந்து உங்களுக்கு உதவி செய்கின்றவர் யார்? அல்குர்ஆன் 67:20 “ஸுரத்துல் முல்க்” என்ற அத்தியாயம் இறைவனது ஆட்சியின் வல்லமையை விவரிக்கிறது. ஓர் உருதுக் கவிஞன் நான் இவ்வுலகை வலம் வந்தேன். இவ்வுலகம் அழகானது. அருமையானது. நேர்த்தியானது. ஆனாலும் கவலையற்ற ஒரு மனிதனையும் நான் காணவில்லை என்று கூறுகிறான். வயிற்றுக்குச் சோறில்லை. கூழுக்கு உப்பில்லை என வறுமையில் வாடுபவரும் மூக்கு முட்ட சாப்பிட்டதால் வயிற்றுக்குச் சரியில்லை, பாலுக்குச் சர்க்கரை இல்லை என […]

Read More