வைகறை வெளிச்சம்|| பத்திரிகைக்கு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி. பேட்டி
http://www.muslimleaguetn.com/news.asp
வைகறை : கடந்த ஐந்தாண்டு காலம் பாராளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளீர்கள். உங்கள் பணிகள் உங்களுக்கு திருப்தியைத் தருகிறதா?
பேராசிரியர் : என் பணிகளை நான்கு வகையாகப் பிரித்துப் பார்க்கிறேன். என் தொகுதி என் சமுதாயம் என் மாநிலம் என் தேசம் இவற்றுக்கு நான் நினைத்த அளவுக்கு 100 சதவீதம் சேவை செய்திட இயலவில்லை என்றொரு மனக்குறை எனக்குண்டு.
என் தொகுதியில் (வேலூரில்) 15 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை முஸ்லிம்களும்þ 60 சதவீதம் வரை இந்து சமுதாயமும்þ 20 சதவீதம் கிறிஸ்தவ சமுதாயமும் வாழ்கின்றனர். தமிழ் உர்தூ தெலுங்கு கன்னடம் ஆகிய மொழிகள் பேசும் மக்கள் சமூக உணர்வுடன் வாழ்ந்து வருகின்றனர்.
என் தொகுதியில் மத நல்லிணக்கத்தைக் கட்டிக் காத்தேன். வேலூர் காட்பாடி இடையிலான பாலாற்றின் பழுதடைந்த பாலத்தை 18 கோடி செலவில் புதிதாக கட்டிட ஏற்பாடு செய்தேன். வேலூர் கோட்டை அருகே ஓர் அழகான பூங்கா தயாராகிக் கொண்டிருக்கிறது.
ஒரு அலுவலகம் திறந்து மக்கள் கோரிக்கைகளை கேட்டறிந்தேன். நூற்றுக்கணக்கானோருக்கு இருதய அறுவை சிகிச்சைக்கு பிரதமர் நிதியிலிருந்து பணம் கிடைத்திட வழி செய்தேன்.
பள்ளிக் கூடங்களுக்கு கட்டிடங்களை கட்டித் தந்துள்ளேன். இன்னும் பல….
வைகறை – பாராளுமன்றத்தில் முஸ்லிம் சமுதாயத்தின் பிரச்சினைகள் குறித்து எத்தனை முறை உரையாற்றியிருக்கிறீர்கள்?
பேராசிரியர் : பாராளுமன்றத்தில் தி.மு.க. உறுப்பினர்கள் பேசுவதற்காக ஒதுக்கப்படும் நேரங்களில் கொறடா அனுமதியளிக்கும் போது தான் நான் பேச முடியும். இது பாராளுமன்ற விதி. அப்படியிருந்தும் முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு மதரஸாக்களில் தீவிரவாதப் பயிற்சி நடப்பதாக கூறப்படும் அவதூறு அஸ்ஸாமில் பங்களாதேஷ்களின் ஊடுருவல் பாபரி மஸ்ஜித் பிரச்சினை ஆகியவற்றில் சமுதாயத்தின் கருத்துக்களை உறுதியாகப் பேசியுள் ளேன். மதரஸாக்கள் மீது அவதூறு கூறும் பா.ஜ.க.வினர் மதரஸாக்களுக்கு வந்து பாருங்கள் என்று கூறினேன். என் கருத்தை பா.ஜ.க.வினரே ஏற்றுக் கொண்டனர். சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களுக்கு அரசு உதவி குறித்த மசோதாவில் நான்தான் பேசினேன்.
வைகறை : முஸ்லிம் லீக் தலைவர் என்ற முறையில் பாராளுமன்றத்துக்கு வெளியில் தாங்கள் ஆற்றிய பணிகள்…?
பேராசிரியர் : டெல்லி பாட்லா ஹவுஸ் படுகொலை கள் பற்றி அறிந்திட நானும் இ. அஹமது அவர்களும் நேரடியாக அங்கு சென்றோம். அலிகர் பல்கலையின் மாணவர்கள் தீவிரவாதிகளல்ல. அங்கு நடந்தது போலி என்கவுண்டர்தான் என்பதை ஆய்ந்தறிந்து சோனியாவிடம் அறிக்கையாகத் தந்தோம். இந்துத்துவ அமைப்பினர் குண்டு தயாரிக்கும் போது அவை வெடித்துள்ள சம்பவங்களையும் அவரிடம் சுட்டிக் காட்டினோம். முஸ்லிம்கள் உண்மைக் குற்றவாளிகள் அல்ல என அழுத்தமாக வாதிட்டோம்.
இதன் பின்னர் மாலிகோன் குண்டுவெடிப்பின் பின்னணியில் இந்துதுவ அமைப்புக்களின் கை இருப்பது வெளிச்சத்துக்கு வந்தது. அரசின் கவனத்தை இந்துத்துவ அமைப்புகளை நோக்கித் திருப்பினோம்.
வைகறை : மாலிகோன் குண்டு வெடிப்புக்களை செய்த சாமியார்களை துணிச்சலாக கைது செய்த போலீஸ் அதிகாரி ஹேமந்த்கர்கரே கொல்லப்பட்ட பின்னணி பற்றி பாராளுமன்றத் தில் பெரும் விவாதம் எழுந்தபோது முஸ்லிம் லீக் எதுவும் பேசவில்லை என்றொரு குற்றச்சாட்டு உங்கள் மீது….
பேராசிரியர் : நடுவண் அரசே அந்த விவாதத்தில் இந்துத்துவ அமைப்புக்களுடன் நேரடியாக இறங்கிய பின்னர் நான் தனியாகப் பேசிட அங்கே எதுவுமில்லை.
வைகறை : இந்திய அரசு அமெரிக்காவுடன் செய்து கொண்ட 123 ஒப்பந்தம் பற்றி உங்கள் கருத்து என்ன?
பேராசிரியர் : அது தேச நலனுக்கோþ முஸ்லிம் களின் நலனுக்கோ எதிரானதல்ல. முஸ்லிம் லீகின் கேரள மாநில செயற்குழுவில் இதுகுறித்து ஆழமாக விவாதித்தோம். எங்கள் கட்சியின் முக்கியப் பொறுப்பாளர்கள் இந்த அணு சக்தி ஒப்பந்தத்தை எதர்த்து வெளியுறவுத் துறை துணை அமைச்சர் பொறப்பிலிந்து அஹ்மது விலக வேண்டும் என் வாதிட்டனர்.
நான் அதற்கு விளக்கமளித்தேன். மத்திய அரசு எங்களிடம் கூறியுள்ள விளக்கம் திருப்தியளிக்கிறது. வீணாக ஒரு அமைச்சரை நாம் இழக்க வேண்டாம். நமது ஐயங்களை அரசிடம் தெரிவிப்போம். இது ஒரு வியாபார ஒப்பந்தம்தான். மின் உற்பத்தியில் நாடு வளம் பெற்றிடும் வாய்ப்பைத் தரும் ஒப்பந்தம் தான் என தெளிவுபடுத்தினேன்.
அணுசக்தி ஒப்பந்தத்தை இடதுசாரிகள் எதிர்ப்பது அரசியல் நலனுக்காக தேச நலனுக்காக அல்ல. இடது சாரிகள் முஸ்லிம்களின் நலனில் அக்கறையற்றவர்கள்.
வைகறை : நடுவண் அரசின் ஐந்தாண்டு காலப் பணிகள் உங்களுக்கு திருப்தி அளிக்கிறதா?
பேராசிரியர் : திருப்திதான். அரசு மீது பெரிய குறை எதையும் கூற முடியாது. நாங்கள் முப்பத்தாறு முஸ்லிம் எம்.பி.க்களும் ஒன்றாகச் சேர்ந்து பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து சமுதாய நலன் காக்கும் பதிமூன்று கோரிக்கைகளை முன் வைத்தோம். அதில் ஆறை உடனடியாக அவர் ஏற்றுக் கொண்டார்.
முஸ்லிம்களின் சமூக பொருளாதார நிலையைக் கண்டறிந்திட கமிஷன் அமைத்தல்þ உர்தூ மொழி மேம்பாடு நடுவண் அரசின் பட்ஜெட்டில் முஸ்லிம் களின் நலனுக்கென 15 சதவீத ஒதுக்குதல் மதக்கலவரங்களில் கொல்லப்படுவோரின் வாரிசுகளுக்கு ஐந்து லட்சம் இழப்பீடு வழங்குதல் முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடுþ முஸ்லிம் கல்வி நிறுவனங்கள் மேம்பாடு ஆகியவற்றை அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.
இது முஸ்லிம்கள் மீது வெறுப்பை உமிழும் அரசல்ல. நம் கோரிக்கைகளை கனிவோடு கேட்கும் அரசு.
வைகறை : இஸ்லாமின் கேந்திரங்களான மதரஸாக்கள் மீது அரசின் பார்வை எப்படி இருக்கிறது?
பேராசிரியர் : மதரஸாவில் வழங்கப்படும் ஹஸனது|களை னுநபசநந யாக அங்கீகரித்து ஆலிம்கள் அரசு வேலை பெற்றிட அரசு வாய்ப்பு ஏற்படுத்தித் தந்துள்ளது. உலகக் கல்வியையும்þ மார்க்கக் கல்வியை யும் ஒரே இடத்தில் கற்கலாம். இந்த கல்வி நிறுவனங் களுக்கு அரசின் உதவியை அபுல் கலாம் ஆசாத் பவுண் டேஷன் வழியாகப் பெறலாம்.
வைகறை : இதில் ஆலிம்கள் பலமான ஐயமொன்றை எழுப்புகின்றனர்.
பேராசிரியர் : சொல்லுங்கள்….
வைகறை : இப்படிப் போனால் மதரஸாக்கள் அரசின் நிர்ப்பந்தத்துக்கு அடிபணிந்திட வேண்டிய அவசியம் வந்து விடுமோ என்ற ஐயம்தான்.
பேராசிரியர் : தீனின் காவலர்கள் ஆலிம்கள். அவர் களின் ஐயங்களைப் போக்குவது அரசின் கடமை. நான் ; Madrasa Educatibn f;\bard d; Brder CbaPy ஐ தருகிறேன். அதை நன்றாக படித்துப் பாருங்கள். அதன் ஆட்சேபணைக்குரிய பகுதிகளைக் கூறுங்கள். அரசிடம் அதை தெரிவிப்போம். தெளிவைப் பெறுவோம்.
வைகறை : நீங்கள் வேலூர் R.S.S. அலுவலகத்தில் நடந்த விழா ஒன்றில் பங்கேற்று அங்கே வந்தே மாதரம் பாடலையும் பாடியதாக ஒரு செய்தி உலா வருகிறதே…?
பேராசிரியர் : வங்காளத்தின் முஸ்லிம் அரசுக்கு எதிராக இந்துக்கள் செய்யும் கிளர்ச்சியின் போது கிளர்ச்சியாளர்கள் வந்தே மாதரம் பாடலைப் பாடியதாக பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய ஆனந்த மடம் நாவல் கூறுகிறது. அந்தப் பாடலில் சர்ச்சைக்குரிய பகுதிகள் இருக்கின்றன. அதில் சந்தேகமில்லை
பாராளுமன்ற கூட்டம் தொடங்கும் போது ஜன கன பாடலும்þ நிறைவுறும்போது வந்தே மாதரமும் பாடப்பட்டு வருகிறது. இது சர்ச்சைக்குரிய பகுதி நீக்கப் பட்ட பாடல். இதை எல்லா எம்.பி.க்களும் பாடுகின்றனர்.
வந்தே மாதரம் பாடலின் நூற்றாண்டுக் கொண்டாட்டம் வேலூரில் நடைபெற்றது. இதை நடத்தியவர்கள் இந்துத்துவ அமைப்பினர். ஒரு பொது இடத்தில் இவ் விழா நடத்தப்படுவதை அறிந்த சிலர் அங்கு பிரச்சினை செய்திட வருவதாக கேள்விப்பட்டு நான் அங்கு சென்றேன். விழாவில் வந்தே மாதரம் பாடல் பற்றிப் பேசினேன். அதன் சுருக்கப்பட்ட சர்ச்சைக்கு இடமளிக்காத பகுதிகளைப் பாடினேன்.
எங்கள் தலைவர் பனாத்வாலா இது பற்றி என்னிடம் விளக்கம் கேட்டார். பாராளுமன்றக் கூட்ட நிறைவில் பாடப்படும் பகுதிகளை நான் பாடியதாக உண்மையைக் கூறினேன். அவர் புரிந்து கொண்டார். இதில் தவறேதும் இல்லை.
பிரச்சினையைத் தவிர்ப்பதற்காக அங்கு சென்ற என்னையே பிரச்சினைக்குரியவராக்கி விட்டனர் சிலர்.
வைகறை : நீங்கள் ஒரு சாமியாரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றதாக தினமலரில் செய்தி வந்ததாமே..?
பேராசிரியர் : என் தொகுதியில் சக்தி மாரியம்மன் கோவில் ஒன்று உள்ளது. மிகப் பெரிய பரப்பளவில் அமைந்துள்ள அக் கோவிலின் சாமியார் அங்கு ஒரு மருத்துவமனை கட்டிþ அதன் திறப்பு விழாவுக்கு என்னை அழைத்திருந்தார். நான் சென்றிருந்தேன். அவர் அருகில் தரையில் அமர்ந்திருந்தேன். அப்பொழுது அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் பாண்டுரங்கன் வந்தார். சாமியாரின் காலில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்தார். சரி. நாம் கிளம்பு வோம் என்றெண்ணி எழ முற்பேட்டேன். முதலில் இரு கைகளையும் ஊன்றித்தான் என்னால் எழ முடியும். எனக்கு முழங்கால் வலி உண்டு.
நான் தரையிலிருந்து எழும்போது முதலில் இரு கைகளையும் ஊன்றி எழ முற்படவும் (அதேபோல செய்து காட்டுகிறார்) பாண்டுரங்கனை போட்டோ எடுத்த தினமலர் நிருபரின் கேமரா|வில் நானும் விழுந்து விட்டேன். இதுதான் நடந்தது. மறுநாள் தினமலரில் நானும் ஆசி பெற்றதாக செய்தி வந்தது.
வைகறை : தினமலரின் விஷமத்தனத்துக்கு நீங்கள் மறுப்பு ஏதும் தெரிவிக்கவில்லையா?
பேராசிரியர் : இல்லை. சாமியாரின் (மக்கள் தொடர்புச் செயலாளர்) ஞ.சு.டீ. வே தினமலர் நிருபரை நேரில் அழைத்து கண்டித்து விட்டார். இதை சிலர் தவறாகப் பிரச்சாரம் செய்கிறார்கள்.
இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி. கூறினார்.
பேட்டியின் போது துபை அப்துர் ரஹ்மான் காயல் அபூபக்கர் மற்றும் பலர் உடனிருந்தனர்.
சந்திப்பு – ரியாஜி
நன்றி வைகறை வெளிச்சம்| – ஏப்ரல் 2009.