மாறாத சொந்தம் !
கவிஞர் ஏம்பல் தஜம்முல் முஹம்மது, புதுக்கோட்டை சிந்தனையில் தேன் சுரக்க செந்தமிழின் மேலினிக்க வந்தருளும் நாயகமே வழிபார்க்கும் வையகமே! முன்யாரும் கண்டதுண்டா முஹம்மதரைப் போன்றவரை? பின்னேனும் அவர்போலாம் பேறுடையார் எவருமுண்டா? ஓரழகு! சீரழகு! ஒப்பில்லாப் பேரழகு! யாரழகு முஹம்மதினும் – யாதான போதிலுமே? சொல்லழகு செயலழகு சோர்வறியாத திறமழகு! நல்லழகு மாதிரிபோல் நானிலத்தில் ஏதழகு? பொறுமைக்கோர் இலக்கணமாய், புகழுக்கும் இலக்கியமாய் வறுமையிலும் செம்மையுடன் வழிகாட்டும் வாழ்வழகு! புண்சிரிப்போ முழுநிலவு! பூப்போன்ற மென்மைமுகம்! கண்பார்வை, அருள்வெள்ளம் காண்பவர்கள் தமைவெல்லும்! […]
Read More