உயிர்க் கப்பல்!

பரந்தமணற் பெருங்கடலில் பயணம் செல்லும் கப்பல் – இது பக்குவமாய் உயர் முதுகில் பாரம் சுமக்கும் கப்பல்! வறட்சி மிகு நீரிலாவனத்தில் போகுங் கப்பல் – இது வாலும் முதுகும் கால்கள் நான்கும் வாய்த்திருக்கும் கப்பல்! நீர்குடிக்க வாய்ப்பிருந்தால் நிறையக் குடிக்கும் கப்பல் – மிக நெடும் பொழுது தாகம் தாங்கி நிற்கும் உயிர்க் கப்பல்! பார் முழுதும் உள்ள மக்கள் பார்த்து வியக்கும் கப்பல் – இது பாதம் மணலில் புதைந்திடாமல் பாங்காய்ப் போகும் கப்பல்! […]

Read More

இது பரீட்சைக் காலம்

அமைதியான இரவு நேரத்தில், மழை ஓய்ந்து கூரையிலிருந்து சொட்டு சொட்டாக வடிந்த மழை நீர், உடம்பில் ஓர் இதமான சுகத்தைக் கொடுத்தது. நாளைய பரீட்சைக்காகப் படித்து ஓய்ந்து போன மன்சூருக்கு மனதில் சற்று குளிர்ச்சியைத் தந்தது. இருப்பினும் இன்றைய பரீட்சை சரியாக எழுதவில்லையே என்ற வருத்தம் மனதை உறுத்திக்கொண்டே இருந்தது. ஆறுதல் சொல்லுவதற்கு அம்மா தற்போது வீட்டில் இல்லை. அக்காளின் பிரசவத்திற்காக பட்டுக்கோட்டை சென்றவர்கள் திரும்பி வர இன்னும் இரண்டு நாளாவது ஆகும்.  சிறிது ஓய்வுக்குப் பிறகு […]

Read More

வாழ்க்கை

வாழ்க்கை இதன் அர்த்தம்தான் என்ன? ஜனனம், மரணத்தை நோக்கி மெல்ல நகர்கிறதே.. அதுதான் வாழ்க்கையா? உறக்கத்தில் கூட சுவாசிக்கிறானே மனிதன்..! சுவாசிப்பதுதான் வாழ்க்கையா? பசியை போக்க பத்தும் செய்கிறானே.. எனின்.. புசிப்பதுதான் வாழ்க்கையா? “கடலைக் கடப்பேன்.. நெருப்பில் நடப்பேன்.. நினைவில் மட்டும் நீயிருந்தால்.. ஏவுகணைகளையும் எதிர்த்திடுவேன்..” பொய்யாய் புலம்புகிறானே காதலன்.. காதல்தான் வாழ்க்கையா?? தீமை செய்யாதே.. இறந்தால் நரகம்! நன்மை செய்.. செத்தால் சொர்கம்! ஆயின்.. வாழ்க்கை மரணத்தில் மட்டுமே விளங்குமா…?!! எது வாழ்க்கை..? விவாதிப்பதில் விருப்பமில்லை […]

Read More

பூர்வீகம்

பூர்வீகம் இது பலருக்கும் புரிய முடியா ஒரு கார் மேகம் கார் மேகம் இதை பூக்களிடம் கேட்டால் அதில் இல்லை தார்மீகம் பூக்களுக்கும் உண்டு பூர்வீகம் மாக்களுக்கும் உண்டு பூர்வீகம் ஆனால் மக்களுக்கு மட்டுமே இதை அறிவது ஆன்மிகம் பூர்வீகம் அறியப் போகும் அறியுகம் வெகு தூரம் இல்லை அந்த புது யுகம் பூர்வீகம் அதை அறிவதே தெய்வீகம் புறப்பட்ட இடம் புரிந்து கொண்டால் புலரும் ஒரு புது சுகம.; -ராஜா கமால்-

Read More

பூசை

உண்மையை  விட்டு  விட்டு பொய்க்கு  பூசை நடக்கிறது அங்கே கால்களை இழந்து விட்டு பாத யாத்திரை போகிறது ஒரு  கூட்டம் வேல்கள் எல்லாம் வாள்களாக மாறி மார்பில் பாய்கிறது நிஜதுக்கு சமாதி  நிழலுக்கு வழிபாடு அவர்கள் இடித்தது மசூதி அல்ல மனிதம் மனிதத்தை அழித்து விட்டு மதம் வளர்கும் மாமனிதர்கள் இவர்கள் சொல்கிறார்கள் நாங்கள் இந்தியர்கள் என்று பிறகு நாங்கள் யார் விடை தருமா இந்த தேசம் – ராஜா கமல் rajakml@yahoo.com

Read More

எது வேண்டும் சொல் மனமே – 90/10 கொள்கை

நம்முடைய தினசரி வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளை நாம் எதிர்கொள்ளும் விதத்தை இந்தக் கட்டுரை மாற்றிவிடும் . அப்படி இந்தக் கொள்கையில் என்னதான் இருக்கிறது? உங்களது வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்களில் 10% இயற்கையாக நடப்பவை. மீதி 90% உங்களால் நிச்சயிக்கப்படுபவை. எப்படி? மேற்கொண்டு படியுங்கள் . உண்மையாகவே நமக்கு நடக்கும் சம்பவங்களில் 10% நம் கட்டுப்பாட்டில் இருப்பதில்லை. உதாரணமாக: ஓடிக்கொண்டிருக்கும் நம் வாகனம் திடீரெனப் பழுதாகி நின்றுவிடாமலிருக்க நம்மால் ஏதாவது செய்ய முடியுமா? தாமதமாகச் சென்றடையும் விமானத்தாலும், ரயிலாலும், […]

Read More

பெரிய புராணம் முழுமைக்கும் குரலிசைப் பதிவு தொடங்கியது

வணக்கம். தேவாரம் மின்னம்பல தளத்தில் ((www.thevaaram.org) பன்னிரு திருமுறைப் பாடல் ஒவ்வொன்றுக்கும் இசை வடிவம் சேர்க்க முயன்று வருவதை நீங்கள் அறிவீர்கள். உலகெங்கும் வாழும் தமிழர் 18,246 பாடல்களை இசையாகவும் கேட்டுப் பயனுற வேண்டும். எட்டாம் திருமுறை திருவாசகம் முழுவதையும் (658 பாடல்கள்) குரலிசையாக www.thevaaram.org மின்னம்பல தளத்தில் கேட்கலாம். பதினொன்றாம் திருமுறையில் உள்ள 1,385 பாடல்களில் 392 பாடல்களைக்  குரலிசையாக www.thevaaram.org மின்னம்பல தளத்தில் கேட்கலாம். ஏனைய பாடல்களுக்குக் குரலிசைவடிவம் சேர்க்கும் முயற்சியில் பன்னிரண்டாம் திருமுறையின் […]

Read More