உலகின் அடிமைத்தளமே!!

அடித்தளமே! உலகின் அடிமைத்தளமே! படைத்தவன் வணங்கிடும் பொருளே!! சிலருக்கு பாரமாய் பலருக்கு தூரமாய் நிலையற்ற ஓரு உலகே! உன்னுடைய அணைப்பினால் மகிழ்வை நீ கொடுத்திடுவாய் உணர்வற்ற ஓர் துணையே! தன் மதிப்பினால் பிறர் மதிப்பை ஏற்றி இறக்கி உலகை ஆளும் இருமுகனே!! இரண்டாக கிழிந்தாலும் குப்பையில் கிடந்தாலும் அழகாய் தெரியும் காகிதத் தாளே!! முதலும் இல்லை முடிவும் இல்லை உன்னைப்பற்றி எழுதிவிட!! – ஷேக் இப்ராஹிம் shaikamjath0012@gmail.com

Read More

விடுப்பில் செல்பவன் இதயம் சுமையாகும்

நாடும் பொழுது பக்குவமாய் வந்து நின்றிடும் குடும்ப நினைவும் குழந்தைகள் முகமும் மாதம் முதல் தேதி என்றால் தொலைபேசிக்கு முதலிடம் அங்கு பேசினால் காசு கரைகிறது பேசாவிட்டால் இதயம் கரைகிறது சோதனையின் சொந்தக்காரர்கள் நாங்கள் வேதனையின் மொத்த குத்தகைக்காரர்கள் மூன்று ஆண்டுகள் கழிந்தால் மூன்று மாத விடுமுறை அவை விடுமுறை அல்ல ஆயுள் கைதிகளின் பரோல்கள் பிரயான தேதி நெருங்கிவிட்டால் பித்தான நெஞ்சம் தொலைப்பது மிச்சம் மீதி இருந்த கண் தூக்கத்தை மலை ஏறுபவன் இதயம் இலேசாகும் […]

Read More

அமெரிக்கச் சீரழிவுக் கலாச்சாரத்தால் விழுங்க முடியாத ஒரே ஒரு கலாச்சாரம் இஸ்லாமியக் கலாச்சாரம்தான்

இந்தக் கட்டுரை உலக “மனிதனே” இசுலாத்தின் சாரம் என்ற தலைப்பில் 10/03/2009 அன்று திணமனியில் சிறப்புக்கட்டுரை பகுதியில் வெளிவந்தவை. அப்படியே தந்துள்ளோம். மேற்கு ஆசியாவில் மெக்கா என்னும் நகரம் ஏற்கெனவே அறியப்பட்ட நகரம்தான். ஆனால் கி.பி. 570-ல் அங்கே நிகழ்ந்த ஒரு பெருமகனாரின் பிறப்பு அந்த நகரம் புனிதப்படக் காரணமாயிற்று. உலகம் முழுவதிலுமுள்ள கோடானுகோடி இஸ்லாமியர்கள் தாங்கள் பிறந்த நாடு, பிறந்த ஊர் எதுவாயினும் ஒவ்வொரு நாளும் ஐந்துமுறை கபாஅவை முன்னிறுத்தி, அந்த நகரம் இருக்கும் திக்கு […]

Read More

மிலாது நபித் திருநாள்!

பா. ஹாஜி முஹம்மது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த தினம், மிலாது நபி என்ற பெயரில் கொண்டாடப்படுகின்றது. இவ்வருடம் அண்ணலாரின் உதயதினம், வரும் 10.3.09ல் அமைகின்றது. நபியவர்கள் (ஸல்), தான் வாழ்ந்த காலத்தில் தனது பிறந்த நாள் என்று குறிப்பிட்டு விசேஷமான நிகழ்ச்சிகள் ஏதும் நடத்தவில்லை என்பதும், அதேபோல் அக்கால மக்களையும், அந்நாளில் ஏதும் செய்ய வேண்டாம் என்று கூறியதாகவும் கற்றறிந்த அறிஞர்கள் மற்றும் வரலாற்றின் வாயிலாக அறியப்படுகின்றது. எது எப்படி இருப்பினும், மூடப் பழக்க […]

Read More

வாழ்க்கை

வாழ்க்கை உண்டு களித்து உலுத்து போவது உண்மை என்ற போதிலும் கொண்டு வந்ததும் கொண்டு போவதும் ஒன்றுமில்லை என்ற போதிலும் வாழ்கை பல நூறுஆண்டுகள் இங்கு இல்லை என்ற போதிலும் எத்தனை ஆசை இந்த வெற்று வாழ்கையிலே உண்டு சுவைக்கவும் கண்டு மகிழவும் கேட்டு இன்பம் கோடி பெற கடலளவு உண்டு என்ற போதிலும் அத்தனையும் கொண்டு மகிழ்திட மட்டு ஒன்று உண்டு என்று மனம் அறிந்த போதிலும் எத்தனை ஆசை இந்த வெற்று வாழ்கையிலே ஆண்டியாய் […]

Read More

குறைகள்..

அது இல்லாமல் இருக்க நாம்.. இறையும் அல்ல.. அதைச் சுட்டுபவர்கள் நக்கீரர்களும் அல்ல..! குறைகளை களையவே மனிதப் பிறப்பு.. குறைகளை களைந்துவிட்டால் இனி ஏது பிறப்பு..?? இங்கே.. யாருக்கு இல்லை குறை..? குறையுள்ளவந்தானே நிறையைத் தேடி அலைகிறான்.. பையின் கணம் குறையும்போது பணத்தைத் தேடி அலைகிறான்.. அனைக்கும் அன்பு குறையும்போது காதலைத் தேடி அலைகிறான்.. உடலில், வாலிபம் குறையும்போது வாழ்க்கையைத் தேடி அலைகிறான்.. வாழ்க்கையின் வாலிபம் குறையும்போது கடவுளைத் தேடி அலைகிறான்…!!! நண்பா.. குறைகளைக் கண்டு குரைப்பதும்.. […]

Read More

என் பிரிய துபை

– ராஜா கமால் – rajakml@yahoo.com கணத்த மனத்துடனும் எதிர்கால கனவுடனும் என்  இளமை கால ஏக்கங்களுடனும் உன்னில் நான் காலடி வைத்தேன் என் மண்ணில் கிடைக்காத அங்கிஉறாரம் இம் மண்ணில்  நீ எனக்கு தந்தாய். தவிப்புடன் தாவிய குழந்தையாய் நான் ஆதரவுடன் அள்ளிய அன்னையாய் நீ எத்துணை மன போரட்டம் என்னில் அத்துணைக்கும் மருந்தெடுத்து தந்தாய் உன்னில் எத்துணை முறை என் வேதனை மனத்திற்கு வெண் சாமரம் வீசியிருக்கும் உன் கடற்கரைக் காற்று சோகமாய் வந்த […]

Read More

ஏகத்துவம்

K.LIYAKATHALI இரண்டு என்பதை ஒன்றெனக்கூறுவது ஏகத்துவம்… தன்னையும் படைத்தவனையும் வேறுப்படுத்தி மாறுப்படுவது துவைதம்… துவைதவாதிகளே தூயவனுக்கு துணைவைப்பவர்கள்… தன்னிலே சர்வத்தையும் சர்வத்தில் தன்னையும் காண்பதே அத்வைதம்… அத்வைத அறிவு இல்லையெனில் ஆண்டவனைத் தரிசிக்க முடியாது… ஆன்மீகம் என்பது ஆடையில் இல்லை அது அறிவில் தெளிவில்… இறைதரிசனம் பெறுவதற்கு நிறைவான குருத்தேவை வழிக்காட்டல் இல்லாமல் வாழ்க்கை இல்லை… ஞானம் பெற எளிமையான எண்ணமும் தெளிந்த மனமும் அறிந்துணர ஆர்வமும் நம்மில் அதிகரித்தாலே ஏகமும் ஏழ்மையும் நம்மிலே எழிலுறும்…! திருவாகி […]

Read More

அர்த்தம்

ஆசிர்வதிக்கப் பட்ட பூமி இன்று சபிக்கப் பட்டவர்கள் கையில் இஸ்ரேல் செய்தால் ஞாயம் ஈராக் செய்தால் அநியாயம் சாத்தான்கள் எல்லாம் இன்று சமாதானம் பேசுகிறது உலக அமைதியை எண்ணெய் நாட்டிலும் ஏழை நாட்டிலும் ஓயாது போர் செய்து தேடும் வல்லரசு உண்மையை பேச அஞ்சுபவர்களே இன்று உலகத் தலைவர்கள் சமுதாயப் பாதுகாப்பு என்ற பெயரில் சமுதாயச் சீரழிப்பு அமைதிக்காக செல்லும் அராஜகப் படை தீவீரவாதிகளே தீவீரவாதிகளை தேடி அலையும் அதிசயம் ஆயுத விற்பனையாளர்கள் தான் உலகை அடக்கியாளும் […]

Read More

சாரல்

பெய்துக் கொண்டிருக்கிறது சிலர் நனைகின்றோம் பலர் நகர்கின்றோம் எல்லையில்லாத் தேவைகளைக் கூட்டியதால் தேடலில் தொலைகின்றோம்… தன்னிடம் கிடைப்பதை விட்டுவிட்டு தானையமாய் திரிவதில் நாம் தீவிரவாதிகள்… சுயநலம் என்பது நமக்கு மற்றவர்களோடு அல்ல நம்மிடமே… அனைத்தையும் ஆசைக்கு அடகுவைத்து விட்டு அந்த அனைத்திலும் தன்னை மீட்க தவறுகிறோம்… சின்ன சின்ன அறிவுகளில் சிறைப்படும் நம்மால் சம்பூரண அறிவுப்பெற்று விடுதலையாகத் தெரியவில்லை பெய்வது ஞானமழை சாரலுக்கு தேவையில்லை குடை…! -கிளியனூர் இஸ்மத்

Read More