கவிதைகள் (All)

பணம்…

பாசவண்ணத்தில்
வாழ்க்கைகூட்டை
வடிவமைத்து
நேசஎண்ணத்தில் நெறிபடுத்தி
நேர்ந்தாரையும்
சார்ந்தோரையும்
சடதிச் செய்யமுடியுமா…?

பிச்சைப் பாத்திரம்ஏந்தும்
இச்சைமுத்து
பச்சைநிற வாகனத்தில்
வளம்பெற முடியுமா…?

கயல்விழியோடு
காதலில் முழ்கி
மனம்கலந்த மனங்கள்
காதலைமறக்க முடியுமா…?

பல்லாக்கு தூக்கும்
பணியாளன்
பவனிவரும் அரசனைப்போல்
அரசாளத்தான் முடியுமா…?

தேன்கூட்டைக் காக்கும்
தேனிக்களை
ஒருகல் விட்டால்போதும்
கலைந்துவிடுவது போல்
முடியாத முயற்சிகளை
முடித்துவிடும்
முறித்தும்விடும்
பணம்…!


3/21/2009 03:18:00 AM அன்று கவி(மதி)வனம் இல் கிளியனூர் இஸ்மத் K.LIYAKATHALI ஆல் இடுகையிடப்பட்டது

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button