கிராமம் தேடி

கவிதைகள் (All)

சுங்கிடி சேலைகள் போய்
எங்கும் சுடிதார் மயம்;
பாவாடைப்  பெண்கள்
எல்லாம் பர்முடாஸில்
பூ வாடை வீசிய
கூந்தலில் எல்லாம்
பூவெண்ணை வாசம்

சட்டி ஒலிக்க
சமைத்த பெண்கள்
எல்லாம்  TV பெட்டி
முன்னே முடக்கம்

பாண்டி விளையாடிய
சிறுமிகள் இன்று
சீடி யில் சித்திரம்
பார்கின்றனர்

ஓடி ஆடிய பிள்ளைகள்
எல்லாம் இப்போது
வீடியோ கேமில்
ஒடுங்கி விட்டனர்

மயிலிறகை
புத்தகத்தில் வைத்து
குஞ்சு தேடும்
குழந்தைகள்
இன்று இல்லை

அம்மா என்று
அழைத்த மழழைகள்
இன்று மம்மி
என்றழைக்கிறது

சந்திப்பு முனை
வைத்து சந்தித்த
இளைஞர்கள் எல்லாம்
இன்று சாடிலைட்
வலைக்குள்

எங்கள் ஊர்
ஆற்று மணலை
அலங்கரித்த ஜனங்கள்
எல்லாம் போய்
வெற்று மணலாய்
காட்சி தர
நான் மட்டும்
பட்டினத்திலிருந்து
பழைய கிராமம் தேடி . . .

ஆம் என் கிராமம்
இன்று நகர உடை உடுத்திய
கிராமத்தானாய் . . .

பம்பரம் விட்ட
பாவையர் எங்கே
கும்மியடித்த
குமரிகள் எங்கே
கோலி ஆடிய
சிறுவர்கள் எங்கே
நெல்லிகாய் விற்ற
ஆயா எங்கே

ஏக்கமாய் நான்
தொலைத்து விட்ட
என் கிராமத்தை
தேடுகிறேன்.
Rajakamal
rajakamal.blogspot.com
rajakml@yahoo.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *