K.LIYAKATHALI
இரண்டு என்பதை
ஒன்றெனக்கூறுவது
ஏகத்துவம்…
தன்னையும்
படைத்தவனையும்
வேறுப்படுத்தி மாறுப்படுவது
துவைதம்…
துவைதவாதிகளே
தூயவனுக்கு
துணைவைப்பவர்கள்…
தன்னிலே சர்வத்தையும்
சர்வத்தில் தன்னையும்
காண்பதே அத்வைதம்…
அத்வைத அறிவு
இல்லையெனில்
ஆண்டவனைத் தரிசிக்க
முடியாது…
ஆன்மீகம் என்பது
ஆடையில் இல்லை
அது
அறிவில் தெளிவில்…
இறைதரிசனம் பெறுவதற்கு
நிறைவான குருத்தேவை
வழிக்காட்டல் இல்லாமல்
வாழ்க்கை இல்லை…
ஞானம் பெற
எளிமையான எண்ணமும்
தெளிந்த மனமும்
அறிந்துணர ஆர்வமும்
நம்மில் அதிகரித்தாலே
ஏகமும் ஏழ்மையும்
நம்மிலே எழிலுறும்…!
திருவாகி யாங்கும் யாவும்
இல்லையென்றிலாது
நிறைந்தும் விரிந்தும்
பரவியும் விரவியும்
எதுகையிலாது
அனைத்துமாய் நின்றியங்கும்
ஒன்றே ஏகம் என்றுரைத்தார்கள்
எம்குருநாதர்…!