என் பிரிய துபை

கவிதைகள் (All)

– ராஜா கமால் –
rajakml@yahoo.com

கணத்த மனத்துடனும்
எதிர்கால கனவுடனும்
என்  இளமை கால
ஏக்கங்களுடனும்
உன்னில் நான்
காலடி வைத்தேன்

என் மண்ணில்
கிடைக்காத அங்கிஉறாரம்
இம் மண்ணில்  நீ எனக்கு
தந்தாய்.

தவிப்புடன் தாவிய
குழந்தையாய் நான்
ஆதரவுடன் அள்ளிய
அன்னையாய் நீ

எத்துணை மன போரட்டம்
என்னில்
அத்துணைக்கும் மருந்தெடுத்து
தந்தாய் உன்னில்

எத்துணை முறை
என் வேதனை மனத்திற்கு
வெண் சாமரம் வீசியிருக்கும்
உன் கடற்கரைக் காற்று

சோகமாய் வந்த என்னை
எத்துணை முறை
உன் கடற்கறை மடியால்
தாலாட்டி இருக்கிறாய்

நான் இந் நாட்டில்
இருக்கும் போது தானே
என் வீட்டில் இருப்பது போல்
உணர்ந்தேன்

நான் எந் நாட்டில்
உறங்கியதை விட
இந் நாட்டில் உறங்கிய
வருசங்கள் தானே அதிகம்

எப்போதும் களிப்புடனே
பார்த்த உன் முகத்தில்
இன்று கலக்ககம் ஏன்
அள்ளி அள்ளி கொடுத்த பூமி நீ

எத்தனை குடும்பங்ளி;ல் நீ
மகிழ்ச்சி விளக்கு ஏற்றி இருக்கிறாய்
எத்தனை இல்லங்களில்
சந்தோசச் சலங்கை
ஒலிக்கச் செய்தாய்

இன்று உன்னில் ஏன் இந்த நிசப்தம்

என்னை சீராட்டி , பாரட்டி
மெருகூட்டியது நீ
உன் ஆரவார முகத்தில்
சோகத் துளிகள் ஏன்

நிதம் ஒரு நிகழ்ச்சியால்
எத்தனை சந்தோசப்
பூக்களை தூவியிருக்கிறாய்
உனக்கு இன்று பொருளாதார
நெருக்கடியாம்

விசா இல்லாதவர்கெல்லாம்
வேலை தந்த நீ
இன்று விசா உள்ளவர்கே
வேலையில்லை என்கிறாயாம்

அள்ளி சென்றவரெல்லாம்
எள்ளி நகையாடுகிறார்
காலம் விரைவில் மாறும்
வசந்தம் மீண்டும் வீசும்

உன் வானில் மகிழ்ச்சி
மீண்டும் சிறகடிக்கும்
நீயே இன்றும் என்றும்
அரபு நாடுகளின்
அழகு ராணி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *