ஆசிர்வதிக்கப் பட்ட பூமி இன்று
சபிக்கப் பட்டவர்கள் கையில்
இஸ்ரேல் செய்தால் ஞாயம்
ஈராக் செய்தால் அநியாயம்
சாத்தான்கள் எல்லாம் இன்று
சமாதானம் பேசுகிறது
உலக அமைதியை
எண்ணெய் நாட்டிலும்
ஏழை நாட்டிலும்
ஓயாது போர் செய்து
தேடும் வல்லரசு
உண்மையை பேச அஞ்சுபவர்களே
இன்று உலகத் தலைவர்கள்
சமுதாயப் பாதுகாப்பு என்ற பெயரில்
சமுதாயச் சீரழிப்பு
அமைதிக்காக செல்லும்
அராஜகப் படை
தீவீரவாதிகளே தீவீரவாதிகளை
தேடி அலையும் அதிசயம்
ஆயுத விற்பனையாளர்கள் தான்
உலகை அடக்கியாளும் வல்லரசுகள்
அடி வருடிகள் எல்லாம் அமைதிக்கு
பாடுபடுபவர்கள்
உரிமை கேட்பவர்கள் எல்லாம்
அமைதிக் கெடுப்பவர்கள்
மனித உரிமை சங்கத்தில்
மனித உரிமைக்கு மாத்திரம் இடமில்லை
ஐ.நா சபையிலிருந்து அதிகாரம் மட்டும்
வெளிநடப்பு செய்து விட்டது
அகராதியில் இந்த வார்த்தைகளுக்கு
அர்த்தம் மாறியது எப்போது
இந்த விடையில்லா வினாக்கள்
விடியலை நோக்கி செய்யும்
நெடிய பயணம்.
By rajakamal
rajakamal.blog.spot.com
rajakml@yahoo.com