பிழை பொறுப்பாய் யாஅல்லாஹ்!
மண்ணும் விண்ணும் ஆளும் வல்ல இறைவா மாந்தரெம்மின் பிழைகள் பொறுத்தருள்வாய் இறைவா உன்னருள் வேண்டும் இனிதாய் நலம் வேண்டும் வல்ல நாயனே தூயனே ஏகனே காப்பாயே… பாவமென்னும் கடலில் வீழ்ந்து பல தீங்குகள் எம்மை சூழ்ந்து கலங்கும் நிலை ஆய்ந்து கனிவாய் உன்னருள் ஈந்து வல்ல நாயனே தூயனே ஏகனே காப்பாயே… பொருள் தேடிடும் போதையில் திரிந்தேன் அருள் தேடிடும் பாதையை மறந்தேன் இருளைத் துணைக்கொண்டேன் இழிவின் வழி சென்றேன் வல்ல நாயனே தூயனே ஏகனே காப்பாயே… […]
Read More