முள்வேலி

முதுவை சல்மான்

கப்பலோட்டியவனின் கதை அறிவீர்
கப்பலில் ஓடியவன் காதை இது
தண்ணீரிலும் தரைதனிலும் விழ கற்றுவிட்ட
தவளைகள்தான் நாங்கள்

சொந்த நாட்டின் விருந்தினர் நாங்கள்
இந்த நாட்டில் இரண்டாம் குடிமக்கள்
இல்லை இல்லை கடைநிலை ஜந்துக்கள்
இதயமெல்லாம் நினைவுகளையும்

நெந்சமெல்லாம் பணத்தாசையும் சுமந்து
நெந்சத்தின் இச்சையெல்லாம் துறந்து
நீள நெடுகடல் தாண்டினோம்
பணமெனும் மாயனை ஆசையெனும்

பேழையினுள் சிறை பிடிக்க துடிக்கிறோம்
சேமித்து விட நினைக்கிறோம் அதனை
சேர்த்துவிட துடிக்கின்றோம்
பணம் பத்தும் செய்யும் அல்லவா?

பொழுதுகளோ புலர்ந்திங்கு மறைகின்றது
பொல்லாத விதி இங்கு தொலைகின்றது
எழுதுகோல் என்துன்பம் வரைகின்றது – அதை
ஏற்கின்ற இவ்வேடும் அழுகின்றது

காலமதை சாலச்சிறந்த மருத்துவர் என்பர்
காலமதே காலனாய் எமை மதிக்கின்றதே
ஒன்றுக்கு 13 என்றதால்
ஓடோடி வந்தோம் இங்கு – ஆனால்

முள் ஒன்று தைத்திடினும் இங்கு
மாராது 13முறை வலிக்கிறதே
விளக்கின் ஒலியின் விட்டில்கள் நாங்கள்
வானத்தை எட்டிவிடப் பறக்கும் ஈசல்கள்

எறியும் மெழுகு ஒலித்திடும் – ஆனால்
இருளில்தான் நிற்கும் அதன் பாதம்
ஏற்றிவிடும் ஏணி உடையும்வரை
ஏறுவதில்லை பரண்மேலே

வையகம் சொல்ல மறந்த மறைத்த
வேதனை காவியம் இது
புத்தாடை பட்டாடை கண்டதால்
புதிய நறுமனம் கமழ்ந்ததால்

உண்மை கசந்துவிட்டது அது
ஒளிந்து கொண்டு விட்டது
இலைமறை காய்தான் அது
என்றாவது உலகிற்கு வெளிப்படும்

வெளிநாடுகளில் காசுக்காக வாழ்ந்து
ஓடுகளாய் உடலும் உள்ளமும் தேய்ந்து
உலகம் விடைதரும் தருனம் அதில்
உள்ளுர் வாசிகளாய் ஊர் திரும்ப

உழைப்பின் கூலியாய் பரிசாய்
உன்னிடத்தில் எந்சுவதென்ன?
வியாதி வறுமை வெறுமை – நீ
அருகே இருந்து வளர்க்காததால்

உனக்கே அடங்கா உன் பிள்ளை
ஒன்வேயில் வரும் என் ஆர் ஐ
ஊரில் இருப்போருக்கு எக்ஸ்ட்ரா லக்கேஜ்
ஊராருக்கோ வேஸ்ட் லக்கேஜ்

வையகம் கண்களால் கானும் உண்மை
விழிகளால் காண்பதை நாவால் மொழிவதில்லை
உலகிற்கு உனை அறிமுகம் செய்த
ஆசையாய் ஈன்றெடுத்த உந்தன்

பெற்றோர்கள் மரண படுக்கையில்
புரண்டாலும் மரணமே எய்திடினும்
பிள்ளையாம் உனை கண்டுவிட துடித்தாலும்
விடுப்பும் விமானமும் கிடைத்தால்தான் உண்டு

வருமானம் எய்தும் உந்தன்
உணவு உடை உரைவிடம் எப்படி?
வெளிநாடாய் போனதால்
உன் சொந்தம் அதை அறியாது

தகர வீடுகள் சீட்டுக்கட்டுகளாய்
தரவாரியாய் ஒன்றன் மேல் ஒன்றாய்
அடிக்கி வைக்கப்பட்ட படுக்கைகள்
ஓரத்தில் ஏணிப்படிகள்

ஆறுக்கு மூன்று அறிவீர்களே
அதுதான் உணவும் உறங்கவும்
குளிர் காலத்தில் குளிக்க வெந்நீர் வேண்டுமா
கதிரவன் எழுவதற்கு முன்பு எழ வேண்டும்

தாமதமானால் தண்ணீரே கிட்டாது
பிரகெப்படி வெந்நீர்
30பேருக்கு மாதம் ஒரு சிலிண்டர்
எப்படி வேண்டுமானாலும் சமைக்கலாம்

சிலிண்டர் தீரும் வரையில்
வாரம் இருநாள் கரண்ட் கட்
கோடை காலத்தில் பலமுறை பவர் கட்
மழை பெய்ததில்லை பெரும்பாலும்

பெய்துவிட்டால் தகர வீடுகள்
எல்லாம் மிதவை வீடுகளாய் ஆகிவிடும்
சம்பளம் கிடைக்கும் வருடத்தில்
சில தடவைகள் மட்டும்

ஓனர் டைம் நல்லா இருந்தால்
ஓவர் டைம் கூட கிடைக்கும்
அரபு மொழியை தாய் மொழியாய்
கொண்ட அனைவருக்கும் இவன் அடிமைதான்

அவன் பணியையும் இவன் சுமக்க நேரும்
இவையெல்லாம் பொய்யல்ல நிஜம்
ஆதிகாலை எழுந்து குளித்து
உணவிருந்தால் அதை அருந்தி

வேலையிடம் சென்று உழைத்து
விடுதி திரும்ப சொந்த பணிகள்
எல்லாம் சுமைகளாய் காத்திருக்கும்
அடுத்த வேளை உணவு வேண்டும்

அடுக்களையை தயார் செய்து
சமைத்து பசி ஆற்றி உடை துவைக்க
10 12 ஆகிவிடும் நாழிகை
ஏனிபடியில் ஏறி படுக்கையை

நாடும் பொழுது பக்குவமாய் வந்து
நின்றிடும் குடும்ப நினைவும் குழந்தைகள் முகமும்
மாதம் முதல் தேதி என்றால்
தொலைபேசிக்கு முதலிடம் அங்கு

பேசினால் காசு கரைகிறது
பேசாவிட்டால் இதயம் கரைகிறது
சோதனையின் சொந்தக்காரர்கள் நாங்கள்
வேதனையின் மொத்த குத்தகைக்காரர்கள்

மூன்று ஆண்டுகள் கழிந்தால்
மூன்று மாத விடுமுறை
அவை விடுமுறை அல்ல
ஆயுள் கைதிகளின் பரோல்கள்

பிரயான தேதி நெருங்கிவிட்டால்
பித்தான நெஞ்சம் தொலைப்பது
மிச்சம் மீதி இருந்த கண் தூக்கத்தை
மலை ஏறுபவன் இதயம் இலேசாகும்

விடுப்பில் செல்பவன் இதயம் சுமையாகும்
விலை கொடுத்து வாங்க வேண்டும்
சம்பாதித்து விட்டு வருபவன் இங்கே
செய்தே தீர வேண்டிய பணிகள்

உற்றார் சுற்றார் அனைவரையும்
கொடுத்து திருப்தி படுத்த வேண்டும்
பணமாக பொருளாக உணவாக உடையாக
மனித மனம் அல்லவா

என்றைக்கு திருப்தியிரும் அது
ஒருபோதும் அடைவதில்லை
எழுதி தொடர்ந்தால் மலை முகடுகளும் தாழ்வுரும்
நீ வாகன ஓட்டியாய் இருந்திருந்தால்

விபத்து ஒன்று ஏற்பட்டுவிட்டால்
கண்ணை மூடிக்கொண்டு சொல்வார்கள்
நீதான் குற்றவாளி என்று

திருடன் உன்னிடத்தில் வந்து தாக்க
தற்காப்புக்கு நீ அவனை தாக்கினாலும்
சட்டம் வெளிநாட்டவனாம் உன்னைத்தான்
குற்றம் சுமத்தி சிறைப்படுத்தும்

உதாரணங்கள்தாம் இவை எல்லாம்
தொடரும் ரணங்கள் எண்ணற்றவை
இவை நமக்கு நாமே
இட்டுவிட்ட முல்வேழியாகும்

காலங்களும் சோகங்களும்
தொடர்கதையாகும் நமக்கு
கால சக்கரம் விடைபகரட்டும்
நாளை சமூகமாவது நல்வழி வாழட்டும்

முதுவை சல்மான்
ரியாத்
salmanhind007@yahoo.co.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *