என்னோடு படித்தவள்
எனதருமை தோழிகூட
ஆண்டிரண்டு செல்லவில்லை
மீண்டும் சந்தித்தேன்
மீளொனாத் துயரத்தில் …..
அவள் அழகு முகம் மலரவில்லை
அவள் அன்பு மனம் குளிரவில்லை
அவளில் மங்கலமும் பொங்கவில்லை
அவள் மங்கையெனும் நிலையிலில்லை
ஈரேழு மாதங்களாம் அவளுக்கு மணமாகி
மணவாளனுக்கு மஞ்சல்காமாலையாம்
மணவாளன் மாண்டுபோக இவள்
மங்கையெனும் நிலையிழந்து
மடியிலொரு குழந்தையோடு
அறிந்த நானோ அதிர்ந்ததோடு
ஆறுதல் சொல்ல வழியில்லாமல்
பிற்பாடு சிலபொழுது சிந்தித்து
நானவளை மறுமணம் செய்துகொள்ள
மனமொப்பி நிற்கையிலே
இந்த “நாற்றுச் சமூகம்
அவளைத் தூற்றச் செய்யவே”
மடியில் குழந்தையென்று மறுதலித்துவிட்டாள்
அவளொத்த யுவதிகளோ
அழகு நிலையங்களில் அசிங்கப்படுத்திக் கொள்கையிலே
இன்றும் இருபத்து இளைஞியான
அவளை நான் காணுகையில்
அவள் வடியவரும் கண்ணீரை
வடிக்காமல் உள் நிறுத்தி
புன்னகைப் “பூ” பூத்தாலும்
என் இதயத்தின் அடித்தளத்தில்
ஈரம் கசிகிறது ……..
வெள்ளைப்புறாக்கள் வெளியெங்கும் புறக்கட்டும்
உலக வரலாறு,
ஆக்கப்பட்டிருக்கிறது
யுத்தங்களாலும்,
இரத்தங்களாலும்.
கற்காலங்களில்
கற்பழிக்கப்பட்டிருக்கின்றன
காட்டு விலங்குகள்
புத்தரின்
காலத்திலும்
கலிங்கப்போர்.
நூற்றாண்டின்
துவக்கத்தில்
ஏசுவின் “படுகொலை”
மன்னராட்சியிலே
மாண்ட போர் வீரர்
எண்ணிக்கை “பில்லியன்கள்”
மதவெறியால்
மாண்டவர்தான்
“மில்லியன்கள்”
இனத்தோடு
இனம் மோதி
இறந்தவர்தான்
“இலட்சங்கள்”
இவ்வாறு
கொள்ளையிலும்
கொலையிலும்
கற்பழிப்பிலும்
ஓடிக்கொண்டிருந்தன
நூற்றாண்டுகள் ……
அவை
ஆகிக்கொண்டிருந்தன
வரலாறுகள்.
பதினைந்தின்
இறுதியில்
தொடங்குகிறது
ஐரோப்பிய ஆதிக்கம்.
அப்போதுதான்
அறியப்படுகிறது
அமெரிக்க வரலாறு
இனி வரும் நூற்றாண்டில்
உலக வரலாறே
அமெரிக்க வரலாறு
பதினாறின் இறுதியில்
அது
பதின் மூன்று குடியேற்றம்
பதினேழின் இறுதியில்
உலக அரசனாக
உருமாறுகிறது பிரிட்டன்
பதினெட்டின் இறுதியில்
தாயை எதிர்த்து
சூடிக் கொள்கிறது
மக்களாட்சி மாலை
அமெரிக்கா.
அன்றே தொடங்கி விட்டது
அழிவின் புதிய “ஊழி”
தானே
வல்லரசென்று
நிலை நாட்ட
திட்டமிடல்கள்
நிதி ஒதுக்கல்கள்
உளவு அமைப்புகள்.
இவையெல்லாம்
சேர்ந்து செய்ததோ
உலக அழிவுகள்.
உள்நாட்டில்
செவ்வந்தியரைச்
செந்தீயில் கருக்கியது
கருப்பின அடிமைகளை
கற்பிழக்கச் செய்தது.
உலக அரங்கில்
யுத்தங்கள் என்றால்
முத்தங் கொடுத்தே
வரவேற்கிறது
பத்தொன்பதின் இறுதியில்
கியூபாவில் தொடங்கிய
யுத்த வேட்டையை
இன்று வரை தொடர்கிறது
இரத்த வாடையோடு
உலகப் போர்களில்
யூதரின் கண்ணீரில்
ஹிட்லர் பசியார
உதிரத்தையம்
செல்வத்தையும்
உறிஞசிக் குடித்தது
அமெரிக்கா.
அணுவைக் கொண்டு
அமைதி சமைப்போம்
எனறு பசப்பு பேசியே
அந்த ஆகஸ்டில்
ஜப்பானுக்குச்
சமாதி சமைத்தது.
கொரியாவில் தொடங்கி
சிரியா வரை
பனிப்போர் தொடங்கி
பாலைப் போர் வரை
வியட்நாமில் தொடங்கி
வளைகுடா வரை
நீண்டு கொண்டிருக்கிறது
அதன் அழிவு வரலாறு.
பொதுவுடமையைப் பொசுங்க
பாலூட்டி வளர்த்ததொரு “பாம்பை”
அந்தப் பாம்பு
பாலூற்றியவரைக் கடித்து (செப்ட்டம்பர் 11, 2001)
இன்று உலகிற்குத் தருகிறது
அதிர்ச்சி வைத்தியம்.
இருபத்தி ஒன்றிலும்
ஈராக்கில் தொடங்கி
இன்று
ஈரானை நோக்கியும்
யுத்த விமானங்களையே
பறக்க விட்டுக் கொண்டிருக்கிறது.
உலக வரலாறை
யுத்தங்களாலும்
இரத்தங்களாலும்
கட்டமைக்கிற
அமெரிக்கரே
மானுட உயிர்கள்
மலிவாய் போனதோ
உங்களுக்கு.
இனியேனும்
வெள்ளை மாளிகையிலிருந்து
வெள்ளைபுறா பறக்க விடுங்கள்
பிரபஞ்ச வெளியெங்கும்
வெள்ளைப் புறாக்களே பறக்கும்
பறக்கட்டும்.
எழுந்திரு இளைஞா!
தொலைந்த வாழ்வை எண்ணி
சிதைந்து போகும் இளைஞா
சிந்தித்துப் பார்
சிதைந்த வலையை எண்ணி
சிலந்தி கவலையடைவதில்லை
சிந்திக்கும் வேளைக்குள்
சிலந்தி வலை பின்னிவிடும்
பாதை மறிக்கப்பட்டதை எண்ணி
சிட்டெறும்பு தன்வாழ்வை மறித்துக் கொள்வதில்லை
யோசிக்கும் வேளைக்குள்
புதிய வழி கண்டெடுத்து விஞ்ஞானியாகிவிடும்
விரட்டப்பட்ட தேனீக்கள்
விதியென்று புலம்பி அழுவதில்லை
சில பொழுதில் புது வீடு கட்டி
புதுமனை புகுந்து விடும்
வெட்டப்பட்ட மரங்கள்
முழுவதும் முடங்கி போவதில்லை
முட்டி மேதி மீண்டும்
உயிர்பெற்றுக் கொண்டு விடும்
சிற்றறிவு ஜீவனுக்குள்
வீற்றிருக்கும் வீரியம்
உனக்கேன் தொலைந்து போனது?
எழுந்திரு இளைஞா – நீ
சாதிக்கப் பிறந்தவன்.
புளியஞ்சோலை
இயற்கையின் வனப்பு
வானுயர மலைகள்
சூழ்ந்து கொண்ட மரங்கள்
நடுவில் ஒரு கொள்ளருவி
அதற்கு மட்டும் கிடைக்கும் பகலவனின் பரிசு.
பட்சிகளின் சங்கீதம்
குயிலின் இன்னிசை
தென்றலாய் வந்தனைக்கும் காற்று
மெட்டெடுக்கச் சிற்றருவி
கானம் பாடும் வானம் பாடிகள்
நோய் விரட்டும் மூலிகை
பினிபோக்கும் கடவுள்
மலையாள மக்களின் பாசை
குழந்தை முகங்களின் குதுகாலம்
சுவைக்கக் கிடைக்கிறது முக்கனி.
இது மட்டுமா?
நட்சத்திர கூட்டங்களும் நாணம் கொள்ளும்
இங்கு காணும் இளமை நட்சத்திரங்களால்
சில்லென்ற அருவியில் வாசம் செய்யும்
இள நங்கைக் கூட்டம்
நங்கையிலும் முகமன் செய்யத்துடிக்கும்
இளங்களைக் கூட்டம்
அரைகுறை உடையென்றாலும்
அங்கு தோன்றவில்லை
அதிகப் பட்ச காமம்
அங்கு கானவில்லை
அந்த சாதி மதம்
அங்கு காண்பது எத்தனை முகங்கள்?
எத்தனை மனங்கள்?
இங்கு கிடைக்கிறது மன மகிழ்வின் உச்சம்.
(திருச்சி மாவட்ட சுற்றுலா தளம்)
உண்மையுடன்
ஆதிசரவணன்
முகவரி :
ஆதிசரவணன்,
2ஃ162 கிழக்குத்தெரு,
நரசிங்கபுரம் அஞ்சல்,
துறையூர் வட்டம்,
திருச்சி மாவட்டம்.
அஞ்சல் குறியீட்டு எண் : 621 008.
கைபேசி எண் : 9786394903.
படிப்பு : தேசிய கல்லூரி, திருச்சி.
முதுகலை வணிகவியல் இரண்டாம் ஆண்டு.
ஆதி” <aathi.171@gmail.com>
Sent: 24 November 2013 01:19
ஐயா , தஙகள் பக்கத்தில்
எனது உண்மையின் உளறலை
பதிவிட்டமைக்கு மிக்க
நன்றி, தங்களுக்கு எவ்வாறு
எனது பதிவுகள் கிடைத்தது
என நான் தெரிந்து
கொள்ளலாமா?