என் செய்வேன்?

முதுவை சல்மான்

விலங்கினங்களை சிறைபிடித்து – அதை
வேலிகளால் அடைத்து – நாலாபுறமும்
வெஞ்சினம் கொண்ட கொல்லிகளால்
வாட்டிவதைத்திடின் அவை என்செய்யும்

காளை கரவை மாடுகளை எல்லாம்
கயிறுகளால் கட்டி வைத்து
தார் குச்சிகளால் தினமும்
தீண்டினால் அவை என் செய்யும்

காண்பவர் வாழாவிருப்பாரோ
கண்களை முடிகொள்வாரோ
வாயில்லா ஜீவன் அதை
வஞ்சிக்கும் மனிதர்களை ஏசிடமாட்டனரோ

மிருகம் குஉட கண்ணீர் சிந்துமய்யா
மனித மனம் என்ன
மிருகத்திலும் கொடியதா – அல்லது
மங்கி மழுங்கி விட்டோடா?

பாலஸ்தீன மண் மானபங்கப்படுத்தப்பட்டது
பிழைக்க வந்த வந்தேரிகளால்
ஏ அமெரிக்காவின் கள்ள குழந்தையே
இஸ்ரேல் எனும் ஈனப்பிரவியே

ஏதைக் கண்டுவிட நீ துடிக்கிறாய்
யாரை வெல்வோம் என நினைக்கிறாய்?
மண்ணில் சாய்ந்தவரெல்லாம் மாண்டுவிட்டனரா – இல்லை
மறுமை சோலையின் மலர்களாகி விட்டனர்

வீழாத வல்லரசு உண்டா?
வீண்சுமர் வென்று
வெற்றி வாகை சுஉடிய கொற்றவன் எவனும்
உலகில் உண்டா?

தொடுத்த போர்கள் எல்லாம்
தொடர்வதைத்தானே பார்க்கிறோம்
வியட்நாம் பாடம் தரவில்லையா
வீழவில்லை இன்னும் பாரசீகமும் ஆப்கானும்

உயிர் துறந்த எங்களது உடல் உறுப்பே
உன் உடல் வடிக்கும் குருதியால்
என் இகம் துடிக்கும் செய்தியை
என் இதயம் கேட்கும் கேள்வியை

அது உகுக்கும் கண்ணீரை
எப்படி துடைப்பேன் – இறைவனிடம்
இரு கைகளை ஏந்துவதை தவிர நான்
என் செய்வேன்? என் செய்வேன்?

முதுவை சல்மான் – ரியாத்-அல்ஜிரியா
salmanhind007@yahoo.co.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *