1. Home
  2. விவசாயி

Tag: விவசாயி

விவசாயிகள் போராட்டம்

விவசாயிகள் போராட்டம் குறித்து அடிக்கடி எழுப்பப்படுகின்ற கேள்விகளுக்கு வேளாண் நிபுணர் தேவிந்தர் சர்மா அளிக்கும் பதில்கள்…   இந்திய மக்களிடம் மூன்று புதிய வேளாண் சட்டங்களின் நன்மைகளை கொண்டு செல்கின்ற வகையிலே மத்திய அரசும், ஊடகங்களுக்குள் இருக்கின்ற அதன் ஆதரவாளர்களும் கூடுதலாகப் பணியாற்றி வந்தாலும், டெல்லி எல்லைகளில் போராட்டம் செய்து வருகின்ற…

பயிர்க் காப்பீடும், பரிதவிக்கும் விவசாயிகளும்..

பயிர்க் காப்பீடும், பரிதவிக்கும் விவசாயிகளும்..   இன்சூரன்ஸ் துறையில் தனியாரை, பன்னாட்டு நிறுவனங்களை அனுமதிக்கும் போது சாமானிய மக்களுக்கு பயனளிக்கும் என்றுதான் சொன்னார்கள். ஆனால் அனுபவம் என்ன?  இதோ எந்த மாநிலத்தை இன்றைய ஆட்சியாளர்கள் “மாடல் மாநிலம்” என்றார்களோ அந்த மாநிலத்தின் அனுபவம் இது. இந்து பிசினஸ் லைன் (11.08.2020) இதழின் முதல் பக்க செய்தி இது. குஜராத் மாநில அரசும் பிரதமரின் பயிர்க் காப்பீடு திட்டத்தை விட்டு வெளியேறுகிறது… பிரீமிய சுமை தாங்க முடியவில்லையாம்_ “என்பது தலைப்பு. “பிரதமர் பயிர்க் காப்பீட்டுத் திட்டம்” 2016ல் குஜராத்தில் அமலுக்கு வந்தது. இவ்வாண்டு இன்சூரன்ஸ் பிரீமியங்களுக்கான டெண்டர்கள் மிக மிக அதிகமான பிரீமியத்தை கோரியதால் இத் திட்டத்தை விட்டு வெளியேறுவதாக அந்த மாநில அரசு அறிவித்துள்ளது. குஜராத் முதல்வர் விஜய் ரூபானி  “ரூ.4500 கோடி பிரீமியம் கேட்கிறார்கள். இது மிக அதீதம்” என்று சொல்லி இவ்வாண்டு பயிர்க் காப்பீட்டில் இணையப் போவதில்லை என்று கூறியுள்ளார். கடந்த ஆண்டு குஜராத்தில் ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி, யுனிவர்சல் சாம்போ, பாரதி ஆக்சா போன்ற தனியார் நிறுவனங்களோடு இந்திய விவசாயக் காப்பீட்டு நிறுவனமும் சேர்ந்து பயிர்க் காப்பீடு வழங்கின.  ஏற்கெனவே பீகாரும், மேற்கு வங்காளமும் இத்திட்டத்தில் இருந்து வெளியேறி விட்டன. பஞ்சாப் இந்த திட்டத்திற்குள் வரவேயில்லை. ஆரம்ப காலங்களில் நிறைய விவசாயிகள் வெளியேறிய செய்திகள் வந்தன. இப்போது மாநிலங்களே வெளியேறுகின்றன. லாபம் வந்தால் அரசு நிறுவனம் விலகி நிற்க வேண்டும். லாபம் வராது என்ற நிலை ஏற்பட்டால் தனியார் நிறுவனங்கள் பயிர்க் காப்பீட்டில் இருந்து வெளியேறிவிடும் என்பதற்கும் சாட்சியங்கள் உள்ளன. 2019 காரீஃப் சீசன் டெண்டர்களில் ஐ.சி.ஐ.சி.ஐ- லாம்பார்டு, டாட்டா ஏ.ஐ.ஏ, சோழமண்டலம் எம்.எஸ், ஸ்ரீராம் ஆகிய நான்கு கம்பெனிகளும் பங்கேற்கவில்லை. பருவமழை பொய்க்கும் என்றால் ஓடிப் போய் விடுவார்கள் போலிருக்கிறது. விவசாயிகள் தாம்புக் கயிறை நாடுகிற தருணங்களில் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தங்கக் கயிறை தாயத்தாக கட்டிக் கொண்டார்கள் என்று நினைக்க வேண்டியுள்ளது. இதில் தாமதம், இழுத்தடிப்பு தனிக் கதை. நவம்பர் 2019 ல் இருந்த நிலைமை இது. 2018 க்கான உரிமங்களில் ரூ.2511 கோடிகள் (16%) நிலுவையில் இருந்தன. 2019 ஏப்ரலில் கோரப்பட்ட உரிமங்களில் ரூ.1269 கோடிகள் (26%) நிலுவையில் இருந்தன. உரிய நேரத்தில் விவசாயிகளின் துயரை துடைப்பதிலும் தோல்வி.  அதுவும் பிரதமரின் “செல்லம்” குஜராத்தே இப்போது வெளியே போகிறது. (ஆகஸ்ட் 14 தீக்கதிரில் ஆயுள் காப்பீட்டு ஊழியர் சங்கப் பொறுப்பாளர் க. சுவாமிநாதன் எழுதிய கட்டுரையிலிருந்து)

விவசாயியின் நலம் காப்போம்

விவசாயியின் நலம் காப்போம் ஏறு பூட்டி ,சால் ஓட்டி தண்ணி பாய்ச்சி , விதை விதைச்சி சேத்தில் இறங்கி , நாத்து நட்டு உரத்தைப் போட்டு ,களையெடுத்து , நெத்தி வேர்வை நிலத்தில் சிந்தி நேர்த்தியாப் பாத்துகிட்டு கதிரறுத்து , களமடிச்சி சந்தையிலே வித்துப்புட்டு வந்த காசை வச்சிக்கிட்டு…

இயற்கை சாகுபடிக்கு வழிகாட்டும் கிருஷ்ணகிரி தோட்டக்கலை விவசாயிகள்

இயற்கை சாகுபடிக்கு வழிகாட்டும் கிருஷ்ணகிரி தோட்டக்கலை விவசாயிகள் வேளாண் நிலம் முனைவர்.தி.ராஜ்பிரவின் தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டம் தோட்டக்கலை பயிர்களை அதிகளவில் சாகுபடி செய்து வருகிறது. ஐந்து முக்கிய நெடுஞ்சாலைகளை கொண்டுள்ள காரணத்தால் இங்கு சாகுபடி செய்யப்படும் பழங்கள், காய், கனிகள் தொலை தூரங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு பெருநகரங்களில் அதிகளவில்…

விவசாயி

ஹைக்கூ !    கவிஞர் இரா .இரவி ! வருத்தத்தில் விவசாயி மகிழ்வில் மணற்கொள்ளையர் வறண்ட ஆறு ! அழுகை நிறுத்தியது குழந்தை சவ் மிட்டாய்காரனின் கை தட்டும் பொம்மை ! சுவை அதிகம் பெரிதை  விட சிறிது வெள்ளரிப்பிஞ்சு   ! பத்துப்பொருத்தம் இருந்த இணைகள் மணவிலக்கு வேண்டி…

முதுகுளத்தூர் பகுதியில் பருவமழை பொய்த்ததால் கரிமூட்ட தொழிலுக்கு மாறிய விவசாயிகள்

முதுகுளத்தூர், : முதுகுளத்தூர் பகுதியில் பருவமழை பொய்த்ததால் விவசாயிகள் கரிமூட்ட தொழிலுக்கு மாறியுள்ளனர். முதுகுளத்தூர், கடலாடி  தாலுகா பகுதியில் உள்ள பூக்குளம், இளஞ்செம்பூர், ஆப்பனூர், ஏனாதி, ஒருவானேந்தல், நெடுங்குளம், கிடாத்திருக்கை, சித்திரங்குடி, காக்கூர், பொதிகுளம், புளியங்குடி, கீழத்தூவல், புனவாசல், ஓரிவயல், கோட்டையேந்தல் உள்ளிட்ட பல கிராமங்களில் விவசாயமே பிரதான…

விவசாயிக்கு விழா

விவசாயிக்கு விழா   விவசாயிக்கு விழா எடுக்க!   பூமித் தாயிடம் விருப்பம் கேட்டேன்       புன்முறுவலோடு தலையாட்டினாள்   வான் மகளிடம் கருத்து கேட்டேன்       வாழ்க! வளர்க! !  என வாழ்த்தினாள்   சமுத்திரத்திடம் சரியா? என்றேன்       மிகச் சரியே என்று மகிழ்ந்தது  …

முதுகுளத்தூர் அருகே வங்கிக்கு செல்ல 25 கிமீ பயணம் விவசாயிகள் அவதி

முதுகுளத்தூர், :  முதுகுளத்தூர் அருகே கூட்டுறவு வங்கிக்கு செல்ல விவசாயிகள் 25 கிமீ பயணிக்கின்றனர். எனவே தங்களது கிராமங்களை அருகில் உள்ள வங்கிக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.  முதுகுளத்தூர் அருகேயுள்ள மட்டியனேந்தல் பகுதியில் தாலியேனேந்தல், இந்திராநகர் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட…

இடத்தகராறில் தாய்மாமனை கொலை செய்த விவசாயி கைது

முதுகுளத்தூர் அருகே இடத்தகராறில் தாய்மாமனை கல்லால் தாக்கிக் கொலை செய்த விவசாயியை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.   முதுகுளத்தூர் அருகே உள்ள கிடாத்திருக்கையைச் சேர்ந்தவர் முத்துவழிவிட்டான்(46). விவசாயியான இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த தாய்மாமன் முத்துமணிக்கும்(67) இடையே இடத்தகராறில் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.   இந்நிலையில் பிரச்னைக்குரிய…

விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பு பயிற்சி முகாம்

முதுகுளத்தூர், கடலாடி, கமுதி வட்டார விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு குறித்து, ரிலையன்ஸ் அறக்கட்டளை சார்பில் பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமுக்கு ரிலையன்ஸ் அறக்கட்டளை திட்ட மேலாளர் ஸ்ரீகிருபா தலைமை வகித்தார்.விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பு பற்றிய ஆலோசனைகளை கால்நடை மருத்துவர் பி.சந்தானம் வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கள…