1. Home
  2. வாழ்த்து

Tag: வாழ்த்து

பொங்கல் வாழ்த்து

பொங்கல் வாழ்த்து மண்மணம்கமழக் கமழவிண்மழைக்கும்கண்மழைக்கும்வெண் சாமரம் வீசமார்கழியின் மகளாய்மாசிக்குத் தாயாய்வந்துதித்ததைமகளே… உழவனின்உழைப்புக்குகட்டியம் கூறசிறுகோட்டுப்பெரும் பழமாய்..வருக!!! வருக!! கடையெழுவள்ளல்களின்முன்னத்தி ஏரேகுடிமக்களின்வரிப்பணத்தைவாரியிறைக்காமல்வியர்வையின்வைரங்களைவாரியிறைக்கும்வள்ளல்களைமகத்துவப் படுத்தவருக வருக தாழிட்டமண்கதவைஏர்கொண்டு உழுதபாற்கடலைபொங்க வைக்கமழையாய் வருக அறத்தை மட்டும் நம்பிபொருளீட்டஇன்பத்தைத் தொலைக்கும்உழைப்பின் முகவரிக்குதனிமகனாய்வருக வருக ஆய்தம்தாங்கியசமாதானத் தூதுவனுக்குஅன்பின் முகவரியாய்வருக வருக அணிலாடுமுன்றில் வீட்டில்குடியிருந்தாலும்உணவு விருந்து தரும்காக்கைப் பாடினியாரைமலையனாராய்மாற்ற…

காதலர் தின வாழ்த்துக்கள்

காதலர் தின வாழ்த்துக்கள் காதல் வலையில் இதுவரை சிக்காத கண்ணியவான்களே . காதலித்தவரையே  மணம் முடித்த  புண்ணியவான்களே காதல் தோற்றாலும்   புனிதமானது என்று எண்ணியவான்களே காதலிக்க யாரும் கிடைக்காத பாவம் பண்ணியவான்களே  . காதல் வெற்றியடைய வேண்டுமென கடவுளிடம் யாசியுங்கள்   . காதல் தோல்வியடைந்தோரது  கதைகளை வாசியுங்கள் . காதல் தோல்வியடைந்தாலும் வாழவேண்டும் என்று  யோசியுங்கள் காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி    இறைவனை நேசியுங்கள் வாழ வகை   செய்யும்  காதலை  வரவேற்போம் மாள வகை செய்யும்  காதலை …

குடியரசு தின வாழ்த்துக்கள்

குடியரசு தின வாழ்த்துக்கள் முடியாட்சி முடிந்து குடியாட்சி மலர்ந்தது . மன்னராட்சி மறைந்து மக்களாட்சி மலர்ந்தது. எழுபத்திரண்டாம் ஆண்டு எழுச்சியுடன் மலரட்டும். இதற்காக உழைத்தவர்கள் இதயங்கள் மகிழட்டும். இன்று இந்தக் குடிமகனின் இதயத்தில் இருக்கின்ற இனிய எண்ணங்களைஇங்கே எடுத்துரைப்பேன் . குடியாட்சி  என்பது  குடிமக்களுக்காக , குடி மக்கள் தேர்ந்தெடுத்த குடிமகன்கள் ஆள்வது குடிமக்களை அழிக்கும் குடியால் வரும் பணத்தில் குடியாட்சி …

கிறித்துநாள் வாழ்த்து

கிறித்துநாள் வாழ்த்து   என் பாவங்களைச் சுமப்பது நீரே உண்மையானால் என் பாவங்களால் பாதிக்கப்பட்டவரைச் சுமப்பது யார்?   பாவங்களைச் சுமப்பது மேன்மையா பாதிக்கப்பட்டவனைக் காப்பது மேன்மையா?   குற்றங்கள் மன்னிக்கப்பட்டால் குற்றங்கள் குறைந்திடலாகுமோ குற்றங்களை மன்னிப்பது குற்றங்களுக்குத் துணைபோவது அல்லவா?   இயேசுவின் இரத்தம் செயம் வாசகம் வாசித்தேன் வருத்தம் மேலிட்டது  இரத்தம் சிந்தும்  நீங்கள் பாவம் அல்லவா?   உயிர்களிடத்தில் அன்பு வை உரக்கச் சொன்ன மதம் உயிர்ப்பலி இடுகிறது இரத்தம் செயம் என்ற உங்கள் மதம் உயிர்ப்பலியை மறுக்கிறது.   வழக்கம்போல மற்றவரைப் போல் வாழ்த்து சொல்லிவிட்டுச்  சென்றிருக்கலாம் நான்   முடியவில்லை என்னால் முன்னோர்கள் வழியில் சிந்திக்க முடிந்த வரையில் புதிய பார்வையில் பார்க்கிறேன் என் பார்வையில் படுவதை என் கருத்தில் எழுவதை எழுதுகிறேன்   பரமபிதா வுக்காகப் பாவங்களைச் செய்யாது இருப்போம்…

தமிழ்த்தாய் வாழ்த்து

தமிழ்த்தாய் வாழ்த்து நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில் தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும் தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே! அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே! தமிழணங்கே! உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே! இப்பாடல்…

பக்ரீத் வாழ்த்துக்கள்

பக்ரீத் வாழ்த்துக்கள்  அஸ் ஸலாமு அலைக்கும் . இறைவன் ஆணையால் இப்ராஹிம்  தன்  மகனை  இறைபலி கொடுத்த நாளாம் . இப்படித்தானே பக்ரீத் என்னும்  தியாகத் திருநாள்  வந்ததுவாம்.  வரியோர் பசிதீர்த்து மகிழ்ந்திடவே     வாய்ப்பாய்  அமைந்த திருநாளில்  குர் ஆன் ஓதி தொழுகை செய்து  சுயநலம் தன்னைத் தியாகம் செய்து  இதயம் கனிந்து ஈகை புரிந்து  இறைவன் ஆணையை நிறைவேற்றி  மறுமை நாளில் இறைவன்முன்னே  மனமகிழ்வுடனே நின்றிடுவோம்.  கருணை நிறைந்த அல்லா அருளால்  சுவனம் தன்னில் நிலைபெறுவோம்.  பக்ரீத் வாழ்த்துக்களுடன்  சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம்  1.08.2020     

தமிழ்த்தாய் வாழ்த்து 50 ஆண்டு நிறைவு

தமிழ்த்தாய் வாழ்த்து 50 ஆண்டு நிறைவு (1970-2020) அரசு விழாக்களிலும், பொது விழாக்களிலும், இறை வணக்கப் பாடலாக “கஜவதனா கருணாகரனா” “வாதாபி கணபதே” போன்ற விநாயகர் பாடல்களே பாடப்பட்டது. சிலர் தெலுங்கு கீர்த்தனைகளைப் பாடினார்கள். 1970 மார்ச் 8 சர்வதேச மகளிர் தினத்தன்று, சென்னையில் நடைபெற்ற திரைப்படக் கலைஞர்களுக்கு…

ஈகை பெருநாள் வாழ்த்துச்செய்தி..!

ஈகை பெருநாள் வாழ்த்துச்செய்தி..! ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், கோவை மாநகரத் தலைவர் பி.எஸ் உமர் ஃபாரூக்  ரம்ஜான் வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார். அவர் தமது வாழ்த்துச் செய்தியில், ” புனித ரமலான் மாதம் 30 நாள் நோன்பு இருந்த முஸ்லிம்கள் பெருநாள் தினத்தை உலகம் முழுதும் ஈகைத் திருநாளாக கொண்டாடி மகிழ்கின்றனர். இல்லாதோருக்கு ஈந்து, அவர்களின் சிரிப்பில்…

புனித ரமலான் வாழ்த்துக்கள்

புனித ரமலான்  வாழ்த்துக்கள்      புனித ரமலான் மாதம் வந்தது      மனித நேயம் மண்ணில் மிளிர்ந்தது.      நபிகள் வழியில் நடக்கும் இஸ்லாமியர்      நாளும் குர்- ஆன் தன்னை ஓதி      ஐந்து  வேளை  தொழுகை செய்து      பகல் முழுவதும்  நோன்பிருந்து       நோன்பை முடித்து கஞ்சி குடித்து …

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்  . தமிழ்ப் பெயர் எதுவுமில்லா   தமிழ்ப் புத்தாண்டே வருக .    உன் பிறப்பிலும் சந்தேகம் ,  தையிலா , சித்திரையிலா .    பிறப்புச் சான்றிதழ்  எப்போது கொடுத்து  என் ஐயப்பாட்டை தெளிவு படுத்துவாய் .  கொடுத்தாலும் சரியென்று யார் சான்றளிப்பார் .  அதுவரை சித்திரையில் உன்னைக் கொண்டாடுவேன்    எப்படியாகினும் , இப்படியோர்…