1. Home
  2. லட்சம்

Tag: லட்சம்

மாதச் சம்ளக்காரர்கள் 1 கோடியே 89 லட்சம்பேர் வேலையிழப்பு

மாதச் சம்ளக்காரர்கள் 1 கோடியே 89 லட்சம்பேர் வேலையிழப்பு   கடந்த மார்ச் 25 அன்று பொதுமுடக் கம் அமல்படுத்தப்பட்டது தொடங்கி, ஜூலைமாதம் வரையிலான 4 மாத காலத்தில்,1 கோடியே 89 லட்சம் பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளதாக பொருளாதாரக்கண்காணிப்பு மையம் (Centre for Monitoring Indian Economy – CMIE) புள்ளிவிவரம் தெரிவித்துள்ளது. முக்கியமாக, இவர்கள் அனைவரும் முறைசாரா தொழிலாளர்கள் அல்ல; மாறாகநிலையான சம்பளத்தில் (Salaried Jobs) பணியாற்றி வந்தவர்கள் என்ற அதிர்ச்சித்தகவலையும் சிஎம்ஐஇ வெளியிட்டுள்ளது.அதாவது, கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்த ஏப்ரல் – மே காலத்தில், முறைசாரா கூலித் தொழிலாளர்கள் மட்டுமே (Informal Sector) அதிகமான அளவில்வேலையிழந்தனர். தற்போதோ நிலையான சம்பளம் பெற்ற ஊழியர்களும் (Salaried Jobs) சுமார் 1 கோடியே 89 லட்சம்பேர் வேலையை இழந்துள்ளதாக பொருளாதாரக் கண்காணிப்பு மையம் குறிப்பிட்டுள்ளது. சிஎம்ஐஇ அமைப்பின் தரவுகள்படி ஏப்ரல் மாதத்தில் நிலையான சம்பளத்தில்இருக்கும் 1.77 கோடி பேர் வேலைவாய்ப்பைஇழந்துள்ளனர். மே மாதத்தில் 1 லட்சம்பேரும், ஜூலை மாதத்தில் 50 லட்சம் பேரும்வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். ஜூன் மாதத்தில் 39 லட்சம் பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் கிடைத்துள்ளன. இறுதியாக கடந்த 4 மாதங்களில் ஒட்டுமொத்தமாக வேலைவாய்ப்பை இழந்தவர்களின் எண்ணிக்கை 1.89 கோடி என்றுசிஎம்ஐஇ கூறியுள்ளது.இந்தியாவின் மொத்த வேலைவாய்ப்புச் சந்தையில், நிலையான வேலைவாய்ப்புகளைக் கணக்கில் கொண்டால், அவை வெறும் 21 சதவிகிதம்தான். இதுமுறைசாரா துறையில் ஈடுபடுவோரின் எண்ணிக்கையை விட மிகக் குறைவுதான்.ஆனால் இந்த 21 சதவிகித வேலைவாய்ப்புகள்தான், நாட்டின் பொருளாதாரம் மற்றும்வர்த்தகச் சந்தை கட்டமைப்பிற்கு மிகவும்முக்கியமானது என்று சிஎம்ஐஇ தெரிவிக்கிறது.   நகர்ப்புற வீடுகளில் உள்ளவர்கள் தங்கள் மாதச் செலவுகளைக் குறைத்து, குறைவாக செலவு செய்கின்றனர் என்பதற்கான தரவுகள் பல்வேறு அறிக்கைகளில் உறுதியாகி இருக்கும் நிலையில், நகர்ப்புறங்களின் தேவை தொடர்ந்து குறையுமானால், அது முறைசாரா மற்றும் கிராமப்புற பொருளாதாரத்திலும் கடுமையான பணப்புழக்கத் தட்டுப்பாட்டை உருவாக்கும்; இது நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத் தும் என்று எச்சரிக்கிறது.ஏற்கெனவே, பணவீக்கம், மொத்தஉள்நாட்டு உற்பத்தி வீழ்ச்சி, தொழிற்சாலைசெயல்பாட்டுத் தரவு மற்றும் நிதிப் பற்றாக் குறை போன்ற முக்கிய குறிகாட்டிகள் தொடர்ந்து கவலையளிக்கும் விதமாகவே இருக்கின்றன என்பதையும் சிஎம்ஐஇ நினைவுபடுத்தியுள்ளது.   நமது நாட்டைப் பொறுத்தவரை, நிலையான சம்பள வேலைவாய்ப்புகள் எளிதாககைவிட்டுப் போகக்கூடியன அல்ல. ஆனால் ஒருமுறை  இந்தச் சம்பள வேலைவாய்ப்புகள் பறிபோனால் திரும்பப் பெறுவது என்பது சாத்தியமற்றது என்று கூறும் பொருளாதாரக் கண்காணிப்பு அமைப்பு, முறைசாரா துறை மற்றும் கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பு ஏப்ரல் மாதத்திலிருந்து அதிகரித்துள்ளது; ஆனால், நிலையான வேலைகளில் முன்னேற்றம் இல்லைஎன்ற யதார்த்த நிலையையும் பதிவு செய்துள்ளது.

கட்டுமானப் பணியின் போது உயிரிழந்தால் ரூ.5 லட்சம் நிவாரணம்: தமிழக அரசு உத்தரவு

கட்டுமானத் தொழிலின் போது, பணியிடத்தில் உயிரிழக்கும் தொழிலாளியின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரண நிதி அளிக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதனால், அரசின் உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது. கடந்த 1994-ஆம் ஆண்டு கட்டுமானத் தொழிலாளர் நலவாரியம் அமைக்கப்பட்டது. இந்த…

பள்ளிகளுக்கு குடிநீர் சுத்திகரிப்பு கருவிகள் பொருத்த ரூ.25 லட்சம் ஒதுக்கீடு

முதுகுளத்தூர் தொகுதியைச் சேர்ந்த 9 அரசுப் பள்ளிகள் மற்றும் ஒரு தனியார் பள்ளி ஆகியவற்றுக்கு, தொகுதி எம்.எல்.ஏ. மு. முருகன், தொகுதி மேம்பாட்டு வளர்ச்சி நிதியில் இருந்து ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இது குறித்து மேலும் முதுகுளத்தூரில் திங்கள்கிழமை அவர் தெரிவித்தது: முதுகுளத்தூர் தொகுதியைச் சேர்ந்த…

பூட்டிய வீட்டில் ரூ. 1 லட்சம், 2 பவுன் நகை திருட்டு

முதுகுளத்தூர் அருகே பூட்டிய வீட்டில் பீரோவை உடைத்து ஒரு லட்சம் பணம் மற்றும் 2 பவுன் நகை திருடப்பட்டதாக புகார் செய்யப்பட்டுள்ளது. தேவர்குறிச்சியைச் சேர்ந்த ராஜேந்திரன் மனைவி பஞ்சவர்ணம்(35). இவர் செவ்வாய்க்கிழமை  பகலில் வீட்டை பூட்டி சாவியை ஜன்னலில் வைத்து விட்டு அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று…

முதுகுளத்தூர் அருகே வாகனச் சோதனையில் ரூ. 1.75 லட்சம் பறிமுதல்

முதுகுளத்தூர் அருகே தேர்தல் பறக்கும் படையினர் வெள்ளிக்கிழமை வாகனச் சோதனை செய்ததில் ரூ. 1.75 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் சட்டப்பேரவை தொகுதிக்கான தேர்தல் பறக்கும் படையினர் கூட்டுறவு சார்பு பதிவாளர் தண்டபாணி, சப்-இன்ஸ்பெக்டர்  கருப்புச்சாமி ஆகியோர் தலைமையில் சிக்கலில் இருந்து ராமநாதபுரம் செல்லும் இசிஆர்…

முதுகுளத்தூரில்கடையை உடைத்து ரூ.4.60 லட்சம் திருட்டு

முதுகுளத்தூரில் புதன்கிழமை இரவு பலசரக்குக் கடையின் மேல் பகுதியை உடைத்து 4 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயை திருடிச் சென்றனர். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரில் தனியார் பள்ளி அருகில் ஏனாதி பூங்குளத்தைச் சேர்ந்த சுந்தரவேல் மகன் தெட்சணாமூர்த்தி (33) பலசரக்குக்கடை வைத்துள்ளார். புதன்கிழமை இரவில் வழக்கம் போல் கடையை…

சிறந்த தமிழ் நூலுக்கு ரூ.6 லட்சம் ரொக்கப் பரிசு

சிறந்த தமிழ் நூலுக்கான சர்வதேச விருது மற்றும் ரூ.6 லட்சம் ரொக்கப் பரிசுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மலேசியாவின் தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம் அறிவித்துள்ளது. இது குறித்து அச் சங்கத்தின் செய்தித் தொடர்பாளரும், மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கத் தலைவருமான பி.ராஜேந்திரன் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழர்கள்…

ஊராட்சி செயலர்களுக்குரூ.3 லட்சம் சம்பள பாக்கி

முதுகுளத்தூர்:முதுகுளத்தூர், கடலாடி பகுதிகளில், உள்ளாட்சி தேர்தல் முன்பகைகளால், ஊராட்சி செயலர்கள் சிலருக்கு, இரண்டு ஆண்டுகள் வரை சம்பள பாக்கி உள்ளதால், சம்பளத்தை பெற, கட்டாய இட மாறுதலை ஊராட்சி செயலர்கள் பெற்று செல்கின்றனர். கடந்த 2011 உள்ளாட்சி தேர்தலின்போது, தற்போது இருக்கும் ஊராட்சி தலைவர்களுக்கு எதிராக, ஊராட்சி செயலர்கள்…