1. Home
  2. முடிவு

Tag: முடிவு

முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி தேர்வு முடிவுகள்

முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி தேர்வு முடிவுகள் முதுகுளத்தூர் : இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி பிளஸ் டூ மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வில் பெற்ற தேர்ச்சி விகிதம் குறித்து தலைமையாசிரியர் எஸ். சுல்தான் அலாவுதீன் கூறியிருப்பதாவது : பிளஸ் டூ தேர்ச்சி தேர்வு எழுதிய 238…

நண்பனா? எதிரியா? முடிவு செய்

நண்பனா? எதிரியா? முடிவு செய் சிறு கதை அந்தக் கிராமத்தில் ஒரு ஏழை விவசாயி இருந்தான். அவனுக்கு பக்கத்து வீட்டில் ஒரு வேட்டைக்காரன் இருந்தான். வேட்டைக்காரனிடம் அவன் வேட்டைக்கு பயன்படுத்தும் வேட்டை நாய்கள் சில இருந்தன. வேட்டைக்காரனின் நாய்கள் அடிக்கடி வேலி தாண்டி சென்று விவசாயியின் ஆட்டுக்குட்டிகளை துரத்துவதும்…

முடிவு

முடிவு இரா சத்திக்கண்ணன் ———— கானா சுருதியில்  தேவாரம் தாரை தப்பட்டை கூத்தாட்டம்   தலைவிரிகோலமாய்  குழுமி  நெற்றியிலும் நெஞ்சிலுமடித்து அழுது புலம்பும் சோகம்    தயாராகும்  பனைஓலை  பாடையும் பூமாலையும்   தெர்மாஸ்  பிளாஸ்கில்  சூடான காப்பி வருவோர்கெல்லாம்    துக்கம்  விசாரிக்க  யதார்த்தமான  வரிகள்   …

எப்போது முடிவுக்கு வரும் இந்த பாரபட்சம் ?

  எப்போது முடிவுக்கு வரும் இந்த பாரபட்சம் ? -திருச்சி A.முஹம்மது அபூதாஹிர் தோஹா – கத்தார் thahiruae@gmail.com Mob  .974 + 66928662 மும்பையில் மதத்தை காரணம் காட்டி ஹரே கிருஷ்ணா என்னும் தனியார்  ஏற்றுமதி நிறுவனம் ஜீஷான் கான் என்னும் எம்.பி.ஏ முஸ்லிம் முஸ்லிம் பட்டதாரிக்கு…

எஸ்.எஸ். எல். சி. தேர்வு முடிவு

2014_ 2015 ம் ஆண்டு நடைபெற்ற 10 ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி  94% தேர்ச்சி பெற்றுள்ளது முதல் மதிப்பெண் : நிவேதா 489 இரண்டாம் மதிப்பெண் : சர்மிளா 487 மூன்றாம் மதிப்பெண் : லிங்கேஸ்வரி 485 சிறப்பிடம் பெற்ற மாணாக்கர்களுக்கும், தேர்ச்சி…

படைத்தவனின் முடிவை ஏற்கப் பழகுங்கள்!

உங்களுடன் நான் – மனம் விட்டு 02   பெ ற்றவர்களுக்குப் பிள்ளைகளின் நலனும் முன்னேற்றமும்தான் கனவு. பிள்ளைகள் வளர, வளர பெற்றோர்கள் பசியைமறப்பார்கள்; உறக்கத்தைத் துறப்பார்கள்; உடன் பிறந்தவர்களைக்கூட, பிள்ளைகளுக்காக –கூடாது என்றாலும்– பகைப்பார்கள்.பேச்சு, மூச்சு, உழைப்பு எல்லாவற்றையும் பிள்ளைகளுக்காக அர்ப்பணிப்பார்கள்.   சுருங்கக் கூறின், பிள்ளைகள்தான் பெற்றோரின் உலகம். தன்னைவிட, தன் முன்னேற்றத்தைவிடப் பிள்ளைகளின் முன்னேற்றமேஅவர்களுக்கு இலக்கு. தான் தோற்றாலும் பிள்ளை ஜெயிக்க வேண்டும்; தன் இழப்பு பெரிதல்ல; பிள்ளையின் சிறு சறுக்கல்கூட பேரிழப்புஎன எண்ணுவார்கள்.   இதனால்தானோ, என்னவோ! தந்தையைப் பற்றிப் புகார் தெரிவிக்க வந்த மகனிடம், “நீயும் உன் செல்வங்களும் உன் தந்தைக்கேஉரியவை” என நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். (இப்னுமாஜா)   தங்களின் தியாகத்திற்குப் பிள்ளைகளிடமிருந்து பெற்றோர்கள் நன்றிக்கடனை எதிர்பார்ப்பதில்லை. பிள்ளைகள் நோகவைத்தாலும் பலபெற்றோர்கள் சாபம் கொடுப்பதில்லை. அவன் ஒதுக்கிவைத்தாலும் விலகி நின்று வாழ்த்தும் உள்ளம் அவர்களுடையது. அவன்வாழ்வதன்மூலம் தான் வாழ்வதாகப் பூரித்துப்போகிறார்கள்.   பிள்ளைகளின் படிப்பு, வேலைவாய்ப்பு, திருமண வாழ்க்கை என ஒவ்வொன்றிலும் பெற்றோரின் ஈடுபாடும் கவலையும் வியக்கத்தக்கவை. எல்லாவற்றையும்விட, தனக்காக இறைவனிடம் இறைஞ்சும்போது கண் கலங்காத பெற்றோர், பிள்ளைக்காக துஆசெய்யும்போது மட்டும் தேம்பித் தேம்பி அழுகிறார்கள்.   இதோ என் சொந்தக் கதை. என் இளைய மகன் –மூத்த மகனைப் போன்றே– படிப்பில் சுட்டி. வேலூர் ‘பாகியாத்’தில் நான்பணியாற்றியபோது அங்கு பிறந்தவர். துவக்கப் பள்ளி படிப்பு அங்குதான்.   1998இல் சென்னை வந்தபின் இராயப்பேட்டையில் உள்ள ஒரு சாதாரண மேல்நிலைப் பள்ளியில் பத்துவரை படிப்பு; 11,12 அதே பகுதியில்வேறொரு பள்ளியில், என்னை வற்புறுத்தி சேர்ந்து படித்தார்.   பிளஸ்-2 தேர்வில், மருத்துவக் கல்லூரி படிப்பிற்கு வேண்டிய முக்கியமான மூன்று பாடங்கள் ஒவ்வொன்றிலும் 200க்கு 199மதிப்பெண்கள். தினமணி உள்பட சில பத்திரிகைகளில் புகைப்படத்துடன் செய்தி வெளிவந்தது. இப்போது இருப்பதைப்போல பிளஸ்–2மதிப்பெண்களைக் கொண்டே மருத்துவம், பொறியியல் படிப்புகளில் சேர முடிந்திருந்தால், பையனுக்கு நிச்சயமாக எம்.பி.பி.எஸ்.படிப்புக்கான இடம் —அதுவும் சென்னையிலேயே– கிடைத்திருக்கும்!   ஜெயலலிதாவின் முந்தைய ஆட்சிக் காலம். நுழைவுத் தேர்வு உண்டா, இல்லையா என்பதில் குழப்பமோ குழப்பம்! உண்டு என்பர்ஒருநாள்; இல்லை என்பர் மறுநாள். இந்தக் குழப்பத்தில் நுழைவுத் தேர்வுக்கும் பையன் தயாராகிக்கொண்டிருந்தார். இறுதியாக, நுழைவுத்தேர்வு நடத்தியாக வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டது. அப்போதும்கூட, உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடுசெய்யப்போகிறது என்ற செய்தி வேறு.   முடிவில் நுழைவுத் தேர்வு நடந்துமுடிந்தது. அதில் கலந்துகொண்டாலும் திருப்தியாகத் தேர்வு எழுதவில்லை என்று தெரிந்தது.கலந்தாய்வு (கவுன்சிலிங்) நடந்தபோது, மருத்துவப் படிப்பில் எம்.பி.பி.எஸ். இடமும் கிடைக்கவில்லை; பி.டி.எஸ். இடமும்கிடைக்கவில்லை. சரி மருத்துவத் துறையை மறந்துவிட்டு, பொறியியல் பாடத்தில் சேர்ந்துகொள்ளுமாறு நாங்கள் அனைவரும்எவ்வளவோ எடுத்துச்சொல்லியும் பையன் இசையவில்லை.   துணை மருத்துவத் துறையில் பிஸியோதெரபி (PT) படிப்பிலாவது நான் சேர்ந்தே ஆவேன் என்று பிடிவாதம் பிடித்து, அதையேதேர்ந்தெடுத்தார். முதல் ஆளாக இடமும் கிடைத்தது.   இங்கேதான், நான் குறிப்பிட்டு உணர்த்த விரும்பும் ஒரு தகவல் உண்டு. மருத்துவப் படிப்பிற்கான இடம் கிடைக்காது என்றுமுடிவானபோது, பையன் மட்டுமன்றி, தந்தையாகிய நான் உள்பட குடும்பத்தார் அனைவரும் சோகத்தில் ஆழ்ந்துவிட்டோம். கைகூடாதுஎன்று தெரிந்தும் பல்வேறு முயற்சிகள்; சந்திப்புகள்; ஆலோசனைகள். இவ்வளவு ஓதிப்படித்த நானே மனத்தளவில் பெரும்பாதிப்புக்குள்ளானேன்; கலங்கிப்போனேன். என்ன இப்படி ஆகிவிட்டதே! என்ற கவலை என்னைத் தின்றது; சோகம் என்னைக் கொன்றது.   நான் ‘பாக்கியாத்’தில் ‘ஃபாஸில்’வரை ஓதிமுடித்த அடுத்த ஆண்டு, அங்கேயே ஆசிரியர் பணிக்குப் பல முயற்சிகள் மேற்கொண்டேன்.ஒன்றும் பலிக்கவில்லை. அப்போதுகூட ஏற்படாத மனவலி இப்போது ஏற்பட்டதுதான் ஆச்சரியம்!…

முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி எஸ்.எஸ்.எல்.தேர்வு முடிவு

பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி முதுகுளத்தூர் 623704 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு 2012-2013 தேர்ச்சி சதவீதம் : 96.7 (296/306)   முதல் மதிப்பெண்: 488 எம். முகம்மது அஸ்வாக் இரண்டாவது மதிப்பெண் : 484 எம். பாத்திமா சித்திகா எஸ்.விஜய் மூன்றாவது மதிப்பெண் : 483 எஸ். அனி~h   சிறப்பிடம்…