1. Home
  2. நோய்

Tag: நோய்

சந்தேகம் என்னும் நோய்…!

இன்றைய சிந்தனை (25.01.2021) ………………………………………………………………………… “சந்தேகம் என்னும் நோய்…!” ………………………………………………………. உடலில் ஏற்படும் நோயை குணப்படுத்த மருந்து உண்டு. ஆனால்!, மனதில் ஏற்படும் “சந்தேகம் என்னும் நோய்” தீர்க்க முடியாத ஒன்று. ஒரு முறை சந்தேகம் வந்து விட்டால் அது பல உறவுகளுக்கு கொள்ளிக்கட்டையாக அமைந்து விடும். நீங்கள்…

வைரஸ்களுக்கு எதிராக செயல்பட்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்…!!

வைரஸ்களுக்கு எதிராக செயல்பட்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்…!! உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தாலே காற்றில் சுற்றித் திரியும் நோய் கிருமிகள் தாக்கும் அபாயம் உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை வலிமையாக்கினால் அது கிருமித்தொற்று, வைரஸ்களோடு போராடி உடலைப் பாதுகாக்கும். வைட்டமின் சி அதிகம்…

சங்கக் காலத்தில் நோய் தீரத் தனிமைப்படுத்தல்

சங்கக் காலத்தில் நோய் தீரத் தனிமைப்படுத்தல் (Quarantining in Sangam Period) பேய்வேறு நோய்வேறு உண்டா? பேய் பிடிக்கிறதென்றால் தீமை தொற்றுகிறதென்று பொருள். ஆங்கிலத்திலே Infection என்று சொல்கிறோம். தீமை தொற்றினால், மனத்தை உடலை அல்லது இரண்டையும் பாதிக்கும். தங்கம், வெள்ளி, செப்பு போன்ற மாழைகளில்(metal) ஒன்றினால் செய்யப்பட்ட கழல்,…

கொரோனா நோய் காற்றின் மூலம் பரவும்..

கொரோனா நோய் காற்றின் மூலம் பரவும்.. உலக சுகாதார நிறுவனம் ஒப்புதல் !   அப்படியானால் ஒரு தெருவிலுள்ள நோயாளியிடமிருந்து வேறு ஒரு தெருவில் இருக்கும் ஒருவருக்கு காற்றின் மூலம் நோய்  பரவுமா?  ஓர் அலசல். முதலில் கொரோனா நோய் எப்படியெல்லாம் பரவுகிறது என்று பார்ப்போம். இது கீழ்க்கண்ட மூன்று வகைகளில் பரவுகிறது. 1 Droplet infection -நீர்த்திவலைகள் மூலம் 2. Droplet nuclei – நுண்திவலைகள் கருக்கள் மூலம் – இதைத் தான் நாம் காற்றின் மூலம் பரவுதல் என்கிறோம் 3. Fomites – தொடுபொருட்கள் மூலம். இவற்றை  விரிவாகப் பார்ப்போம்.  அதாவது நோயுள்ள ஒருவர் இருமும்போதோ தும்மும்போதோ, பேசும்போதோ அல்லது பாடும்போதோ  வைரஸ் கிருமியானது மூச்சுக் குழல் வழியாக வெளியேறுகிறது. அவ்வாறு வெளியேறும்போது மூச்சுக் குழலிலுள்ள  காற்று, நீர்  மற்றும் இறந்துபோன அணுக்கள் இவைகளுடன் வைரஸ்  சேர்ந்து பல வகை அளவுகளில் உள்ள  நீர்த்துளிகளாக வெளியேறுகிறது. இது வேறு ஒருவரின் மூச்சுக் குழலுக்கு நேரடியாகவோ அல்லது  இந்தக் காற்றை சுவாசிப்பதன் மூலமாகவோ அல்லது  இந்த வைரஸ் படிந்த பொருட்களைத் தொட்டுவிட்டு அதே கைகளைக் கொண்டு வாய், மூக்கு மற்றும் கண்களைத் தொடுவதாலோ சென்று நோயை ஏற்படுத்துகிறது. இந்த வைரஸ் அடங்கிய நீர்த்துளிகள் எப்படி அடுத்தவரின் மூச்சு மண்டலத்திற்கு செல்கிறது? இங்கேதான் இந்த நீர்த்துளியின்  அளவு  முக்கியத்துவம் பெறுகிறது. ஒரு நீர்த்துளியின் அளவு 5 மைக்ரானிற்கு (ஒரு மைக்ரான் அல்லது ஒரு மைக்ரோமீட்டர் என்பது ஒரு மில்லிமீட்டரில் ஆயிரத்தில் ஒரு பங்கு) மேற்படும்போது அதை நீர்த்திவலை (droplet) என்கிறோம். அதுவே  5 மைக்ரானுக்குக் கீழாகும்போது அதை நுண்திவலைகள் (droplet nuclei…

கொள்ளை நோய் தந்த இலக்கியம்

கொள்ளை நோய் தந்த இலக்கியம்   பெரிய அனுபவமான கொள்ளை நோய்கள் இருக்கும்போதும், அவை நம்மைக் கடந்த பிறகும் சில பண்பாட்டு விளைவுகள் வருவது இயல்பு. நல்லது, கெட்டது பற்றிய நம் தெளிவு குலைவது உண்டு. மக்களின் அனுபவம் ஆழமாகி இலக்கியங்களும் உருவாகியுள்ளன. கதைக்குள் வரும் கதைகளாக “டெக்கமரான்” என்று பெயரிட்டு ஒரு கதைத் தொகுப்பு எழுதினார் பதினான்காம் நூற்றாண்டு இத்தாலியக் கவிஞர் ஜொவான்னி பொக்காச்சோ. ஒட்டுவாரையெல்லாம் ஒட்டிக்கொண்டு ஃப்ளாரண்டைன் நகர மக்களில் பாதிக்கும் மேல் வாரிக்கொண்டுபோன பிளேக் தொற்று அவர்களின் அன்றாட நெறிகளை என்ன செய்தது என்று அவர் விவரிக்கிறார். எதையும் நிச்சயமாக அறிந்துகொள்வது மனிதர்களுக்குச் சாத்தியமா என்று நாம் என்றைக்கும் கேட்க மாட்டோம். அறிவின் நிச்சயத்தன்மைக்கு நாம் இப்படிப் பழகிக்கொண்டதால், ஆல்பெர் காம்யு எழுதிய “கொள்ளைநோய்” என்ற பிரெஞ்சு நாவல் எதையும் நிச்சயமாகச் சொல்ல முடியாது என்று கூறுவது நம்மை அதிரவைக்கும். நிச்சயமில்லாத சூழலில் நிற்பவர்கள் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதை நாவலின் ஒரு கதாபாத்திரம் இப்படிச் சொல்கிறது : “இதை பிளேக் என்று எடுத்துக்கொண்டு நாம் செயல்பட வேண்டும். அப்படிச் செயல்படும்போது அந்த முடிவுக்கும் நாம் பொறுப்பேற்க வேண்டும்.” உலகத்தில் மனிதனின் நிலைமை பற்றியும், நாம் செய்யக்கூடியது பற்றியும் காம்யு இதையேதான் சொல்கிறார். நாம் செய்ய வேண்டிய முடிவுக்கு நமக்கு வெளியே ஒரு வழிகாட்டி இல்லை. மறைகளை, நெறிகளை, இறைவனையெல்லாம் நம் முடிவுக்குப் பொறுப்பாக்க முடியாது. எல்லாவற்றையும் தீர்மானித்துக் கொண்டிருந்த இறைவன் இருந்த இடம் இப்போது வெற்றிடம். நம் செயல் வழியாக நாமே தீர்மானிப்பதுதான் உண்மையாக வாழ்வதாகும். கொரோனா காலத்தில் உலகம் முழுதும் மக்கள் மறுவாசிப்பு செய்யும் நாவல் காம்யுவின் “கொள்ளைநோய்”. கதைக்காக அல்ல, காம்யுவின் தத்துவ மரபுக்காக அந்த நாவலை மீண்டும் வாசிக்கிறார்கள். கொரோனாவால் ஆழப்பட்ட மக்களின் அனுபவத்துக்கு காம்யுவின் நாவல் இப்போதும் ஒரு உருவம் கொடுத்து உதவியிருக்கும். – மே 31 தமிழ் இந்துவில் எழுதிய திரு. தங்க.ஜெயராமன் எழுதிய கட்டுரையிலிருந்து)

உலகை அலற வைத்த நோய்களின் கோர தாண்டவம்!

உலகை அலற வைத்த  நோய்களின் கோர தாண்டவம்! (டாக்டர் ஏ.பீ. முகமது அலி, பிஎச்.டி., ஐ.பீ.எஸ்(ஓ ) கடந்த இரண்டு மாதங்களாக உலகையே பதற வைக்கும்  நோயாக கொரானா இருக்கின்றது. உலக நாடுகளுக்கிடையே ஏற்படக் கூடிய சண்டைகளில் பயோ-கெமிக்கல் ஆயுதம் மிகவும் ஆபத்தான மனித கொல்லி ஆயுதமாக கூறப்…

சிறுநீரின் நிறத்தை வைத்தே உடலில் ஏற்பட்டுள்ள நோய்களை கண்டறிய…!!!

சிறுநீரின் நிறத்தை வைத்தே உடலில் ஏற்பட்டுள்ள நோய்களை கண்டறிய…!!! நம் உடலில் தேவையானவற்றை ஊட்டச்சத்தாக, கொழுப்பாக பிரித்து எடுத்த பிறகு வேண்டாதவற்றை உடல் மலமாகவும் சிறுநீராகவும் வெளியேற்றுகிறது. ஆரோக்கியமாக இருக்கும் ஒருவர் குறைந்தபட்சம் 7 நொடிகளாவது சிறுநீர் கழியும். மிக அவசரமாக சிறுநீர் கழிப்பது போன்ற உணர்வு இருந்தும்…

நோய்கள் உருவாகும் இடங்கள் !

நோய்கள் உருவாகும் இடங்கள் ! ——————————————- நோய்கள் உருவாகும் இடம் சாக்கடையோ, கொசுவோ, நீரோ, காற்றோ கிடையாது. இதோ 1 – இரசாயன வேளாண்மையில் விளைந்த உணவுப்பொருட்கள் 2 – டீ 3 – காபி 4 – வெள்ளை சர்க்கரை 5 – வெள்ளை சர்க்கரையில் செய்த…

அவசரம் எனும் நோய்!

அவசரம் எனும் நோய்! டாக்டர் ஜி ராமானுஜம் “உலகிலேயே எதையும் சாதிக்கக்கூடிய இரண்டு மாவீரர்கள்- காலமும் பொறுமையும்” – லியோ டால்ஸ்டாய் – போரும் அமைதியும் நாவலில்… விடாமுயற்சி, விடாது கறுப்பு போல் இந்த வாரமும் நம்மைத் தொடர்கிறது. விடாமுயற்சியின் மச்சம் வைத்த மாறுவேடம்தான் பொறுமை. ‘இந்த நூற்றாண்டின் தீர்க்க முடியாத நோய்களில் ஒன்று அவசரம்’ என்பார்…

கேன்சர்

சிறு வயதில் நாம் சினிமாவில் கேள்விபட்ட நோய் – கேன்சர். இன்று, சுகர் பிரஷர் போல கேன்சரும் கடும் வேகத்தில் மக்களிடையே பரவிக்கொண்டு இருக்கிறது…!! நீர், நிலம், காற்று, ஆகாயம் என எல்லாவற்றையும் மனிதன் மாசு படுத்தியதன் எதிர்வினை இது.! இன்னும் மேலும் மேலும் மத்திய மாநில அரசுகள்…