1. Home
  2. நூலகம்

Tag: நூலகம்

துபாய் நூலகத்துக்கு நூல் அன்பளிப்பு

துபாய் நகரில் உள்ள 89.4 தமிழ் எஃப்.எம். பண்பலை வானொலி செயல்பட்டு வருகிறது. இந்த வானொலி நிலையத்தில் உலகில் முதன் முறையாக பொதுமக்கள் படிக்கும் வகையில் நூலகத்தை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடந்த ஆண்டு திறந்து வைத்தார். இந்த நூலகத்துக்கு ஈரோடு கு.…

அமெரிக்காவின் சான் பிரன்சிஸ்கோ நூலகத்தைவிட பிரம்மாண்டமானது: மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம்

அமெரிக்காவின் சான் பிரன்சிஸ்கோ நூலகத்தைவிட பிரம்மாண்டமானது: மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம்மதுரை: மதுரையில் உலகத் தரத்தில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் மிகப் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது. இதனை வரும் 15-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்துவைக்கிறார். தமிழகத்தில் இதுவரை சென்னையில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் மட்டுமே…

தென்னாசியாவின் மிகப்பெரும் நூலகம் யாழ் நூலகம் எரிந்து 40 ஆண்டுகள்

தென்னாசியாவின் மிகப்பெரும் நூலகம் யாழ் நூலகம் எரிந்து 40 ஆண்டுகள் —  கானா பிரபா அந்த விசாலமான மண்டபத்தின் தரை முழுவதுமே சாந்தும் சாம்பலுமின்றி, வேறெதுவும் காணப்படவில்லை. ஓர் இடுகாட்டின் மத்தியில் நிற்பது போன்ற உணர்ச்சி பரவியது. “எமக்கு ஏன் இந்தக் கொடுமையைச் செய்தார்கள்?” கலங்கிய கண்களோடு யாழ்…

நூலகம்

ஒருகோடி கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது, ஒரு நூலகம் கட்டுவேன் என்று பதிலளித்தாராம் மகாத்மா… ஆசியாவில் பெரிய நூலகம் பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூலகம். லண்டனில் எங்கு தங்க விரும்புகிறீர்கள் என்று கேட்ட பொழுது,” நூலகம் அருகில் வீடு பாருங்கள்” என்று சொன்னவர் அண்ணல் அம்பேத்கர். நூலக…

வீட்டுக்குள்ளே நூலகம்

வீட்டுக்குள்ளே நூலகம்   தொழில்நுட்பத்தின் பெயரால் நம் வாழ்க்கையை ஆக்கிரமித்துவிட்ட செல்போனும் கணினியும் நம் குழந்தைகளின் மழலைத்தன்மையைப் பறித்துவிடுகின்றனவோ என்று தோன்றுகிறது. சுற்றியிருக்கிறவர்களுடன் பழகாமல் சிறியவர்களும் பெரியவர்களும் மெய்நிகர் உலகத்துக்குள் மூழ்கிக் கிடப்பது உறவுப் பிணைப்பை வலுவிழக்கச் செய்கிறது. இன்று குழந்தைகளிடம் காணப்படும் பொறுமையற்ற தன்மைக்கும் இதுவே காரணம்.   யாரோ உருவாக்கிய மெய்நிகர் உலகிலிருந்து குழந்தைகளை மீட்டு, அவர்களுக்கான கனவுலகை அவர்களே அமைக்கும்படி செய்ய வேண்டுமல்லவா? அதற்குத்தான் கதைகளைக் கையிலெடுத்தேன். புதுச்சேரியில் செயல்பட்டுவரும் அரசுசாரா தொண்டு நிறுவனம் ஒன்றுடன் இணைந்து குழந்தைகளுக்குக் கதைசொல்லியாக மாறியிருக்கிறேன். கதை கேட்டு வளரும் குழந்தைகள், பிறர் போட்டுவைத்திருக்கும் பாதையில் கடிவாளமிட்டபடி நடப்பதில்லை. அவர்களின் சிந்தனை விரிகிறது, கற்பனைக்குச் சிறகு முளைக்கிறது. தன்னை உணர்வதுடன் சுற்றி நடப்பவற்றையும் புரிந்துகொள்கிறார்கள்.   கதைகளைக் கேட்பதைப் போலவே புத்தக வாசிப்பும் குழந்தைகளை மேம்படுத்தும் என்பதால், குழந்தைகளுக்கான புத்தகங்களைச் சேகரிக்கத் தொடங்கினேன். வாங்கிய புத்தகங்களைக் கொண்டு என் வீட்டிலேயே சிறு நூலகம் ஒன்றை அமைத்திருக்கிறேன். இரண்டு முதல் எட்டு வயதுவரையுள்ள குழந்தைகளுக் கான நூலகம் இது. இதில் நானூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இருக்கின்றன. குழந்தைகள் தங்களுக்குப் பிடித்த புத்தகங்களை வீட்டுக்கு எடுத்துச் சென்று படித்துவிட்டு வரலாம்.   எளிமையான நடையில் இருக்கும் ஆங்கிலச் சிறார் புத்தகங்கள், குழந்தைகளின் மொழியறிவையும் சேர்த்தே வளர்க்கும். தமிழில் வெளிவரும் சிறுவர் இதழ்களும் இங்கே உண்டு. எதிர்காலச் சமூகம் அறிவில் மேம்பட்டதாக இருக்க வேண்டும் என்றால் இளைய சமூகத்துக்கு அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித்தர வேண்டும்தானே. அதனால்தான் குழந்தைகளின் வாசிப்புக்காக என்னால் முடிந்த அளவுக்குப் புத்தகங்களைச் சேர்த்துவருகிறேன். நன்றி : ஆகஸ்ட் 9 தமிழ் இந்து பெண் இன்று இணைப்பில் பானுபிரியா ஜெகதீசன் எழுதிய கட்டுரை.  

சென்னையில் நூலகம்

GOVINDASAMY BOOPATHI <gboopathi2010@gmail.com> GLOBAL REFERENCE AND INFORMATION SERVICES 274, ARUL NAGAR URAPAKKAM WEST CHENNAI-603211 NEAR NEELAN MATRICULATION SCHOOL 9382201800/9444762972 WE ARE MAINTAINING A RESEARCH LIBRARY FOR THE NEXT GENERATION. IT CONTAINS 30 YEARS ENGLISH AND…

ஷார்ஜாவில் வாசிப்புத் திறனை மேம்படுத்த உதவும் நூலகம்

ஷார்ஜாவில் வாசிப்புத் திறனை மேம்படுத்த உதவும் நூலகம் ஷார்ஜா : ஷார்ஜாவில் பள்ளிக் குழந்தைகளின் வாசிப்புத் திறனை மேம்படுத்த உதவும் வகையில் ‘திவ்யா நூலகம்’ கடந்த டிசம்பர் 2013 முதல் அபு சகரா பூங்கா அருகில் செயல்பட்டு வருகிறது. ’இன்றைய வாசகர் நாளைய தலைவர்’ எனும் வாசகத்தை மையமாகக்…

நூலகம் நாடு-நான் அதன் மன்னன்!!

நூலகம் நாடு-நான் அதன் மன்னன்!! -எசேக்கியல்காளியப்பன்- மச்சுதான் நாடு! மற்றிப்,  புத்தகம் மக்கள்! அன்னார்  குச்சுதான் பெட்டி; கொண்ட,  சொற்களே பேச்சு! வேறு என்  இச்சைதான் சட்டம்; எந்தன்,  எழுத்துதான் திட்டம், திட்டத்  தச்சனும் நானே! ஆட்சித்  தலைவனும் நானே! காண்பாய்!  புலவரே முன்னோர்; காணும்  புலமையே மொழியாம்!…

தமிழக நூலகங்கள் – மு. இராமனாதன்

தமிழகத்தில் 32 மாவட்ட மத்திய நூலகங்கள், 1,664 கிளை நூலகங்கள், 1,795 கிராம நூலகங்கள், 539 பகுதிநேர நூலகங்கள், ஆக 4,042 நூலகங்கள் உள்ளன. இவை தவிர, சென்னையில் கன்னிமாரா நூலகமும் அண்ணா நூலகமும் உள்ளன. தமிழகமெங்கும் மக்கள் செலுத்தும் சொத்து வரியில் 10% நூலகங்களுக்கு ஒதுக்கப்படுகிறது; இது…

நூலகத்தை அரசு கட்டடத்துக்கு மாற்றக் கோரிக்கை

முதுகுளத்தூரில் தனியார் கட்டடத்தில் இயங்கி வரும் நூலகத்தை அரசு கட்டடத்துக்கு மாற்றக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் 1957ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மைய நூலகம் தற்போது வரை தனியார் கட்டடத்தில் மாத வாடகையில் இயங்கி வருகிறது. இந்த நூலகத்துக்கு வாசகர்கள் 1 கி.மீ. தூரம் நடந்து செல்ல…