1. Home
  2. தில்லி

Tag: தில்லி

“தற்சார்பு இந்தியா” என சொல்வது நாடகமா? .. தில்லி உயர் நீதிமன்றம் கேள்வி

“தற்சார்பு இந்தியா” என சொல்வது நாடகமா? .. தில்லி உயர் நீதிமன்றம் கேள்வி   விமான நிலையங்கள் தொடர்பான ஏலத்தில் பங்கேற்கும் நிறுவனங்களின் தகுதியை (Eligibility Criteria) மாற்றி அமைத்திருக்கும் விஷயத்தில், மத்திய அரசின் செயல் அதிருப்தி அளிப்பதாகவும்; மேக் இன் இந்தியா, தற்சார்பு இந்தியா முழக்கங்கள் பாசாங்குத்தனமானதா என்ற சந்தேகத்தை வரவழைப்பதாகவும் தில்லி உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. விமான நிலைய பராமரிப்புப் பணி தொடர்பான ஏலத்தில் பங்கேற்கும் நிறுவனங்களுக்கான தகுதியை, திடீரென மத்திய அரசு மாற்றியமைத்தது. அதாவது, சரக்குகள் கையாளுதல், விமானங்களை சுத்தம் செய்தல் உள்ளிட்ட சேவைகளுக்கான இந்த ஏலத்தில், ஆண்டுக்கு ரூ.35 கோடி விற்றுமுதல் இருக்கும் நிறுவனங்கள்தான் பங்கேற்க முடியும் என புதிய விதியைக் கொண்டு வந்தது.இதற்கு எதிராக மத்திய விமானக் கொள்கை, பாதுகாப்பு மற்றும் ஆய்வு (Centre for Aviation Policy,Safety and Research – CAPSR)அமைப்பு, தில்லி உயர் நீதிமன்றத் தில் அண்மையில் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கில்தான், நீதிபதிகள்விபின் சாங்கி, ரஜனிஷ் பட்நாகர் ஆகியோர் மத்திய அரசை கடுமையாக சாடியுள்ளனர். மத்திய அரசின் நிலைப்பாடு எங்களுக்கு வேதனை அளிக்கிறது. ஒருபுறம் மேக் இன் இந்தியா, தற்சார்பு இந்தியா என்று பிரச்சாரம் செய்கிறார்கள். மறுபுறம், விமான நிலையசேவைக்கான டெண்டரில் சிறு நிறுவனங்களைத் துரத்தி விடும் வகையில் விதிகளை மாற்றுகிறார்கள்.மத்திய அரசும், இந்திய விமான நிலையங்கள் ஆணையமும் சிறு நிறுவனங்களை ஏலத்திலிருந்து வெளியேற்ற விரும்பினால், ‘இதுதான் எங்கள் கொள்கை’ என்று வெளிப்படையாக துணிச்சலாக கூறுங்கள். அரசியல் தலைமைப் பதவியில்உள்ளவர்கள் ‘மேக் இன் இந்தியா’,‘தற்சார்பு இந்தியா’ பற்றிப் பேசுகிறார்கள். உள்நாட்டு தொழில்களைவளர்க்க வேண்டும் என்று கூறுகிறார்கள். ஆனால், விமான நிலையங்கள் ஆணையத்தின் செயல்பாடு அவர்களின் வார்த்தைக்குப் பொருத்தமாக இல்லை. முழுவதும் பாசாங்குத்தனமாகவே (Hypocritical) இருக்கிறது. இதுபோன்று சிறிய நிறுவனங்களை வெளியேற்றும் விதத்தில் நடந்துகொண்டால், எதற்காக, ‘மேக் இன் இந்தியா’ பற்றி அரசியல்தலைவர்கள் பேசுகிறார்கள்? இந்தியாவில்தான் தயாரிக்க வேண்டும் என்று கூறுகிறோம், இந்தியாவுக்காகச் சேவை செய்ய வேண்டும், தற்சார்பு பொருளாதாரமாக மாற வேண்டும் என பேசுகிறோம். இந்த நாட்டிலிருந்து இறக்குமதி செய்வதை நிறுத்துங்கள் என்று கூறுகிறோம். மறுபுறம் நம்முடைய சொந்த நாட்டைச் சேர்ந்த தொழில் முனைவோர்களை ஊக்கப்படுத்துவதில் தோல்வி அடைந்து விடுகிறோம்.நம் மண்ணைச் சேர்ந்த சொந்த தொழில் முனைவோரை ஊக்குவிப்பதில் நாடு அலட்சியமாகவும் உணர்ச்சியற்றதாகவும் இருந்ததன் காரணமாக, இந்நாட்டில் உற்பத்தி செய்வதும் அல்லது தொழில் நடத்துவதும் கடினம் என்று கூறி பலர் வெளியேறி விட்டனர். “சிறிய நிறுவனங்கள் வளர்வதற்கு அனுமதிக்காவிட்டால், சந்தையில் பெரு நிறுவனங்களின் ஆதிக்கம் மட்டுமே இருக்கும், அரசுக்கே அவர்கள் ஒரு கட்டத்தில்கட்டளையிடுவார்கள்” என்று நீதிபதிகள் சாட்டையைச் சுழற்றியுள்ளனர்.நிறுவனங்கள் ஏலத்தில் பங்கேற்பதற்கான தகுதி குறித்த விஷயத்தில், மத்திய அரசும், இந்திய விமான ஆணையமும் தங்களின் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண் டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.  

தில்லி மாநகரின் மரங்களைப் காப்போம்!

அறிவியல் கதிர் தில்லி மாநகரின் மரங்களைப் காப்போம்!  பேராசிரியர் கே. ராஜு தில்லியின் தென்பகுதியிலுள்ள சுமார் 15000 மரங்களை வெட்டித் தள்ளுவதற்கு மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளதை எதிர்த்து மாநகர மக்கள் கடந்த சில நாட்களாக தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். தெற்கு தில்லியின் அரை டஜன் குடியிருப்புகளை…

தில்லியில் காற்று மாசு.. தில்லிவாழ் மக்களுக்கும் பொறுப்பு உண்டு

அறிவியல் கதிர் தில்லியில் காற்று மாசு.. தில்லிவாழ் மக்களுக்கும் பொறுப்பு உண்டு பேராசிரியர் கே. ராஜு தில்லி ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்திலிருந்து இலங்கை கிரிக்கெட் வீரர்கள் காற்று மாசிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முகமூடிகளை அணிந்துகொண்டு பாதி விளையாட்டிலேயே வெளியேறியது தில்லியின் வரலாற்றில் மோசமானதொரு அத்தியாயம்தான். பருவமழை தவறுமே தவிர,…

மூச்சுத் திணறும் தில்லி

அறிவியல் கதிர் மூச்சுத் திணறும் தில்லி பேராசிரியர் கே. ராஜு தில்லி மாநகரம் சுவாசக் கோளாறால் திணறிக் கொண்டிருக்கிறது. பெரும்பாலான நகரவாசிகளைப் பொறுத்த வரை வாழ்க்கை ஸ்தம்பித்து நிற்கிறது. காற்றின் தரம் மோசமடைந்ததைத் தொடர்ந்து பள்ளிகள் இயங்கவில்லை.. குழந்தைகள் வெளியில் நடமாடுவதற்கும் விளையாடுவதற்கும் தடை விதிக்கப்படுகிறது.. நுரையீரல்-இதய நோய்…

தில்லியில் இம்மாதம் 30ம் தேதி எழுத்தாளர்கள் மாநாடு

ஊழல், சமூகத்தில் மகளிர், தேசியப் பாதுகாப்பு உள்ளிட்ட  பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிப்பதற்கான சமூக எழுத்தாளர்கள் பங்கேற்கும் இரண்டு நாள் மாநாடு நவம்பர் 30-ஆம் தேதி தில்லி இந்தியா ஹாபிடாட் சென்டரில் தொடங்குகிறது. பி போல்டு, ஸ்டே ரியல் என்ற தலைப்பில் நடைபெறும் இந்த மாநாட்டில் கல்வியாளர் ராஜ்மோகன்…