1. Home
  2. திட்டம்

Tag: திட்டம்

மத்திய அரசுக்குப் பிடிக்காத திட்டம்

மத்திய அரசுக்குப் பிடிக்காத திட்டம்   2005-ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் இடதுசாரிகளின் ஆதரவுடன் பதவியில் இருந்தபொழுது இடதுசாரிகளின் நிர்ப்பந்தத்தால் கொண்டுவரப்பட்ட முக்கியமான திட்டம்தான் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைஉறுதித் திட்டம். பா.ஜ.க. எதிர்க்கட்சியாக இருந்த பொழுதும் பின்னர் 2014-ம் ஆண்டு பதவியேற்ற பொழுதும் இந்த திட்டத்தை ஆதரித்தது இல்லை. இந்த திட்டத்திற்கு நிதி அதிகம் வேண்டும் என கோரிய பொழுது “முந்தைய அரசாங்கத்தின் மிகப்பெரிய தோல்வியின் அடை யாளமாக மட்டுமே இது தொடரும்” என மோடி கூறினார். அதாவது இந்தத் திட்டம் தேவையற்றது என்பது மோடி அரசாங்கத்தின் நிலை! எனவே தொடர்ந்து இந்தத் திட்டத்திற்குத் தரப்பட்ட முக்கியத்துவமும் நிதியும் குறைக்கப்பட்டே வந்தது.   கோவிட் 19 காலத்தில் 15 கோடிக்கும் அதிகமான உழைப்பாளிகள் வேலை இழந்துள்ளனர். கோவிட் பிரச்சனை எப்பொ ழுது முடியும் என்பதோ அல்லது வேலை இழந்த உழைப்பாளிகள் பலருக்கு எப்பொழுது மீண்டும் வேலை கிடைக்கும் என்பதோ எவருக்கும் தெரியாது. இந்த சூழலில் ஊரக வேலை உறுதித் திட்டம் கிராமப்புறங்களில் தொடர வேண்டும் என்பது மட்டுமல்ல; இந்தத் திட்டத்தின் கீழ் உள்ள பணி நாட்களும் ஊதியமும் அதிகரிக்க வேண்டும் எனவும் இந்தத் திட்டம் நகர்ப்புறங்களிலும் அமலாக்கப்பட வேண்டும் எனவும் விவசாயிகள் கோரி வருகின்றனர். இதற்காக விவசாய சங்கங்களும் விவசாயத் தொழிலாளர் சங்கங்களும் தேசம் முழு தும் பல இயக்கங்களை நடத்தி வருகின்றன. இந்த வலுவான இயக்கங்களுக்குப் பின்னர்தான் மோடி அரசாங்கம் நிதி ஒதுக்கீட்டினை அதிகரிக்க முன்வந்தது. ஆனால் தேவையை ஒப்பிடும்பொழுது இது மிக குறைவுதான். குறிப்பாக லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் கிராமங்களுக்குத் திரும்பியுள்ள சமயத்தில் இந்த திட்டத்தின் தேவை பன்மடங்கு உயர்ந்துள்ளது. 25000 மற்றும் அதற்கு அதிகமான புலம்பெயர் தொழிலாளர்கள் திரும்பிய 116 மாவட்டங்களில் சென்ற ஆண்டு மே மாதம் 48.22 லட்சம் குடும்பங்கள் இந்த திட்டத்தை நாடினர் எனில், இந்த ஆண்டு மே மாதம் 89.23 லட்சம் குடும்பங்கள் இந்த திட்டத்தை நாடியுள்ளனர். இது 86.27%  உயர்வு ஆகும்.   இந்த ஆண்டு பட்ஜெட்டில் இத்திட்டத்திற்கு ரூ 65,000 கோடி ஒதுக்கப்பட்டது. இதில் முந்தைய பாக்கி ரூ.11,500 கோடி ஆகும். எனவே உண்மையான ஒதுக்கீடு சுமார் 50,000 கோடி மட்டுமே. ஊரடங்குக்குப் பின்னர் கடுமையான விமர்சனம் கார ணமாக மேலும் 40,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவும் கூட போதாது என சமூக செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர். குறைந்தபட்சம் ரூ.1,50,000 முதல் ரூ.1,90,000 கோடி ஒதுக்கீடு செய்தால்தான் கிராமப்புறங்களில் உள்ள வேலை இழந்த பெரும்பான்மையினருக்கு வேலையும் ஓரளவு நிவாரணமும் கிடைக்கும். மேலும் இதனை நகர்ப்புறங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டிய தேவை உள்ளது. எந்தத் திட்டம் அகற்றப்பட வேண்டும் என மோடி கூறினாரோ அந்த திட்டம்தான் இன்று மிக முக்கியத் தேவையாக மாறி உள்ளது. நவீன தாராளமயப் பொருளாதார கோணத்தில் இருந்து இந்த பிரச்சினையை அணுக முடியாது என்பதை கோவிட்19 பெருந்தொற்று தெளிவாக்கியுள்ளது. (-ஜூலை 1 தீக்கதிர் நாளிதழில் அ. அன்வர் உசேன் எழுதிய கட்டுரையிலிருந்து)

சட்டம் அறிய திட்டம்

பட்டம் பல பெற்றாலும் சட்டம் தெரியவில்லை என்றால் பயனில்லை… எனவே மக்கள் பாதை இயக்கமானது சட்டம் அறிய திட்டம் தீட்டி பயிற்சி பாசறையை உருவாக்கியுள்ளது. ” அடிப்படை சட்டம் அறிவோம்” இடம்: மக்கள் பாதையின் தலைமை அலுவலகம் நாள்: ஞாயிறு (01/07/2018) நேரம்: மாலை 2:00 – 7:00…

எல்.இ.டி., பல்புகளால் தினமும் ரூ.2.71 கோடி மிச்சம், நாடு முழுதும் விரிவாக்க மத்திய அரசு திட்டம்

நாட்டின் பல மாநிலங்களில், எல்.இ.டி., மின் விளக்குகள் பயன்பாடு அதிகரித்துள்ளதால், மின்சாரத்தை தயாரிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு ஏற்படும் செலவில், நாள்தோறும், 2.71 கோடி ரூபாய் மிச்சமாகிறது. தற்போது, 10க்கும் குறைவான மாநிலங்களில் பின்பற்றப்படும் இந்த திட்டத்தை, அனைத்து மாநிலங்களும் முழுமனதுடன் பின்பற்றத் துவங்கினால், காற்றின் மாசு குறைவதுடன்,…

முதுகுளத்தூர் சுப்பிரமணியர் கோயிலில் அன்னதான திட்டம் தொடக்கம்

முதுகுளத்தூர் ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி கோவிலில் அன்னதானம் வழங்கும் திட்டம் தொடங்கியது.    ராமநாதபுரம் தேவஸ்தானத்திற்கு பாத்தியமான ஸ்ரீ சுப்பிரமணியர் கோயிலில் தமிழக முதல்வரின் அன்னதானம் வழங்கும் திட்டம் தொடங்கியது. நிகழ்ச்சிக்கு இந்து சமய அர நிலையத்துறை இயக்குநர் சோமசுந்தரம் தலைமை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் ஆர்.இளவரசி…

திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது நல்லா இருந்த நரிப்பையூர் திட்டத்திற்கு என்னாச்சு?

முதுகுளத்தூர், : திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட நரிப்பையூர் குடிநீர் திட்டம் போதிய பராமரிப்பு இல்லாமல் நிறுத்தப்பட்டுவிட்டதாக தெரிகிறது. இதனால் ஏராளமான கிராமங்கள் தண்ணீர் கிடைக்காமல் தவித்து வருகின்றன. முதுகுளத்தூர், கடலாடி, கமுதி ஆகிய தாலுகாக்களில் உள்ள மக்கள் பயன்பெறும் வகையில், கடந்த 1996ம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதி,…

விளங்குளத்தூரில் “அம்மா’ திட்ட முகாம்

முதுகுளத்தூர் அருகே உள்ள விளங்குளத்தூர் ஊராட்சியில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு சமூக நல பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் பவானி தலைமை வகித்தார். வட்ட வழங்கல் அலுவலர் விஜயக்குமார், மண்டல துணை வட்டாட்சியர் லலிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சித் தலைவர் கனகவள்ளி முத்துவேல் வரவேற்றார்.…

“அம்மா’ திட்ட முகாம்கள்

முதுகுளத்தூர் அருகேயுள்ள ஆதனக்குறிச்சி ஊராட்சியில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. இம்முகாமிற்கு வட்டாட்சியர் எஸ்.ராமமூர்த்தி தலைமை தாங்கினார்.சமூக நல பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் பவானி, வட்ட வழங்கல் அலுவலர் விஜயக்குமார்,மண்டல துணை வட்டாட்சியர் லலிதா ஆகியோர் முன்னிலை வகித்தார். முகாமில், பயனாளிகளிடமிருந்து 15 மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.…

“அம்மா’ திட்ட முகாம்

முதுகுளத்தூர் அருகே பெருங்கருணையில் வெள்ளிக்கிழமை அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. முகாமுக்கு சமூக பாதுகாப்பு நலத்துறை வட்டாட்சியர் பவானி தலைமை தாங்கினார். வட்ட வழங்கல் அலுவலர் விஜயக்குமார், வருவாய் ஆய்வாளர் மதியழகன், கிராம நிர்வாக அலுவலர் ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சித் தலைவர் இருளாயி பெருமாள் அனைவரையும்…

கிழவனேரியில் “அம்மா’ திட்ட முகாம்

முதுகுளத்தூர் அருகே பிரபக்களூர் குரூப், காக்கூர் பிர்காவைச் சேர்ந்த கிழவனேரியில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழக அரசின் நலத்திட்டங்களில் ஒன்றான அம்மா திட்ட முகாம் மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் உத்தரவின் பேரில் கிழவனேரியில் நடைபெற்றது. இம்முகாமிற்கு வட்டாட்சியர் எஸ்.ராமூர்த்தி தலைமை வகித்தார். முகாமில் பயனாளிகளிடமிருந்து 21…

தமிழ் விக்கிபீடியாவின் புதிய திட்டம்

Tamil Wikipedia to publish two seminal works KARTHIK SUBRAMANIAN   Encyclopaedias Kalaikalangiyam and Kuzhandaigal Kalaikalangiyam will be published under Creative Commons licence In a move that could considerably bolster the freely-available database of Tamil articles…