1. Home
  2. கோடி

Tag: கோடி

கூடும் நேரம் கோடி நலம்

கூடும் நேரம் கோடி நலம் நிம்மதியில்லா மண்ணில் நிலையில்லா வாழ்க்கை, நீதியில்லா நிலத்தில் நிம்மதியும் விளையுமோ..? சாதியாளும் சதுப்பில் நீதியும் சாத்தியமோ..? சதிநிறை மதியோங்க கதியிழக்கும் சிறுபான்மை, அகதிகளாய் அவதியாகி அழைகின்றார் அகிலமெங்கும், அத்தனையும் அறிவுணர்ந்த வல்லமைகள் வழக்கறியும், இருந்தபோதும் சுயநலத்தால் மறந்தவிடும் நிலைகாணும், நீதி கேட்டால் தேசத்துரோகம்,…

மாதச் சம்ளக்காரர்கள் 1 கோடியே 89 லட்சம்பேர் வேலையிழப்பு

மாதச் சம்ளக்காரர்கள் 1 கோடியே 89 லட்சம்பேர் வேலையிழப்பு   கடந்த மார்ச் 25 அன்று பொதுமுடக் கம் அமல்படுத்தப்பட்டது தொடங்கி, ஜூலைமாதம் வரையிலான 4 மாத காலத்தில்,1 கோடியே 89 லட்சம் பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளதாக பொருளாதாரக்கண்காணிப்பு மையம் (Centre for Monitoring Indian Economy – CMIE) புள்ளிவிவரம் தெரிவித்துள்ளது. முக்கியமாக, இவர்கள் அனைவரும் முறைசாரா தொழிலாளர்கள் அல்ல; மாறாகநிலையான சம்பளத்தில் (Salaried Jobs) பணியாற்றி வந்தவர்கள் என்ற அதிர்ச்சித்தகவலையும் சிஎம்ஐஇ வெளியிட்டுள்ளது.அதாவது, கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்த ஏப்ரல் – மே காலத்தில், முறைசாரா கூலித் தொழிலாளர்கள் மட்டுமே (Informal Sector) அதிகமான அளவில்வேலையிழந்தனர். தற்போதோ நிலையான சம்பளம் பெற்ற ஊழியர்களும் (Salaried Jobs) சுமார் 1 கோடியே 89 லட்சம்பேர் வேலையை இழந்துள்ளதாக பொருளாதாரக் கண்காணிப்பு மையம் குறிப்பிட்டுள்ளது. சிஎம்ஐஇ அமைப்பின் தரவுகள்படி ஏப்ரல் மாதத்தில் நிலையான சம்பளத்தில்இருக்கும் 1.77 கோடி பேர் வேலைவாய்ப்பைஇழந்துள்ளனர். மே மாதத்தில் 1 லட்சம்பேரும், ஜூலை மாதத்தில் 50 லட்சம் பேரும்வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். ஜூன் மாதத்தில் 39 லட்சம் பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் கிடைத்துள்ளன. இறுதியாக கடந்த 4 மாதங்களில் ஒட்டுமொத்தமாக வேலைவாய்ப்பை இழந்தவர்களின் எண்ணிக்கை 1.89 கோடி என்றுசிஎம்ஐஇ கூறியுள்ளது.இந்தியாவின் மொத்த வேலைவாய்ப்புச் சந்தையில், நிலையான வேலைவாய்ப்புகளைக் கணக்கில் கொண்டால், அவை வெறும் 21 சதவிகிதம்தான். இதுமுறைசாரா துறையில் ஈடுபடுவோரின் எண்ணிக்கையை விட மிகக் குறைவுதான்.ஆனால் இந்த 21 சதவிகித வேலைவாய்ப்புகள்தான், நாட்டின் பொருளாதாரம் மற்றும்வர்த்தகச் சந்தை கட்டமைப்பிற்கு மிகவும்முக்கியமானது என்று சிஎம்ஐஇ தெரிவிக்கிறது.   நகர்ப்புற வீடுகளில் உள்ளவர்கள் தங்கள் மாதச் செலவுகளைக் குறைத்து, குறைவாக செலவு செய்கின்றனர் என்பதற்கான தரவுகள் பல்வேறு அறிக்கைகளில் உறுதியாகி இருக்கும் நிலையில், நகர்ப்புறங்களின் தேவை தொடர்ந்து குறையுமானால், அது முறைசாரா மற்றும் கிராமப்புற பொருளாதாரத்திலும் கடுமையான பணப்புழக்கத் தட்டுப்பாட்டை உருவாக்கும்; இது நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத் தும் என்று எச்சரிக்கிறது.ஏற்கெனவே, பணவீக்கம், மொத்தஉள்நாட்டு உற்பத்தி வீழ்ச்சி, தொழிற்சாலைசெயல்பாட்டுத் தரவு மற்றும் நிதிப் பற்றாக் குறை போன்ற முக்கிய குறிகாட்டிகள் தொடர்ந்து கவலையளிக்கும் விதமாகவே இருக்கின்றன என்பதையும் சிஎம்ஐஇ நினைவுபடுத்தியுள்ளது.   நமது நாட்டைப் பொறுத்தவரை, நிலையான சம்பள வேலைவாய்ப்புகள் எளிதாககைவிட்டுப் போகக்கூடியன அல்ல. ஆனால் ஒருமுறை  இந்தச் சம்பள வேலைவாய்ப்புகள் பறிபோனால் திரும்பப் பெறுவது என்பது சாத்தியமற்றது என்று கூறும் பொருளாதாரக் கண்காணிப்பு அமைப்பு, முறைசாரா துறை மற்றும் கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பு ஏப்ரல் மாதத்திலிருந்து அதிகரித்துள்ளது; ஆனால், நிலையான வேலைகளில் முன்னேற்றம் இல்லைஎன்ற யதார்த்த நிலையையும் பதிவு செய்துள்ளது.

எல்.இ.டி., பல்புகளால் தினமும் ரூ.2.71 கோடி மிச்சம், நாடு முழுதும் விரிவாக்க மத்திய அரசு திட்டம்

நாட்டின் பல மாநிலங்களில், எல்.இ.டி., மின் விளக்குகள் பயன்பாடு அதிகரித்துள்ளதால், மின்சாரத்தை தயாரிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு ஏற்படும் செலவில், நாள்தோறும், 2.71 கோடி ரூபாய் மிச்சமாகிறது. தற்போது, 10க்கும் குறைவான மாநிலங்களில் பின்பற்றப்படும் இந்த திட்டத்தை, அனைத்து மாநிலங்களும் முழுமனதுடன் பின்பற்றத் துவங்கினால், காற்றின் மாசு குறைவதுடன்,…

உலக ஆஸ்துமா தினம்: இந்தியாவில் 3 கோடி பேர் பாதிப்பு

இந்தியாவில் 3 கோடி பேர் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் குணசிங் தெரிவித்தார். உலக ஆஸ்துமா தினம் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதையடுத்து,  கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நெஞ்சக நோய் பிரிவு சார்பில் விழிப்புணர்வு மனிதச் சங்கிலி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.…

ரூ 1.30 கோடியில் இலவச பொருட்கள் வழங்கும் விழா

முதுகுளத்தூர்:முதுகுளத்தூர் அருகே புழுதிக்குளம், எஸ்.பி.கோட்டை, உலையூர், மட்டியரேந்தலில் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறிகள் வழங்கும் விழா, பரமக்குடி ஆர்.டி.ஓ., குணாளன் தலைமையிலும், ஊராட்சி தலைவர்கள் சுப்பிரமணியன் (புழுதிக்குளம்), சுந்தரராஜ் (எஸ்.பி.கோட்டை), மகேஷ்கந்தன் (உலையூர்), சூசையம்மாள் (பொன்னக்கனேரி) முன்னிலையிலும் நடந்தது.   தாசில்தார் மோகன் வரவேற்றார்.   ஒரு கோடியே…

ரூ.33.43 கோடியில் பாதாள சாக்கடை

முதுகுளத்தூர்: முதுகுளத்தூரில் பாதாள சாக்கடை திட்டம் 2014ல் துவக்கப்படும் என அறிவிக்கபட்டது. கழிவுநீர் வாய்க்கால்களை, பல லட்ச ரூபாய் மதிப்பில் சீரமைக்க, பேரூராட்சி நிர்வாகம் தயங்கியது. இந்நிலையில் முதுகுளத்தூர் பேரூராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக 33 கோடியே, 43 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கோடானு கோடி கரங்கள் உயரட்டும்

கோடானு கோடி கரங்கள் உயரட்டும் ( சிராஜுல் மில்லத் ஆ.கா.அ. அப்துஸ் ஸமது ) ஓர் அற்புதமான பயிற்சிக்காலம் முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது. ரமலான் மாதத்தின் மிகப் புனித நாட்கள் ஒவ்வொன்றாக நகர்ந்து ஷவ்வால் மாதத்தின் தலைப்பிறை அடிவானத்தில் தன் ஒளிக்கீற்றைக் காட்ட தலைப்பட்ட உடன் அன்று பெருநாள்…