1. Home
  2. கான் பாகவி

Tag: கான் பாகவி

சொர்க்கம் நோக்கிய பயணம்

க ல்வியைத் தேடிச் செல்வதன் மகிமை குறித்து நபிகள்நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிடும்போது ஒரு நீண்டஹதீஸில் இப்படிச் சொன்னார்கள்: ومن سلك طريقا يلتمس فيه علما سهّل الله له به طريقا إلى الجيّة. கல்வியைத் தேடி ஒருவர் ஒரு பாதையில் நடந்தால், அதன்மூலம்அவருக்குச் சொர்க்கம் செல்லும் பாதையை அல்லாஹ்எளிதாக்குகின்றான். (முஸ்லிம் – 5231) இதிலிருந்து, கல்வி நோக்கிய பயணம், சொர்க்கம் நோக்கியபயணமாகும் என்று அறியமுடிகிறது. இதற்குக் காரணம் என்ன? இறைவேதத்தையும் இறைத்தூதரின்வழிமுறையையும் கற்றறிந்து, இறைவன் படைத்துள்ள இயற்கைச்செல்வங்களை நுணுகி ஆராயும்போது, அது மனிதனுக்குஇறையச்சத்தை ஊட்டும்; நற்பண்புகளை வளர்க்கும்; ஒழுக்கமிக்கஉயர் வாழ்க்கைக்கு வழிகாட்டும். அந்த வழியில் நடப்பவர் சொர்க்கத்தை அடைவார் என்பதில் என்னசந்தேகம் இருக்க முடியும்? சொல்லுங்கள்! என்ன நடக்கிறது? ஆனால், இன்று என்ன நடக்கிறது? உலக நடப்பைச் சற்று ஆழமாகநோக்கினால் ஒரு உண்மை வெளிச்சத்திற்கு வரும். ஆம்! இன்று உலகநாடுகளை ஆள்வது மன்னர்களோ பிரதமர்களோ அல்லர். அவர்களுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் மூன்று பிரதான சக்திகளேஅவர்களை இயக்கிவருகின்றன. 1. அறிவியல் (العلوم); 2. தொழில் நுட்பம்(تِقْنِيّة); 3. கார்ப்பரேட் கம்பெனிகள் (شركات متّحدة). இவை ஒவ்வொன்றிலும்நன்மைகள் இருந்தாலும் தீமைகளே அதிகம். பயன்படுத்தும் நோக்கம்,பயன்பாட்டு முறை ஆகியவற்றைப் பொறுத்தே பலனைத் தீர்மானிக்கமுடியும். அறிவியலை எடுத்துக்கொள்வோம். அறிவியல் என்றால் என்ன?நிரூபணத்தின் அடிப்படையிலும் பரிசோதனை முறைகளைக்கொண்டும் இயற்கை உட்பட உலகத்திலுள்ள அனைத்தின் அமைப்பு,இயக்கம் ஆகியவற்றை விளக்கும் அறிவுத் துறையே அறிவியல்.அல்லது விஞ்ஞானம் எனப்படுகிறது. அதாவது இறைவனின் படைப்புகளை, அவை படைக்கப்பட்டமுறையை, அதன் இயக்கத்தை இயக்க விதியை ஆராய்ந்துஅறிவதுதான் அறிவியல். படைப்புகளின் நுணுக்கங்களைஅறியும்போது படைப்பாளனின் பேராற்றல் மனிதனைவியக்கவைக்கும். அவனுடைய ஆணைகளுக்கு மாற்றமாக நடந்தால்,கடுமையாகத் தண்டித்துவிடுவான் என்ற அச்சம் பிறக்கும். அதுமனிதனைப் பக்குவப்படுத்தும்; புனிதனாக்கும். திருக்குர்ஆன் கூறும் அழகைப் பாருங்கள்: வானங்கள் மற்றும் பூமியைப் படைத்திருப்பதிலும் இரவு, பகல்மாறிமாறி வருவதிலும் அறிவுடையோருக்குச் சான்றுகள் பல உள்ளன.அவர்கள் நின்ற நிலையிலும் அமர்ந்த நிலையிலும் ஒருக்களித்துப்படுத்த நிலையிலும் அல்லாஹ்வை நினைவுகூருவார்கள். -அதாவதுநின்று தொழுவார்கள்; முடியாவிட்டால் அமர்ந்து தொழுவார்கள்;அதற்கும் முடியாதபோது படுத்துக்கொண்டு தொழுவார்கள்- வானங்களும் பூமியும் படைக்கப்பட்டது குறித்துச் சிந்திப்பார்கள். (இறுதியில் இவ்வாறு கூறுவார்கள்:) எங்கள் இறைவா! இவற்றை நீவீணாகப் படைக்கவில்லை; நீ தூயவன்; நரக வேதனையிலிருந்துஎங்களைக் காப்பாயாக!…

நீங்கள் என்ன செய்கிறீர்கள் ?

உங்களுடன் நான் மனம்விட்டு… தொடர் – 08 http://khanbaqavi.blogspot.com/2015/02/blog-post.html http://khanbaqavi.blogspot.com/2015/02/blog-post.html தெ ரிந்தவர்களைச் சந்திக்கும்போது குசலம் விசாரித்த கையோடு கேட்கும் முதல் கேள்வி, “நீங்கள் என்ன செய்கிறீர்கள்?” அல்லது “உங்கள் வீட்டுக்காரர் என்ன செய்கிறார்?” என்பதாகத்தான் இருக்கும். அப்படி வினவும்போது யாரும் கோபித்துக்கொள்வதில்லை. அவரவர் பார்க்கும் வேலையைப் பற்றிச்…

உங்களுடன் நான் – மனம் விட்டு… கான் பாகவி

  ச மூக வலைத்தளங்களான முகநூல், ட்விட்டர், வலைப்பதிவு ஆகிய சர்வதேச ஊடகங்களிலும் உள்ளூர் பத்திரிகைகளிலும் முக்கியமான கட்டுரைகள், முஸ்லிம் உலகச் செய்திகள், பேட்டிகள், வாசகர் கருத்துகள் என நம்மால் இயன்ற அளவுக்குப் பரப்புரைகளைச் செய்துவருகிறோம். மாநாடுகள், கருத்தரங்குகள், கூட்டங்கள் எனக்கிடைக்கும் வாய்ப்புகளைச் சூழ்நிலைகளுக்கேற்பப் பயன்படுத்திக்கொள்வதும் உண்டு.   அவ்வப்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும்…

அமானிதம் காப்போம்

– மௌலவி, கான் பாகவி ‘அமானத்’ என்ற அரபுச் சொல்லே தமிழ் முஸ்லிம்களின் வழக்கில் ‘அமானிதம்’ என்றாயிற்று. கையடைப் பொருள், நம்பகத் தன்மை, நாணயம், பொறுப்பு, அறக்கட்டளை முதலான பொருள்கள் இதற்கு உண்டு. ‘அமானிதப் பணத்தை மோசடி செய்யாதே’ என்றால், ‘நம்பி ஒப்படைக்கப்பட்ட பணத்தைச் சுருட்டாதே’ என்று பொருள்.…

பிரிட்டனைப் பயமுறுத்தும் பாலியல் பலாத்காரங்கள் – – கான் பாகவி

பி ரிட்டன் நாகரிகத்தின் (?) சிகரத்தில் உள்ள ஐரோப்பிய நாடுகளில் ஒன்று. தலைநகர் லண்டன் உலக நாகரிகங்களின் தொட்டில் என்று பெருமை பேசுவர். அறிவியலிலும் பொருளாதாரத்திலும் முன்னேறிய நாடு என்பர். படிப்பிற்கும் வேலை வாய்ப்பிற்கும் சிறந்த இடம் என்றும் அதேநேரத்தில், சுதந்திரம், பெண் விடுதலை, ஜனநாயகம், கருத்துரிமை போன்ற நவீனங்களின் வளர்ப்பு தேசம் என்றும் மெச்சுவர்.…