1. Home
  2. கதை

Tag: கதை

திருக்குறளின் அறத்துப்பாலுக்கு கதையெழுதிய மாணவர்கள்..

திருக்குறளின் அறத்துப்பாலுக்கு கதையெழுதிய மாணவர்கள்…        மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மெட்ரிக் மேனிலைப்பள்ளியில் 10, 11, 12-ஆம்வகுப்பில் படிக்கும் மாணவ-மாணவிகள் திருக்குறளின் அறத்துப்பாலிலுள்ள38 குறள்களுக்கு, 38 கதைகளை எழுதியுள்ளனர். இப்பள்ளியின் முதுகலை தமிழாசிரியர்கோ.மாலினி, இக்கதைகளைத் தொகுத்து ‘திருக்குறள் அறத்துப்பால் கதைகள்’ எனும்நூலாக்கியுள்ளார். இந்நூலின் அட்டை ஓவியத்தையும் பள்ளி மாணவரே வரைந்துள்ளார்.…

திருக்குறள் கதைகள்

திருக்குறள் கதைகள்… —  பார்த்தசாரதி ரங்கஸ்வாமி source – https://thirukkuralkathaikkalam.blogspot.com/2020/07/347.html வீட்டுக்கு வந்த நண்பர்….. “வாடா! எவ்வளவு நாள் கழிச்சு என் வீட்டுக்கு வந்திருக்க! உக்காரு” என்று நண்பர் சாமிநாதனை உற்சாகத்துடன் வரவேற்றார் பழனிவேல். சாமிநாதன் உட்கார்ந்ததும் கண்களைச் சுழற்றி வரவேற்பறையில் பொருட்கள் தாறுமாறாகச் சிதறி இருப்பதைப் பார்ப்பதை கவனித்துப் பழனிவேல்…

நீதிக் கதை

எழுத்தாளர் மு.முருகேஷ் எழுதிய அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை என்கிற தொகுப்பிலிருந்து ஒரு அழகான நீதிக் கதையைக் கேட்கலாம் வாங்க.. https://www.youtube.com/watch?v=P31l4ymgHyw&t=8s மறக்காமல் Subscribe பண்ணிடுங்க கதைகளும் நீதியும் குழந்தைகளுக்கு மட்டுமா என்ன ? அன்புடன், இரா.பூபாலன் 9842275662 www.raboobalan.blogspot.com

சில கதைகளும் படிப்பினைகளும்

சில கதைகளும் படிப்பினைகளும்   # மனைவி இறக்கும்போது, அவருக்கு வயது 45 இருக்கும் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் அவரை மறுமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியும், அவரால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை . என் மனைவி, அவள் நினைவாக எனக்கு ஒரு மகனை விட்டுச் சென்றிருக்கிறாள். அவனை வளர்த்து ஆளாக்குவது ஒன்றே இனி என் வேலை. அவன் சந்தோஷத்தில் அகமகிழ்ந்து, அவன் வெற்றியில் நான் திளைத்திருப்பது எனக்குப் போதும். அவனுக்காக வாழப் போகிறேன்.  இன்னொரு துணை  எனக்குத் தேவையில்லை என்று சொல்லிவிட்டார். வருடங்கள் உருண்டோடியன. மகன் வளர்ந்து பெரியவனானதும், தன் வீட்டையும், வியாபாரத்தையும் மகனிடம் எழுதிக் கொடுத்துவிட்டு ஓய்வு பெற்றார். மகனுக்கு திருமணமும் செய்து வைத்து, அவர்களுடனேயே தங்கியும் விட்டார். ஒரு வருடம் போனது. ஒரு நாள் வழக்கத்துக்கு மாறாக, கொஞ்சம் சீக்கிரமாக…

இன்று ஒரு கதை…

இன்று  ஒரு கதை…   தன் அப்பாவுடன் கன்னியாகுமரி கடற்கரையோர கடைத் தெருக்களில் உற்சாகமாய் நடை போட்டுக் கொண்டிருந்தான் அந்தச் சிறுவன். ‘‘அப்பா… பாருங்கப்பா! சிப்பிகள்ல செய்திருக்கிற மயில், கிளி எல்லாமே அழகாயிருக்குப்பா!’’ ‘‘ஆமாம்பா!’’ ‘‘இந்தக் கடற்கரை காற்று, கன்னியாகுமரி எல்லாமே பிடிச்சிருக்குப்பா எனக்கு!’’ ‘‘அப்பா, ஏதாவது கதை சொல்லுங்க!’’ அப்பா ஆரம்பித்தார். ‘‘அது ஒரு சின்ன கதைதான். அப்ப நாங்க பள்ளிக்கூடம் படிச்சிட்டு இருந்தோம். அப்பாவுக்கு முன் பல்லு விழுந்து முளைச்சி வளர்ந்திருந்தது.’’ ‘‘அப்புறம்?’’ ‘‘அப்போ நாங்க எல்லாம் பள்ளிக்கூடம் முடிஞ்ச பிறகு கபடி விளையாடிட்டு இருந்தோம். நல்லா இருட்டிப் போச்சு. வீட்டுக்குப் போகவே இல்ல. போய் சர்பத் குடிக்கலாம்னு ஒரு பையன் சொன்னான். அப்பல்லாம் சர்பத் ஒரு டம்ளர் ஒரு ரூபாய்தான்.’’ ‘‘அப்புறம்?’’ ‘‘சர்பத் வாங்க நாங்க நாலு பேரு நிற்கும்போது கடைக்காரர் திரும்பி ஐஸ்கட்டி எடுத்தார். அப்போ ஒரு பையன் ரெண்டு கோல்டு ஸ்பாட் பாட்டிலை எடுத்து சாப்பாட்டு கூடைக்குள்ள போட்டு மேல துணி போட்டு மூடிட்டான்!’’ ‘‘கோல்டு ஸ்பாட்னா என்னப்பா?’’ ‘‘இப்ப சுர்ருன்னு ஆரஞ்ச் ட்ரிங்க் குடிக்கிறீங்க இல்ல… அது மாதிரி அப்ப கோல்டு ஸ்பாட்!’’ ‘‘சரி, சொல்லுங்க!’’ ‘‘திருடின உடனே எங்களுக்கு ரொம்ப சந்தோஷம். தூக்கிட்டு ஒரே ஓட்டமா ஒடினோம். எங்க பள்ளிக்கூடத்துல பெரிய வாகை மரம் இருக்கும். அதுக்குப் பின்னாடி போனா யாரும் கண்டுபிடிக்க முடியாது. அங்க போய் ஒளிஞ்சி நின்னுக்கிட்டோம். நாலு பேரு, ரெண்டு கோல்டு ஸ்பாட். சீக்கிரம் குடிக்க அவசரப் படுறோம்!’’ ‘‘அப்புறம்?’’ ‘‘கோல்ட் ஸ்பாட் திருடினோம். ஆனா அதை திறக்கிற ஓப்பனர் திருடலையே! இப்ப எப்படி அதைத் திறக்கிறதுங்கிற பிரச்னை வந்துச்சு. ஒருத்தன் கல்லை வைத்து தட்டப் போனான். தடுத்து விட்டோம். இன்னொருவன் பாட்டில் மூடியை பல்லால் கடித்து எடுக்க முயற்சி செய்தான். ஆவேசமான முயற்சி அது. அவன் கால் வாசி பல் உடைந்து விட்டது. அதுவும் முன் பல். பயத்துல அவன் கத்தினான்.’’ ‘‘அச்சச்சோ!’’ ‘‘உடனே எனக்குக் கோபம் வந்தது. இந்த பாட்டில் மூடியைத் திறக்க இவ்வளவு கஷ்டமான்னு, ஒரு உடைந்த மரக்கிளையில் மூடியின் ஓரத்தை வைத்து பாட்டிலை வேகமா இழுத்தேன். பாட்டில் படீரென உடைந்தது. உடைந்து என் கையில் குத்தியது. கை கிழிந்து சதை தொங்கியது. ரத்தம் பெருக்கெடுத்து தரையில் சொட்டிக் கொண்டே இருந்தது.’’ ‘‘ரொம்ப வலிச்சுதா அப்பா?’’ ‘‘சரியான வலி. நண்பர்கள் எல்லாரும் பதறிட்டாங்க. உடனே என்னை டாக்டர்கிட்ட கூட்டிட்டு போனாங்க. அவரு ‘இது எப்படி பட்டது’ன்னு விசாரிச்சாரு. நாங்க உண்மையை மறைச்சோம். எப்படியோ மறைச்சி கையில கட்டு போட்டுட்டு வீட்டுக்குப் போகலாம்னு கிளம்பும்போது, அங்க வாகை மரம் பக்கத்துல உடைஞ்சிருக்கிற கோல்டு ஸ்பாட் பாட்டில்களை மறைக்கலையேன்னு ஞாபகம் வந்துச்சு. உடனே நாலு பேரும் பள்ளிக்கூடத்துக்குப் போனோம். ரொம்ப இருட்டா இருந்தது. எங்க பள்ளிக்கூட மைதானம் பெரிசுங்கிறதால, இருட்டானா சில சமூக விரோதிகள் மது அருந்திட்டு இருப்பாங்க. நாங்க பாட்டில தேடிக் கண்டுபிடிச்சி மறைச்சிட்டு பார்த்ததும், அவங்க எங்களை நெருங்கிட்டாங்க. பிடிச்சி பணம் இருக்கான்னு கேட்டு மிரட்டினாங்க. நாங்க அழுதுக்கிட்டே எங்கள விட்டுருங்கன்னு கெஞ்சினோம்.’’ ‘‘ம்ம்ம்…’’ ‘‘எப்படியோ சமாளிச்சு வீடு வந்தா அங்க என் அப்பா, அம்மா கவலையோட காத்திருந்தாங்க. என் கையில பெரிய கட்டு இருக்கிறதை பார்த்து என் அப்பா, அதான் உன் தாத்தா அப்படியே மயங்கி விழுந்துட்டாரு. அப்புறம் தாத்தாவை மருத்துவமனைக்கு கூட்டிட்டு போய் இரவு அங்க தங்க வச்சி, இரவெல்லாம் தூங்காம மறுநாள் பள்ளிக்கூடம் போகும்போது எனக்கு தோணுச்சு.’’ ‘‘என்ன தோணுச்சு?’’ ‘‘கூல் ட்ரிங்ஸ் குடிக்கணும்னு கேட்டிருந்தா, என் அப்பா நிச்சயமா காசு தந்திருப்பாரு. பிறகு ஏன் இந்த திருட்டுப் புத்தி வந்தது? இப்படி திருடுறதுனால எவ்வளவு துன்பம் எனக்கும் நண்பர்களுக்கும் வந்ததுன்னு நினைச்சேன்.’’ ‘‘கையில இருக்கிற இந்தத் தழும்பு அந்த பாட்டில் குத்தினதாப்பா?’’ ‘‘ஆமா!’’ மகன் அப்பாவின் கைகளை தடவிப் பார்த்தான். நின்றவன், திடீரென்று வந்த பாதையிலேயே ஓடினான். அப்பா கத்தினார். ‘‘எங்க போறப்பா?’’…

கண்ணம்மா, கண்ணம்மா… உன் பழைய கதையை சொல்லம்மா!

கண்ணம்மா, கண்ணம்மா… உன் பழைய கதையை சொல்லம்மா! தலைப்பு சொல்லப்போகும் கதை நம்மில் பெரும்பாலானோர் மறந்து போன நிகழ்வாக இருக்கக்கூடும்? கண்ணம்மா என்னும் பாட்டியிடம் இன்றைய பேரப்பிள்ளை கண்ணன் கேட்ட கேள்வி தான் கண்ணம்மா, கண்ணம்மா…உன் பழைய கதையை சொல்லம்மா என்பது. நீண்ட நாட்களுக்குப் பிறகு தனது மகன்,மருமகள் மற்றும்…

மனமொழியும், கலைத்தன்மையும் கொண்ட பாரதிபாலன் கதைகள்

மனமொழியும், கலைத்தன்மையும் கொண்ட பாரதிபாலன் கதைகள் வல்லிக்கண்ணன்        சிறுகதைகள் விதம் விதமாக எழுதப்படுகின்றன. கதைகள் எழுதுகிறவர்கள் மனிதர்களையும், அவர்களது இயல்புகளையும், அவர்களுடைய வாழ்க்கை மற்றும் செயல் விசித்திரங்களையும் அடிப்படையாகக் கொண்டே சொற்சித்திரம் தீட்டுகிறார்கள். இவற்றில் ஒரு சிலருடைய கதைகள் மட்டுமே தனித்தன்மையும், குறிப்பிடத் தகுந்த…

கட்டுரை , கதை, கவிதை வேண்டுகோள்!

கட்டுரை , கதை, கவிதை வேண்டுகோள்! கருவூர் திருக்குறள் பேரவையின் முத் திங்கள் சிற்றி தழான “குறள் பாட்டு “சித்திரை இதழிற்கு1×8 அளவு இதழில் அன்பு – அறம் – ஈகை – செயல்__ உழைப்பு போன்ற தலைப்பில் தன்னம்பிக்கையூட்டுவதாய் ஒரு பக்கத்தில் கவிதை இரண்டு பக்கங்களுக்கு மிகாமல்…

வாரியார் சொன்ன “சாமியாரும் குரங்கும்” என்ற அருமையான கதை

வாரியார் சொன்ன “சாமியாரும் குரங்கும்” என்ற அருமையான கதை ஒரு சாமியாரின் ஆசிரமத்துக்கு நண்பர் ஒருவர் வந்தார். அவருக்கு உணவு கொடுக்க விரும்பிய சாமியார் தான் வளர்த்த குரங்கைப் பார்த்து இலை போடு என்றார். குரங்கு வாழை இலை எடுத்து வந்து போட்டது. உடனே சாமியார் தன் கையில்…

கதர் – பெயர் வந்த கதை

கதர் – பெயர் வந்த கதை ஒரு சமயம் மகாத்மா காந்தி அவர்கள், மௌலானா முகம்மது அலி, மவ்லானா சௌகத் அலி ஆகியோரின் தாயாரான பீவி அம்மாள் அவர்களை சந்திக்க அவர் வீட்டிற்கு செல்கிறார். பதறிப்போன அவர்களோ “நீங்கள் சொல்லி அனுப்பினால் நானே நேரில் வந்து உங்களை சந்தித்திருப்பேனே?”…