1. Home
  2. ஊர்வலம்

Tag: ஊர்வலம்

இறுதி ஊர்வலம்

ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை)யின் தலைவர், கணக்காய்வாளர், முனைவர் மு. அ. காதர், மறுமையின் சிந்தனையில்  எழுதிய கவிதை: இறுதி ஊர்வலம் ================= நடமாடும் பிணம் பதுக்கியது பணம் பெரும் கையானாலும் வெறும் கையோடுதானே இறுதி ஊர்வலம்? உயிரே! இதம் தரும் இதயத்தை இறுக்கிப் பிடி…

செல்லிஅம்மன் கோயில் திருவிழா: பெண்கள் முளைப்பாரி ஊர்வலம்

முதுகுளத்தூரில் அருள்மிகு ஸ்ரீ வடக்கு வாசல் செல்லிஅம்மன் கோயில் புரட்டாசி மாத பொங்கல் விழாவில் புதன்கிழமை முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. முதுகுளத்தூரில் காவல் தெய்வமாகத் திகழும் இக்கோயில் திருவிழாவில் சிறுவர், சிறுமியர் ஆடல் பாடல் கலை நிகழ்ச்சிகள், வானவேடிக்கைள், வரலாற்று நாடகம், ஆன்மிக சொற்பொழிவு போன்றவை நடைபெற்றன. புதன்கிழமை…

முதுகுளத்தூரில் 558 பக்தர்கள் கஞ்சி கலய ஊர்வலம்

முதுகுளத்தூர் ஸ்ரீவடக்குவாசல் செல்வி அம்மன் மன்றத்தின் சார்பில், ஞாயிற்றுக்கிழமை ஆதிபராசக்தி பக்தர்கள் 558 பேர் கஞ்சி கலயத்துடன் ஊர்வலமாகச் சென்றனர்.   ஆடி மாதத்தை முன்னிட்டு, முதுகுளத்தூர் செல்வி அம்மன் கோயில் தெருவில் அமைந்துள்ள ஆதிபராசக்தி கோயிலில், செல்வி அம்மன் மன்றத்தின் சார்பாக 558 பக்தர்கள் கலயம் எடுத்தனர்.…

முதுகுளத்தூர் மீலாது விழா – ஊர்வலம் – காட்சிகள்

முதுகுளத்தூர் மீலாது விழா – ஊர்வலம் – காட்சிகள்   தகவல் : துல்கிஃப்லி

முதுகுளத்தூரில் மழை வேண்டி கஞ்சிக் கலய ஊர்வலம்

முதுகுளத்தூர் ஆதிபராசக்தி ஆலயத்தில் ஆவணி ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, பக்தர்கள் மழை வேண்டி கஞ்சிக்கலயம் எடுத்துச்சென்றனர். முதுகுளத்தூர் சங்கரபாண்டி ஊருணிக்கரையில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபராசக்தி ஆலயத்தில் இருந்து, எஸ்.ராமமூர்த்தி தலைமையில் சுப்பிரமணியர் ஆலயம் வழியாக விநாயகர் கோயில், அய்யனார் கோயில் மற்றும் முக்கிய வீதிகள் வழியாக பக்தர்கள் 300 பேர்…

தேசிய வாக்காளர் தின ஊர்வலம்

முதுகுளத்தூர்:இளஞ்செம்பூரில் தேசிய வாக்காளர் தின விழா ஊர்வலம், ஓட்டுச்சாவடி அலுவலர்கள் ஆரோக்கியமேரி தலைமையிலும், மலர்க்கொடி முன்னிலையிலும் நடந்தது. ஊராட்சி தலைவர் மயிலேறிவேலன், துணை தலைவர் சம்சு லத்தீப், மக்கள் சேவை இளையோர் நற்பணி மன்ற தலைவர் உமையலிங்கம் உட்பட பலர் பங்கேற்றனர்.

முளைப்பாரி ஊர்வலம்

முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் செல்வியம்மன் கோயிலில், புரட்டாசி பொங்கலை முன்னிட்டு, செல்வநாயகபுரத்தில் முளைப்பாரி திருவிழா நடந்தது. ஊராட்சி தலைவர் செந்தில்குமார் தலைமையிலும், கிராம தலைவர் ராமச்சந்திரன், செயலாளர் ஜெகன்நாதன், பொருளாளர் நவநீதன் முன்னிலையிலும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரிகளை ஊர்வலமாக எடுத்து சென்று, சங்கராண்டி ஊரணியில் கரைத்தனர்.

முதுகுளத்தூரில் இந்திய குடியரசு தின விழா கொண்டாட்டம்

  முதுகுளத்தூரில் இந்திய குடியரசு தினவிழாவினையொட்டி பள்ளிவாசல் பள்ளிகள், அரசு மேல்நிலைப்பள்ளி, டி.இ.எல்.சி. உயர்நிலைப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களது ஊர்வலம் நடைபெற்றது. இதில் வட்டாட்சியர், காவல்துறை அதிகாரிகள், அரசு உயர் அதிகாரிகள், தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.