1. Home
  2. ஊடகம்

Tag: ஊடகம்

இந்திய அரசின் புதிய முதலீட்டுக் கொள்கையால் மூடப்பட்ட அமெரிக்க ஊடகம்!

source  – https://www.minnambalam.com/public/2020/11/27/16/huffinton-post-closed   இந்திய அரசின் புதிய முதலீட்டுக் கொள்கையால் மூடப்பட்ட அமெரிக்க ஊடகம்!   அ.குமரேசன்   கொரோனா கால நெருக்கடியின் பின்னணியில் பல பெரிய ஊடக நிறுவனங்கள் ஆட்குறைப்பு, ஊதியவெட்டு போன்ற ‘முகக் கவச’ நடவடிக்கைகளை எடுத்த செய்திகள் வந்தன. அச்சு ஊடக நிறுவனங்களுக்கு ஏற்பட்ட…

ஊடகச்சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும்

ஊடகச்சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும்   தற்போதைய மத்திய அரசின் கீழ் ஊடகச்சுதந்திரம் முன்னெப்போதுமில்லாத அளவுக்கு கடும் அச்சுறுத்தலுக்கு ஆளாகிவருகிறது. ஊடகங்களை அரசின் ஊதுகுழலாக மாற்றும் இழிமுயற்சிக்கு இணங்காமல்  மக்களின் கண்ணோட்டத்திலிருந்து அரசை விமர்சிக்கின்ற ஊடக நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீது பொய்வழக்கு பதிவது, ஒளிபரப்பை நிறுத்துவது, கைது செய்வது, சிறைப்படுத்துவது, விளம்பரங்களை மறுப்பது உள்ளிட்ட போன்ற அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருகின்றன.. அரசையும் ஆளுங்கட்சியையும் விமர்சிக்கும் ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் தேசவிரோத சக்திகள், அர்பன் நக்சல்கள், அன்னிய கைக்கூலிகள், நடுநிலை தவறியவர்கள் என்று  இட்டுக்கட்டிய பொய்களை சிலர் பொதுவெளியில் பரப்பி வருகின்றனர். ஊடக விவாதங்கள் அனைத்திலும் தங்கள் தரப்பை இடம்பெறச் செய்யவேண்டும் என்று மிரட்டுவதும், விவாதப் பொருள் குறித்த அடிப்படையறிவுகூட இல்லாத பலரை நானாவிதப் பெயர்களில் உள்ளே நுழைப்பதும், விவாதங்களில் நெறியாள்பவர்களையும் கருத்தாளர்களையும் கண்ணியமற்ற முறையில் வசைபாடுவதுமாக இவர்களது அச்சுறுத்தலும் அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக உலகளாவிய ஊடகச்சுதந்திரம் குறித்தான அட்டவணையில் இந்தியா 142ஆவது இடத்தைப் பெற்று கீழிறங்கியுள்ளது. தமிழகத்தில் பெண் ஊடகவியலாளர்களை, கருத்தாளர்களை பாலினரீதியாக சிறுமைப்படுத்தும் முயற்சி நடந்து வருகிறது. இப்போது நியூஸ் 18 தொலைக் காட்சியில் பணியாற்றும் ஊடகவியலாளர்கள் மீது புகார் ஒன்று அந்த நிறுவனத்தின் நிர்வாகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்தப் புகாரில் ஏராளமான பொய்களும் தகவல் பிழைகளும் இருக்கின்றன.. அதில் பெரியாரிய அம்பேத்கரிய, மார்க்சிய கருத்தியல்கள் மீதான வெறுப்பு மலிந்துள்ளது. தங்களை விமர்சிக்கிற யாரும் பணியில் தொடர முடியாது என அச்சுறுத்த இந்தப் பொய்ப்புகாரை இறக்கியுள்ளவர்களுக்கு தமுஎகச தனது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துகொள்கிறது. இந்த அடாவடித்தனத்திற்கு எதிராக கண்டனம் எழுப்புமாறு ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள அனைவரையும் தமுஎகச கேட்டுகொள்கிறது. இந்த அடாவடி கும்பல் மீது சட்டரீதியான நடவடிக்கை  எடுத்து ஊடகச்சுதந்திரத்தை பாதுகாக்கும் அரசியல் சாசனக் கடமையை நிறைவேற்றுமாறு தமிழக அரசை தமுஎகச வற்புறுத்துகிறது. -தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்  

தமிழ் ஊடகங்களில் பழங்குடியினர் பதிவுகள்

தமிழ் ஊடகங்களில் பழங்குடியினர் பதிவுகள் ​பேராசிரியர் அ.ராமசாமி பண்பாடு என்பதை இரட்டை எதிர்வுகளின் மோதலாகக் கணித்துப்  பேசும் ஆய்வாளர்கள் தங்களின் சார்புக் கேற்ப தரவுகளைச் சேகரித்து வாதிட்டு நிறுவ முயலும் காலத்தை இன்னும் நாம் கடந்து விடவில்லை . நிகழ்காலத்தில் அதிகம் உச்சரிக்கப்படும் எதிர்வாக இருப்பது மைய நீரோட்டப்…

அறிவியல் விழிப்புணர்வும் ஊடகங்களும்

அறிவியல் கதிர் அறிவியல் விழிப்புணர்வும் ஊடகங்களும் பேராசிரியர் கே. ராஜு அறிவியல் செய்திகளுக்கும் விழிப்புணர்வுக்கும் இன்று ஊடகங்கள் கொடுக்கும் இடம் மிகமிகக் குறைவானது. மக்களை உணர்ச்சிவயப்படுத்தும் கொலைகள், பாலியல் செய்திகள், அரசியல் கட்சிகளின் மோதல்கள் போன்ற பரபரப்புச் செய்திகளும் சினிமா நடிக நடிகைகளின் படங்களும்  பெரும்பாலான செய்தித்தாள்களில் முதல்…

பறை எனும் தகவல் ஊடகம்

பறை எனும் தகவல் ஊடகம் பறை எனும் தகவல் ஊடகம் இலக்குவனார் திருவள்ளுவன்   எட்டுத் தொகையில் ஒன்றாகிய பரிபாடல் இசைத் தமிழ்ப்பாடல்களைக் கொண்ட நூலேயாகும். ஒவ்வொரு பாடலிலும் அந்தந்தப் பாட்டுக்குரிய பண் இன்னதென்பது குறிக்கப் பெற்றுள்ளது.   சிலப்பதிகாரத்தில் பல இசைப்பாடல்களும் செய்திகளும் இடம் பெற்றுள்ளன. அவற்றிற்கு…

ஊடக விபச்சாரம் !

  (பி.  எம்.கமால், கடையநல்லூர்)       உடலை விற்று  வயிற்றை வளர்ப்பவள்  விபச்சாரி ! பொய்யை விற்றுப்  பையை  நிரப்புபவன்  ஊடக முதலாளி !   குண்டுவெடிப்பில்  முஸ்லிம் கைதானால்  தலைப்புச் செய்தி  அவனே  குற்றமற்றவன் என்று  விடுதலை ஆனால்  பெட்டிச் செய்தியுமில்லை  குட்டிச் செய்தியுமில்லை !…

மனசாட்சியை மறந்து போன ஊடகங்கள்!

                                 (கீழை ஜஹாங்கீர் அரூஸி) இந்திய நர்ஸ்கள் 46பேரை ஈராக்கில் ISIS போராளிகள் கடத்தி விட்டனர் என்ற ஒற்றை செய்தி மட்டுமே உண்மை என்ற நிலையையும் கடந்து,…

உலக ஊடக சுதந்திர நாள்: மே 3

உலகமெங்கும் ஊடக சுதந்திரத்தைப் பாதுகாக்க ஐ நா பேரவை மே 3 ஆம் நாளை ஊடக சுதந்திர நாள் என அறிவித்துள்ளது. ஜனநாயகத்தைக் காப்பாற்றும் போராட்டத்தில் கட்சி, ஆட்சி முதலான காப்பரண்கள் இல்லாமல் களத்தில் நிற்பவர்கள் ஊடகவியலாளர்கள். சர்வாதிகார ஆட்சியாளர்களின் முதல் இலக்காக இருக்கும் அவர்கள் ஒவ்வொரு ஆண்டும்…

விக்கிப்பீடியா ஊடகப் போட்டி

தமிழ் விக்கிப்பீடியா ஊடகப் போட்டி ஒன்றை நடத்த உள்ளது. இதில் பங்கேற்போர் தமிழ்–தமிழர் தொடர்புடையபுகைப்படங்கள், ஒலிக் கோப்புகள், ஒளிக் கோப்புகள், அசைப்படங்கள், வரைபடங்கள் ஆகியவற்றைப் பதிவேற்றலாம்.போட்டிக்காகப் பதிவேற்றும் கோப்புகள் பங்கேற்பாளரது சொந்தப் படைப்புகளாக இருக்க வேண்டும். இப்போட்டியின்மொத்தப் பரிசுத் தொகை 850 அமெரிக்க டாலர்கள். இப்போட்டியில் முதல் பரிசாக 200 டாலர்கள், இரண்டாம் பரிசாக 100டாலர்கள், மூன்றாம் பரிசாக 50 டாலர்கள் என பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளன. ஆறுதல் பரிசாக 25 டாலர் வீதம்இரண்டு பரிசுகளும் வழங்கப்பட உள்ளன. இவை தவிர தொடர்ச்சியாகப் பங்களிப்போருக்காக 100 டாலர் வீதம் மூன்றுசிறப்புப் பரிசுகளும், தமிழர் தொழிற்கலைகளைப் பற்றிய சிறந்த ஊடகக் கோப்புக்காக 150 டாலர் சிறப்புப் பரிசாகவும்வழங்கப்பட உள்ளன. போட்டி, நவம்பர் 15, 2011 முதல் பிப்ரவரி 29, 2012 வரை நடைபெறும். போட்டியில் பங்கேற்க விரும்புவோர்http://ta.wikipedia.org/wiki/contest>  என்ற இணைய முகவரிக்குச் சென்று முழு விவரங்களையும் அறிந்துகொள்ளலாம்.போட்டி பற்றிய சந்தேகங்கள் மற்றும் கேள்விகளை tamil.wikipedia@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பித்தகுந்த பதில்களைப் பெறலாம். குறிப்பு: 1. பரிசுத்தொகை வெற்றிபெறுபவரின் நாட்டின் நாணய அலகுக்கு மாற்றப்படும். 2. தமிழ் விக்கிப்பீடியா ஊடகப் போட்டிக்காக தமிழ் விக்கிப்பீடியாவில் வலைவாசல் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.அதிலும் பல தகவல்கள் தரப்பட்டுள்ளன. அதற்கான இணைய முகவரி: http://tawp.in/r/2rbo

தாய் தொலைக்காட்சி

—– Forwarded Message —– > > *From:* Indian Reporter <indianreporter2…@yahoo.in>** > > > ** > > > அன்புடையீர். >  வணக்கம். தாய் தொலைக்காட்சி என்ற இணையத் தள தொலைக்காட்சி 21.07.2011 காலை 06.  மணிக்கு  ஒளிபரப்பினைத் தொடங்குகிறது என்ற செய்தியை மகிழ்வோடு…