1. Home
  2. இந்தியா

Tag: இந்தியா

முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் இந்தியாவின் 75வது குடியரசு தின விழா உற்சாக கொண்டாட்டம்

முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் இந்தியாவின் 75வது குடியரசு தின விழா உற்சாக கொண்டாட்டம்

சென்னையில் வரும் 22 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை நடைபெற இருந்த இந்தியா மற்றும் இலங்கை மாற்றுத்திறனாளி அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி நடக்குமா ?

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் அப்பாஸ் அலி கவலை சென்னையில் வரும் 22 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை நடைபெற இருந்த இந்தியா மற்றும் இலங்கை மாற்றுத்திறனாளி அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி நடக்குமா ? இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் அப்பாஸ் அலி…

என்ன செய்யப் போகிறது இந்தியா?

என்ன செய்யப் போகிறது இந்தியா?   புதிய ஆண்டில் அடி எடுத்து வைத்திருக்கிறோம். உலக அளவில் சமூகம், அரசியல், பொருளாதார ரீதியாக மிக முக்கியமான மாற்றங்களுக்குக் கடந்த ஆண்டு தூண்டுகோலாக அமைந்திருக்கிறது. கரோனா பரவலைத் தடுத்தல், காலநிலையில் ஏற்பட்டு வரும் மாற்றங்களுக்குத் தீர்வு காணுதல், செயற்கைத் தொழில்நுட்பங்களின் வளர்ச்சி, தற்போதைய யுகத்துக்கு ஏற்றாற்போல் பொருளாதார கட்டமைப்பை…

“தற்சார்பு இந்தியா” என சொல்வது நாடகமா? .. தில்லி உயர் நீதிமன்றம் கேள்வி

“தற்சார்பு இந்தியா” என சொல்வது நாடகமா? .. தில்லி உயர் நீதிமன்றம் கேள்வி   விமான நிலையங்கள் தொடர்பான ஏலத்தில் பங்கேற்கும் நிறுவனங்களின் தகுதியை (Eligibility Criteria) மாற்றி அமைத்திருக்கும் விஷயத்தில், மத்திய அரசின் செயல் அதிருப்தி அளிப்பதாகவும்; மேக் இன் இந்தியா, தற்சார்பு இந்தியா முழக்கங்கள் பாசாங்குத்தனமானதா என்ற சந்தேகத்தை வரவழைப்பதாகவும் தில்லி உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. விமான நிலைய பராமரிப்புப் பணி தொடர்பான ஏலத்தில் பங்கேற்கும் நிறுவனங்களுக்கான தகுதியை, திடீரென மத்திய அரசு மாற்றியமைத்தது. அதாவது, சரக்குகள் கையாளுதல், விமானங்களை சுத்தம் செய்தல் உள்ளிட்ட சேவைகளுக்கான இந்த ஏலத்தில், ஆண்டுக்கு ரூ.35 கோடி விற்றுமுதல் இருக்கும் நிறுவனங்கள்தான் பங்கேற்க முடியும் என புதிய விதியைக் கொண்டு வந்தது.இதற்கு எதிராக மத்திய விமானக் கொள்கை, பாதுகாப்பு மற்றும் ஆய்வு (Centre for Aviation Policy,Safety and Research – CAPSR)அமைப்பு, தில்லி உயர் நீதிமன்றத் தில் அண்மையில் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கில்தான், நீதிபதிகள்விபின் சாங்கி, ரஜனிஷ் பட்நாகர் ஆகியோர் மத்திய அரசை கடுமையாக சாடியுள்ளனர். மத்திய அரசின் நிலைப்பாடு எங்களுக்கு வேதனை அளிக்கிறது. ஒருபுறம் மேக் இன் இந்தியா, தற்சார்பு இந்தியா என்று பிரச்சாரம் செய்கிறார்கள். மறுபுறம், விமான நிலையசேவைக்கான டெண்டரில் சிறு நிறுவனங்களைத் துரத்தி விடும் வகையில் விதிகளை மாற்றுகிறார்கள்.மத்திய அரசும், இந்திய விமான நிலையங்கள் ஆணையமும் சிறு நிறுவனங்களை ஏலத்திலிருந்து வெளியேற்ற விரும்பினால், ‘இதுதான் எங்கள் கொள்கை’ என்று வெளிப்படையாக துணிச்சலாக கூறுங்கள். அரசியல் தலைமைப் பதவியில்உள்ளவர்கள் ‘மேக் இன் இந்தியா’,‘தற்சார்பு இந்தியா’ பற்றிப் பேசுகிறார்கள். உள்நாட்டு தொழில்களைவளர்க்க வேண்டும் என்று கூறுகிறார்கள். ஆனால், விமான நிலையங்கள் ஆணையத்தின் செயல்பாடு அவர்களின் வார்த்தைக்குப் பொருத்தமாக இல்லை. முழுவதும் பாசாங்குத்தனமாகவே (Hypocritical) இருக்கிறது. இதுபோன்று சிறிய நிறுவனங்களை வெளியேற்றும் விதத்தில் நடந்துகொண்டால், எதற்காக, ‘மேக் இன் இந்தியா’ பற்றி அரசியல்தலைவர்கள் பேசுகிறார்கள்? இந்தியாவில்தான் தயாரிக்க வேண்டும் என்று கூறுகிறோம், இந்தியாவுக்காகச் சேவை செய்ய வேண்டும், தற்சார்பு பொருளாதாரமாக மாற வேண்டும் என பேசுகிறோம். இந்த நாட்டிலிருந்து இறக்குமதி செய்வதை நிறுத்துங்கள் என்று கூறுகிறோம். மறுபுறம் நம்முடைய சொந்த நாட்டைச் சேர்ந்த தொழில் முனைவோர்களை ஊக்கப்படுத்துவதில் தோல்வி அடைந்து விடுகிறோம்.நம் மண்ணைச் சேர்ந்த சொந்த தொழில் முனைவோரை ஊக்குவிப்பதில் நாடு அலட்சியமாகவும் உணர்ச்சியற்றதாகவும் இருந்ததன் காரணமாக, இந்நாட்டில் உற்பத்தி செய்வதும் அல்லது தொழில் நடத்துவதும் கடினம் என்று கூறி பலர் வெளியேறி விட்டனர். “சிறிய நிறுவனங்கள் வளர்வதற்கு அனுமதிக்காவிட்டால், சந்தையில் பெரு நிறுவனங்களின் ஆதிக்கம் மட்டுமே இருக்கும், அரசுக்கே அவர்கள் ஒரு கட்டத்தில்கட்டளையிடுவார்கள்” என்று நீதிபதிகள் சாட்டையைச் சுழற்றியுள்ளனர்.நிறுவனங்கள் ஏலத்தில் பங்கேற்பதற்கான தகுதி குறித்த விஷயத்தில், மத்திய அரசும், இந்திய விமான ஆணையமும் தங்களின் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண் டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.  

பிரிட்டிஷ் இந்தியாவை அதிரச் செய்த பின்ஹே தீர்ப்பு

பிரிட்டிஷ் இந்தியாவை அதிரச் செய்த பின்ஹே தீர்ப்பு —  ரெங்கையா முருகன் (வ.உ.சி.க்கு வழங்கப்பட்ட இரட்டை ஆயுள் தண்டனை தீர்ப்பு 07/07/1908) 1908 ம் ஆண்டு மார்ச் மாதம் வ.உ.சி. மற்றும் சுப்பிரமணிய சிவா, பத்மநாப அய்யங்கார் ஆகியோர் இணைந்து அன்றைய வெள்ளையர் ஏகாதிபத்திய எதிர்ப்புப்பேச்சு நிகழ்த்தியமைக்காக இந்தியத் தண்டனைச்…

கல்வெட்டுகளும், செப்பேடுகளும் இல்லாவிட்டால் இந்தியா வெறும் பழங்கதை பேசும் நாடே!

கல்வெட்டுகளும், செப்பேடுகளும் இல்லாவிட்டால் இந்தியா வெறும் பழங்கதை பேசும் நாடே! By ஆர்.தங்கராஜு ஒரு நாட்டின் கலை, இலக்கியம், அரசியல், சமுதாய, பொருளாதார வரலாற்றை முழுமையாக வெளிக்கொண்டு வரவேண்டுமெனில் அதற்கு அடிப்படைச் சான்றுகளாக அமையும் ஆவணங்கள் எளிதில் கிடைக்க செய்ய வேண்டும். பல்கலைக்கழகங்கள், ஆய்வு அமைப்புகள், தனியார் என்று பலதரப்பினரும்…

‘இந்தியா எங்கள் தாய் நாடு, யாரடா எங்களை அந்நியர் என்றது?

‘இந்தியா எங்கள் தாய் நாடு, யாரடா எங்களை அந்நியர் என்றது? (டாக்டர் ஏ.பீ. முகமது அலி, பிஎச்.டி; ஐ.பீ.எஸ்(ஓ) என்னுடன் காலை நடைப் பயிற்சிக்கு வரும் அனிஸ் புர்கா உரிமையாளர் ஹாஜி கபீர் அவர்கள் என்னைப் பார்த்து, ‘ஏன் சார், மக்கள் குடி உரிமை சட்டத்திற்கு முஸ்லிம்கள் மட்டும்…

இந்தியா எங்கள் தாய் நாடு

‘இந்தியா எங்கள் தாய் நாடு, யாரடா எங்களை அந்நியர் என்றது? (டாக்டர் ஏ.பீ. முகமது அலி, பிஎச்.டி; ஐ.பீ.எஸ்(ஓ) என்னுடன் காலை நடைப் பயிற்சிக்கு வரும் அனிஸ் புர்கா உரிமையாளர் ஹாஜி கபீர் அவர்கள் என்னைப் பார்த்து, ‘ஏன் சார், மக்கள் குடி உரிமை சட்டத்திற்கு முஸ்லிம்கள் மட்டும்…

இந்தியாவை இருள் சூழ்கிறது – நீதிபதி மார்க்கண்டே கட்ஜு

இந்தியாவை இருள் சூழ்கிறது – நீதிபதி மார்க்கண்டே கட்ஜு இப்போது இந்தியாவில் நடந்து கொண்டிருப்பவை, நாஜி காலத்தில் ஜெர்மனியில் நடந்தவற்றை நினைவூட்டுகிறது. ஜனவரி 1933 இல் ஹிட்லர் ஆட்சியைப் பிடித்த பிறகு, கிட்டத்தட்ட ஜெர்மனி முழுவதும் முட்டாள்தனத்தில் முழ்கியது. மக்கள் ‘ஹிட்லர் வாழ்க’, ‘வெற்றி வெற்றி’, ‘யூதர்கள் ஒழிக…

சிங்கப்பூரில் இந்தியாவுக்கு வெளியே இந்தியர்கள் நடத்தும் மாபெரும் இஃப்தார் நிகழ்வு!

சிங்கப்பூரில் இந்தியாவுக்கு வெளியே இந்தியர்கள் நடத்தும் மாபெரும் இஃப்தார் நிகழ்வு! (மு.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் பயண இலக்கிய பதிவு) உலகின் வளம் வாய்ந்த தீவு தேசமாக திகழ்கிறது சிங்கப்பூர் . ஒரு மீன் பிடி பிரதேசமாகவும், சதுப்பு நில பூமியாகவும் இருந்த தீவை, உலகம் மதிக்கும் பொருளாதார…