1. Home
  2. அரசு மருத்துவமனை

Tag: அரசு மருத்துவமனை

திருவனந்த புரம் அரசு மருத்துவமனை

# அன்பு_நண்பர்களே…!!! 4-5 நாட்களுக்கு முன் நன்றாக இருந்த என் நண்பனின் அத்தை ( வயது 51) திடீர் என்று மயக்கம் போட, கோவையில் உள்ள பிரபலக்கல்லுரியின் மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள்.  மூளையில் ரத்தக்கசிவு,உடனே அறுவை சிகிச்சை, 8ல் இருந்து 10 லட்சம் ஆகும் என அறிவித்தனர். மிரண்டு போன நண்பனின் மாமா செய்வதறியாமல் திகைத்த நிலையில்… அங்கேயே இருந்த ஒரு நல்லிதயம் கொண்ட மருத்துவர் ஒரு நல்ல ஆலோசனை வழங்கினார். “மிகச்சிக்கலான இந்த அறுவைச் சிகிச்சை இங்கே மாதம் ஒன்றோ இரண்டோ நடக்கும் நிலையில், தினமும் ஐந்து -பத்து சாதாரணமாக நடக்கும் திருவனந்த புரம் அரசு மருத்துவமனைக்கு ( Thirvendram Medical college Hospital) உடனே எடுத்துச்செல்லுங்கள்”, எனக்கூறினார். உடன், ஒரு கடிதமும் வாங்கிக்கொண்டு ஆம்புலன்ஸில் விரைந்து காலையில் அட்மிட் செய்துள்ளனர். உடனே, அட்மிஷன் செய்து நோயாளியின் தன்மைக்கேற்ப பரிசோதனைகள் செய்து, அறுவைச் சிகிச்சைக்குத் தேவையான மருந்துகள் மட்டும் வாங்கித் தரச்சொல்கின்றனர்.( ஒரு 40000 to 60000 ஆகலாம்). டாக்ட்டர் ஃபீஸ் இல்லை. சரியாகி வீடு திரும்பும்வரை அட்மிஷன் தருகிறார்கள். உணவு,மருந்து மாத்திரைகள் நாமே வாங்கிக் கொள்ளவேண்டும். நண்பர்களே, ஏதோ நம் ஊர் அரசு மருத்துவமனையை மனதில் நினைத்துக்கொண்டு அசிரத்தையாக இருக்காதீர்கள். உலகத்தரம் வாய்ந்த, இராணுவக் கட்டுப்பாடுடன் கூடிய மருத்துவமனை அது.  இதயம்,நரம்பு, மூளை போன்ற மிகச்செலவு பிடிக்கும் வியாதிகளுக்கு  மிக மிகச் சிறப்பான , செலவு மிக மிகக் குறைவாக ஆகும் மருத்துவமனை. அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். ரேஷன் அட்டை, ஆதார் அட்டை கொண்டு செல்லுங்கள். நகை நட்டை விற்று, வீடு தோட்டம் விற்று, நீண்ட நாள் சேமிப்பை இழக்காமல் சிறந்த  சிகிச்சையைப் பெறலாம். பயன்படுத்திக்கொள்ளுங்கள்.   Trivandrum Medical College Hospital Casualty Enquiry Number 0471 –…

முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர் இல்லாததால் நோயாளிகள் அவதி

முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் இரவு நேரங்களில் மருத்துவர் இல்லாததால், நோயாளிகள் அவதியுற்று வருகின்றனர்.    ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அரசு மருத்துவமனைக்கு தினமும் 500- க்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து செல்கின்றனர். இந்த மருத்துவமனையில் 10 மருத்துவர்கள் பணியில் இருக்கவேண்டிய நிலையில், ஒரேயொருவர் பகலில் மட்டும் பணியில் உள்ளதாக…

முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதி

முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் இரவு நேரங்களில் மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகள் அவதி அடைவதாக புகார் கூறப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அரசு மருத்துவமனைக்கு தினமும் 500 க்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து செல்கின்றனர். மருத்துவமனையில் 10 மருத்துவர்கள் பணியில் இருக்க வேண்டும். ஆனால் பகலில் மட்டும் 2 மருத்துவர்கள்…

மருத்துவர்கள் இல்லாத அரசு மருத்துவமனை: நோயாளிகள் அவதி

முதுகுளத்தூர் தாலுகா அரசு மருத்துவமனையில் போதுமான மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகள் அவதி அடைந்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் 50 படுக்கை அறைகள் உள்ளன. இங்கு அறுவை சிகிச்சை மையம், எக்ஸ்ரே, ஸ்கேன், ஈசிஜி, பரிசோதனைக் கூடம் என அனைத்து வசதிகளும் உள்ளன. ஆனால் இதற்கான…

கடலாடி அரசு மருத்துவமனையில் நீராவிக்குளியல்

கடலாடி அரசு மருத்துவமனை சித்த மருத்துவப் பிரிவில் தலைவலி, கை கால் உளைச்சல், தோல்வியாதி, மூட்டுவலி,போன்ற நோய்களுக்கு சித்த மருத்துவ நீராவிக்குளியல் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் சக்கரை நோய், ரத்தக் கொதிப்பு வியாதிகளுக்கு நடைப்பயிற்சி அளிக்கப்படுகிறது. கடலாடி,சாயல்குடி பகுதியில் பரவி வரும் தொற்றுநோய்கள் மற்றும் டெங்குகாய்ச்சலுக்கு 24…

சென்னை அரசு மருத்துவமனையில் பள்ளிவாசல்………!!

   சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அல்லாஹ்வை வணங்கும் அற்புத பள்ளி ஒன்றை கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நிறுவியுள்ளனர் அங்கு பணிபுரியும் இஸ்லாமிய மருத்துவர்கள்! பெரும்பாலான இஸ்லாமியர்கள் இந்த மருத்துவமனையில் அன்றாடம் சிகிச்சை பெற்று வருகின்றனர் இதில் அதிகமானவர்கள் மருத்துவ மனையில் அனுமதித்து தங்கி சிகிச்சை…

முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில்இரவில் இருக்காத டாக்டர்கள்:அலைக்கழிக்கப்படும் நோயாளிகள்

முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில், இரவில் டாக்டர்கள் இல்லாததால், நர்சுகளின் உதவியால், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் 11 டாக்டர்களுக்கு பதில், மூன்று டாக்டர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். இரவில் இருப்பதில்லை. 19 நர்சுகளுக்கு பதில் 13ம், நான்கு துப்புரவு பணியாளர்களில் ஒருவர் மட்டுமே…

முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லாததால்…சிக்கல்

முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லாததால் குற்றவாளிகளை உடனடியாக சிறையில் அடைப்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்படுகிறது. இதனால் போலீசார்- நர்களிடையே அடிக்கடி ஏற்படும் வாக்குவாதம் மருத்துவமனையை ரணகளமாக்கி விடுகிறது. முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் 11 டாக்டர் பணியிடங்களில் தற்போது மூவர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். மக்களுக்கு…