List/Grid

Tag Archives: ஷார்ஜா

ஷார்ஜா சர்வதேச புத்தக கண்காட்சியில்  தமிழக எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன்

ஷார்ஜா சர்வதேச புத்தக கண்காட்சியில் தமிழக எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன்

ஷார்ஜா சர்வதேச புத்தக கண்காட்சியில் தமிழக எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் வாசகர்களுடன் சிறப்பு சந்திப்பு நிகழ்ச்சி ஷார்ஜா : ஷார்ஜா சர்வதேச புத்தக கண்காட்சியில் தமிழக எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் வாசகர்களுடன் சிறப்பு சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. ஷார்ஜா புத்தக ஆணையத்தின் சார்பில் சர்வதேச புத்தக கண்காட்சி கடந்த 11ஆம் தேதி தொடங்கி எக்ஸ்போ சென்டரில் நடந்து வருகிறது. வரும் 11-ஆம் தேதிவரை இந்த கண்காட்சி நடக்கும். இந்த புத்தக கண்காட்சியில் வாசகர்கள் தங்களது மொழி சார்ந்த இலக்கிய ஆளுமைகளை சந்திக்கும் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. தமிழ்மொழியில் இந்த ஆண்டு இலக்கிய ஆளுமையாக தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் எஸ். ராமகிருஷணன் தேர்வு செய்யப்பட்டு சார்ஜா அரசின் சிறப்புவிருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். அவருடனான வாசகர்கள் சந்திப்பு நேற்று முன் தினம் வெள்ளிக்கிழமை மாலை நடந்தது. அவரது துணையெழுத்து என்றநூல் இந்த நிகழ்ச்சியின் கருவாக அமைக்கப்பட்டிருந்தது. அவர் தனது உரையில் தன்னை இந்த புத்தக கண்காட்சிக்கு சிறப்பு விருந்தினராக அழைத்த நிர்வாகத்தினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் பங்கேற்ற தமிழ் வாசகர்களை சந்திப்பதில் மிகவும் சந்தோசம் அடைகிறேன். தன்னை அடையாளம் காட்டும் வகையில் பிரபலவார இதழில் வெளியான Ôதுணையெழுத்துÔ மிகவும் முக்கியமாக இருந்தது. இது பின்னர் நூலாக வெளியிடப்பட்டது. அந்த நூல் இதுவரை 35 பதிப்பைகண்டுள்ளது. தொடர்ந்து இந்த நூலின் விற்பனை அதிகரித்து வருகிறது. தன்னை ஒரு சீரியசான எழுத்தாளர் என்ற அடையாளத்தை இந்த கட்டுரை மாற்றியமைத்தது. இதில் சமூகத்தில் நடைபெறும் நிகழ்வுகளை எழுத்தின் மூலம்படம் பிடித்துக் காட்டியிருந்தேன். அது பலரது உள்ளத்தையும் கவர்ந்துள்ளது. தமிழ் இலக்கியத்துக்காக பாடுபட்ட கம்பர், சீத்தலைச் சாத்தனார், மாங்குடி மருதன்  உள்ளிட்ட பலர் பாடுபட்டுள்ளனர். அவர்கள் அனைவரும்இலக்கியத்துக்காகவே தங்களது வாழ்க்கை அமைத்துக் கொண்டுள்ளனர். எனினும் அவர்கள் எங்கு இருந்தார்கள், எங்கு மறைந்தார்கள் என்பன போன்றதகவல்களை தெரிந்து கொள்ள முடியாத சூழல் நிலவி வருகிறது. ஒரு சிலருக்கு மட்டுமே நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த வெள்ளி வீதியார் என்ற பெண் காதல் கவிதைகளை சிறப்புடன் எழுதி வந்தவர். அவர் குறித்த தகவல்களை இலக்கிய உலகம் மிகவும்அரிதாகவே தெரிய முடிகிறது. வரலாறு, மொழி ஆகியவற்றில் முன்னோடியாக இருந்து வருவது தமிழ் இனம் ஆகும். தமிழர்களின் நாகரிகம் தொன்மையானது. செய்தித்தாள்களில் மருத்துவ உதவி கேட்டு வரும் விளம்பரங்களை பார்த்து சாமான்யர்கள் சிறு உதவிகளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம்பெரிய அளவிலான உதவிகள் சென்று சேர முடியாவிட்டாலும், அந்த குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் காவலாளி உள்ளிட்ட சிறுவேலைகளை செய்து வருவது தனது எழுத்துக்கு கிடைத்த ஒரு அங்கீகாரம் ஆகும். ஒரு சிறு உதவி செய்தாலும் அதனை நன்கொடையளிப்பவர்கள் தங்களது பெயரை அந்த பொருளில் பதிப்பவர்களுக்கு மத்தியில் தமிழகத்தை ஆண்ட சேர, சோழ, பாண்டியன் உள்ளிட்ட மன்னர்களின் சேவைகள் மிகவும் பெருமைக்குரியது ஆகும். எனது வாழ்வை  ஒரு எழுத்தாளனாக மட்டுமே அமைத்துள்ளேன். பலர் அரசு அல்லது அவரவரது விடுமுறைகளை அவர்கள் வேலை பார்க்கும் நிறுவனம்நிர்ணயிக்கும். எனினும் எனது விடுமுறையை நானே நிர்ணயித்துக் கொள்ளும் வாய்ப்பு பெற்றுள்ளேன். மேலும் இந்திய வரைபடத்தை பார்த்த நான் அந்த வரைபடத்தில் உள்ள பல்வேறு இடங்களுக்கும் பயணப்பட்டேன். இது எனக்கு ஒரு புதிய அனுபவத்தைஅளித்தது. இதன் மூலம் நமது வரலாறு, பண்பாடு உள்ளிட்டவற்றை கற்றுக் கொடுத்தது. இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் பத்திரிகையாளர் முதுவை ஹிதாயத், கம்பம் தினேஷ், மதுரை அக்மல் ஹசன், காரைக்குடி ஹமீத் உள்ளிட்ட வாசகர்கள் பலர்குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

ஷார்ஜாவில் பொதுமக்களை கவர்ந்து வரும் அல் கஸ்பா பொழுது போக்கு மையம்

ஷார்ஜாவில் பொதுமக்களை கவர்ந்து வரும் அல் கஸ்பா பொழுது போக்கு மையம்

ஷார்ஜாவில் பொதுமக்களை கவர்ந்து வரும் அல் கஸ்பா பொழுது போக்கு மையம் ஷார்ஜா : ஷார்ஜாவில் பொதுமக்களை கவர்ந்து வரும் வகையில் அல் கஸ்பா பொழுது போக்கு மையம் திகழ்ந்து வருகிறது. இந்த இடத்தில் இசையுடன் பீறிட்டு கிளம்பும் வகையில் நடனமாடும்… Read more »

ஷார்ஜா ஃபாரூக் ரஷித் இல்ல மண விழா

ஷார்ஜா ஃபாரூக் ரஷித் இல்ல மண விழா

ஷார்ஜாவில் பாதிக்கப்பட்டுள்ள மூன்று தமிழர்கள்

ஷார்ஜாவில் பாதிக்கப்பட்டுள்ள மூன்று தமிழர்கள்

ஷார்ஜாவில் பாதிக்கப்பட்டுள்ள மூன்று தமிழர்கள் ஷார்ஜா : ஷார்ஜாவுக்கு வேலைக்காக மணிகண்டன் உள்ளிட்ட மூன்று பேர் காரைக்குடி பகுதியில் இருந்து வந்துள்ளனர். ஆனால் அவர்களை வேலைக்கு அழைத்து வந்த நிறுவனம் வேலைக்கான சம்பளமோ அல்லது தங்குமிடமோ வழங்கவில்லை. இதன் காரணமாக அவர்… Read more »

ஷார்ஜாவில் உணவு, தங்குமிடம் இன்றி தவிக்கும் தமிழர்கள்

ஷார்ஜாவில் உணவு, தங்குமிடம் இன்றி தவிக்கும் தமிழர்கள்

ஷார்ஜாவில் உணவு, தங்குமிடம் இன்றி தவிக்கும் தமிழர்கள்   ஷார்ஜாவில் உணவு, தங்குமிடம் இன்றி தவிக்கும் தமிழர்கள்   ஷார்ஜா : ஷார்ஜாவில் உணவு மற்றும் தங்குமிடம் இன்றி தமிழர்கள் தவித்து வருகின்றனர். தமிழகத்தைச் சேர்ந்தவர் பரக்கத் அலி. இவர் மற்றும்… Read more »

துபாய், ஷார்ஜா உள்ளிட்ட பகுதிகளில் வர்த்தக நிறுவனங்கள், வீடுகள் உள்ளிட்டவற்றை கிளீனிங் செய்ய …….

துபாய், ஷார்ஜா உள்ளிட்ட பகுதிகளில் வர்த்தக நிறுவனங்கள், வீடுகள் உள்ளிட்டவற்றை கிளீனிங் செய்ய …….

துபாய், ஷார்ஜா உள்ளிட்ட பகுதிகளில் வர்த்தக நிறுவனங்கள், வீடுகள் உள்ளிட்டவற்றை கிளீனிங் செய்ய …….   அமீரகத்தின் வர்த்தக நகராம் துபாயை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருவம் தமிழக நிறுவனம் அல் நஜ்மா அல் பரிதா இண்டர்னேசனல் இந்த நிறுவனம் கிளீனிங்… Read more »

மார்ச் 23, ஷார்ஜாவில் ரத்ததான முகாம்

மார்ச் 23, ஷார்ஜாவில் ரத்ததான முகாம்

மார்ச் 23, ஷார்ஜாவில் ரத்ததான முகாம் ஷார்ஜா : ஷார்ஜா அல் வக்தா சாலை லூலூ ஹைபர் மார்க்கெட் பின்புறம் உள்ள யூனியன் டாக்சி அலுவலகத்தில் 23.03.2017 வியாழக்கிழமை காலை 8 மணி முதல் மதியம் 12.30 மணி வரை ரத்ததான முகாம் நடைபெற இருக்கிறது. இந்த… Read more »

ஷார்ஜாவில் சென்னை நியூ காலேஜின் முன்னாள் முதல்வர் அப்துல் மாலிக்

ஷார்ஜாவில் சென்னை நியூ காலேஜின் முன்னாள் முதல்வர் அப்துல் மாலிக்

ஷார்ஜாவில் சென்னை நியூ காலேஜின் முன்னாள் முதல்வர் அப்துல் மாலிக் ஷார்ஜாவில் வசித்து வரும் தனது மகள் வீட்டிற்கு சென்னை நியூ காலேஜின் முன்னாள் முதல்வர் அப்துல் மாலிக் வருகை தந்துள்ளார். அவர் ஷார்ஜாவில் அடுத்த மாதம் 7-ஆம் தேதி வரை… Read more »

ஷார்ஜாவில் காணாமல் போனவர் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டார்

ஷார்ஜாவில் காணாமல் போனவர் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டார்

ஷார்ஜாவில் காணாமல் போன பி. காளியப்பன் சில நல்லுங்களின் உதவியால் கண்டுபிடிக்கப்பட்டு குடும்பத்தினருடன் ஒப்படைக்கப்பட்டார். இப்பணியில் உதவிய அனைவருக்கும் நன்றியை அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.     ஷார்ஜா வந்த தமிழகத்தை சேர்ந்தவரை காணவில்லை : கண்டுபிடித்து தர அவரது மகன்… Read more »

ஷார்ஜாவில் நடைபெற்ற நூல் அறிமுக நிகழ்ச்சி

ஷார்ஜாவில் நடைபெற்ற நூல் அறிமுக நிகழ்ச்சி

ஷார்ஜாவில் நடைபெற்ற நூல் அறிமுக நிகழ்ச்சி ஷார்ஜா : ஷார்ஜாவில் இனிய திசைகள் வாசகர் வட்டத்தின் சார்பில் நூல் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு அய்மான் அமைப்பின் பொதுச்செயலாளர் காயல் எஸ்.ஏ.சி. ஹமீது தலைமை வகித்தார். அவர் தனது தலைமை… Read more »