1. Home
  2. முதுகுளத்தூர்

Tag: முதுகுளத்தூர்

முதுகுளத்தூர் ஒன்றிய துணைத் தலைவர் போட்டியின்றி தேர்வு

முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவராக ஆர்.தர்மர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்ட அதிமுக செயலாளரும் புளியங்குடி ஒன்றிய கவுன்சிலருமான ஆர்.தர்மர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நிகழ்ச்சிக்கு ஒன்றியக் குழுத் தலைவர் சுதந்திராகாந்தி தலைமை வகித்தார். தேர்தல் அதிகாரி எம்.அழகேசன், ஆணையாளர் குருநாதன் ஆகியோர் முன்னிலை…

முக்கிய நகரங்களுக்கு பஸ் வசதி; முதுகுளத்தூர் வர்த்தக சங்கம் வலியுறுத்தல்

முதுகுளத்தூர் : முதுகுளத்தூரிலிருந்து முக்கிய நகரங்களுக்கு பஸ் வசதி வேண்டும், என நகர் வர்த்தக சங்கம் வலியுறுத்தியுள்ளது. முதுகுளத்தூரிலிருந்து நாகூர், வேளாங்கன்னி, திருச்செந்தூர், மதுரை, சென்னை, கோவைக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. ஆனால், பழநி, கன்னியாகுமரி, குற்றாலம், சேலம், ஈரோடு ஆகிய நகரங்களுக்கு இல்லை. இந்த ஊர்களுக்கு வியாபாரிகள்,…

முதுகுளத்தூர் பள்ளி மாணவர்கள் சாதனை

முதுகுளத்தூர் காமராஜர் மெட்ரிக். பள்ளி மாணவர்கள் மாவட்ட விளையாட்டுப் போட்டியில் அதிக புள்ளிகள் பெற்று சாதனை படைத்துள்ளனர். பரமக்குடி கல்வி மாவட்டம் உலக திறனாய்வாளர்களை தேர்வு செய்யும் விளையாட்டு போட்டி எஸ்.வி.என். அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் முதுகுளத்தூர் காமராஜர் மெட்ரிக். பள்ளியில் 6 ஆம்வகுப்பு பயிலும் மாணவர்கள்…

ரோட்டில் தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களால்…நெருக்கடி… போக்குவரத்தில் திணறும் கீழக்கரை, முதுகுளத்தூர்

டூவீலர்கள், ஆட்டோக்கள், லாரிகள் போன்ற வாகனங்களை ரோட்டோரங்களில் தாறுமாறாக நிறுத்தி விடுவதால், கடும் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி, கீழக்கரையும், முது குளத்தூரும் திணறுகிறது ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வளர்ந்து வரும் நகரங் களில் ஒன்று கீழக்கரை. இங்கு நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால்,…

புகையில்லா பொங்கல் பண்டிகை முதுகுளத்தூரில் ஆலோசனை

முதுகுளத்தூர், : முதுகுளத்தூரில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில், பொங்கல் பண்டிகையை புகையில்லாமல் கொண்டாடுவது குறித்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் நடந்த இக்கூட்டத்திற்கு, பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி தலைமை வகித்தார். இன்ஸ்பெக்டர் மூக்கன், பள்ளி தலைமை ஆசிரியர் முகமது சுலைமான், பேரூராட்சி துணைத்தலைவர் பாசில் அமின் ஆகியோர்…

தானிய களமாக மாறிவிட்ட முதுகுளத்தூர்- கமுதி ரோடு; விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்

முதுகுளத்தூர்- கமுதி செல்லும் ரோடு, தானிய களமாக மாறி இருப்பதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. முதுகுளத்தூர்- கமுதி இடையே உள்ள கரிசல் நிலங்களில் பயிரிடப்பட்ட சோளம், கம்பு, கேழ்வரகு பயிர்களை ரோடுகளில் குவித்து, தானியங்களை பிரித்தெடுக்கும் பணியில் தற்போது விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். அந்த தானிய…

முதுகுளத்தூர் மீலாது விழா – ஊர்வலம் – காட்சிகள்

முதுகுளத்தூர் மீலாது விழா – ஊர்வலம் – காட்சிகள்   தகவல் : துல்கிஃப்லி

முதுகுளத்தூர் அருகே இடநெருக்கடியால் மரத்தடி நிழலில் படிக்கும் அவலம்

முதுகுளத்தூர் அருகே கீரனூர் அரசு தொடக்கப்பள்ளி கட்டிடத்தில், உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருவதால், இட நெருக்கடியால், மாணவர்கள் மரத்தடி நிழலில் அமர்ந்து படிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. கீரனூர் அரசு நடு நிலைப்பள்ளி, கடந்த 2009 ஜூலையில் உயர் நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு 102 மாணவர்கள் படித்து வருகின்றனர். தரம்…

முதுகுளத்தூரில் கட்டிட மாடிகளின் சுவர்களில் மின் இணைப்பு வயர்கள்: விபத்து அபாயத்தில் மக்கள்

முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் பஜார் பகுதியில் உள்ள மின் கம்பங்களிலிருந்து, குருவி கூடுபோல், கடைகள், வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. பஜார் பகுதியில் பல அறைகள் ஒரே கட்டிடத்திற்கு பல மின் இணைப்புகள், அக்கட்டிடத்தின் சுவர் ஓரங்களில் மின் வயர்கள் செல்வதால் மாடிகளில் உள்ள அலுவலகம், கம்ப்யூட்டர் சென்டர்களுக்கு…

வாரச்சந்தை நாளன்று முதுகுளத்தூரில் கள்ள நோட்டு புழக்கம் அதிகரிப்பு

முதுகுளத்தூர் : முதுகுளத்தூரில் வாரந்தோறும் வியாழக்கிழமை வாரசந்தை கூடும். காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்கள் உள்பட அனைத்து அத்தியாவசிய பொருட்களின், வியாபாரிகள் உற்பத்திக்கேற்ப விலையில் நிர்ணயம் செய்யப்படுகிது. இதனால் நகர், கிராமப்புற மக்கள், தேவையான அனைத்து பொருட்களையும், சந்தைகளில் மொத்தமாக வாங்குகின்றனர். கூட்ட நெரிசலை பயன்படுத்தி, கள்ள நோட்டுக்களை…