1. Home
  2. பள்ளி

Tag: பள்ளி

பள்ளி மாணவர் இறப்பில் சந்தேகம்: புதைக்கப்பட்ட உடல் பரிசோதனைக்காக தோண்டி எடுப்பு

முதுகுளத்தூர் அருகே, பள்ளி மாணவர் இறப்பில் சந்தேகம் அடைந்த போலீஸார், புதைத்த உடலை செவ்வாய்க்கிழமை தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் வட்டம், தேரிருவேலி அருகே உள்ள அணிகுருந்தான் கிராமத்தைச் சேர்ந்தவர் செய்யது ரசாக். இவரது மனைவி மகரியா பேகம். இவர்களுக்கு 3…

முதுகுளத்தூர் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு யோகாசனப் பயிற்சி

முதுகுளத்தூர் அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்கு, நேரு யுவகேந்திரா மற்றும் வாழும் கலை சார்பில் யோகாசனப் பயிற்சி வியாழக்கிழமை அளிக்கப்பட்டது.   ஜூன் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்பட உள்ளதை அடுத்து, அன்றைய தினம் முதுகுளத்தூர் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் யோகாசனப் பயிற்சியில்…

எது நல்ல பள்ளி? பேசலாம் வாங்க!

எது நல்ல பள்ளி? பேசலாம் வாங்க! எது நல்ல பள்ளி? பேசலாம் வாங்க! இல. சண்முகசுந்தரம் மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com சென்னை உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம். பதிப்புரை அரசு பள்ளி…

பள்ளி வேன் கவிழ்ந்து குழந்தைகள் படுகாயம்

முதுகுளத்தூர், : முதுகுளத்தூர் அருகே பள்ளி வேன் கவிழ்ந்த விபத்தில், படுகாயம் அடைந்த 4 மாணவ, மாணவிகள் மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். முதுகுளத்தூர் அருகேயுள்ள கொழுந்துரையில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. நேற்று பள்ளி முடிந்தவுடன் கொழுந்துரையில் இருந்து செம்பொன்குடிக்கு 42 மாணவ,…

முதுகுளத்தூர் பள்ளி மாணவர்கள் சாதனை

முதுகுளத்தூர் காமராஜர் மெட்ரிக். பள்ளி மாணவர்கள் மாவட்ட விளையாட்டுப் போட்டியில் அதிக புள்ளிகள் பெற்று சாதனை படைத்துள்ளனர். பரமக்குடி கல்வி மாவட்டம் உலக திறனாய்வாளர்களை தேர்வு செய்யும் விளையாட்டு போட்டி எஸ்.வி.என். அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் முதுகுளத்தூர் காமராஜர் மெட்ரிக். பள்ளியில் 6 ஆம்வகுப்பு பயிலும் மாணவர்கள்…

8 பள்ளிகளில் குடிநீர் சுத்திகரிப்பு கருவிகள்

முதுகுளத்தூர் தொகுதியில், 8 பள்ளிகளில் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.20 லட்சம் செலவில் குடிநீர் சுத்திகரிப்பு கருவிகள் வழங்கப்பட்டுள்ளதாக முருகன் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்தது: முதுகுளத்தூர் தொகுதிக்குள்பட்ட, பேரையூர், அலங்கானூர், கடலாடி, சிக்கல், சாயல்குடி(பெண்கள் பள்ளி), கீழத்தூவல், மேலக்கிடாரம் ஆகிய அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கும்,…

பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி

முதுகுளத்தூர், : முதுகுளத்தூர் அருகேயுள்ள குருவிக்காத்தி நடுநிலைப்பள்ளியில், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கான 2ம் கட்ட பயிற்சி நடைபெற்றது. கடலாடி ஒன்றிய வட் டார வள மையம் சார்பில் நடைபெற்ற இப்பயிற்சிக்கு, ஒருவானேந்தல் ஊராட்சி தலைவர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். ஆப் பனூர் ஊராட்சி தலைவர் முருகானந்தம், கிடாத்திருகை ஊராட்சி…

முதுகுளத்தூரில் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி

முதுகுளத்தூர், : முதுகுளத்தூர் வட்டார வள மையத்தில் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி நடந்தது. முதுகுளத்தூர் வட்டார வள மைத்திற்கு உட்பட்ட அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல் நிலைப்பள்ளி உள்ளிட்ட 63 பள்ளிகளை சார்ந்த பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு முதற்கட்ட பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் பள்ளி…

எய்ட்ஸ் விழிப்புணர்வு நாடகம் கீழத்தூவல் அரசு பள்ளிக்கு மாநில அளவில் 3ம் இடம்

முதுகுளத்தூர், : முதுகுளத்தூர் அருகேயுள்ள கீழத்தூவல் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் எய்ட்ஸ் விழிப்புணர்வு நாடகத்தில் மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளனர். கீழத்தூவல் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் திருநாகேஸ்வரன், பவித்ரா, சபரிபுவனேஸ்வரி, வளர்மதி, காளீஸ்வரி ஆகிய மாணவ, மாணவிகள் மாவட்ட அளவில்…

பள்ளி மாணவர்களுக்கு ஹிந்தி வார விழா

முதுகுளத்தூரில் மாவட்ட நேரு யுவகேந்திரா மற்றும் பள்ளி வாசல் மழலையர் தொடக்கப் பள்ளி சார்பில் ஹிந்தி இரு வார விழா திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட இளைஞர் மன்ற ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் தலைமை தாங்கினார். பள்ளியின் தாளாளர் முகமது இக்பால் முன்னிலை வகித்தார். முதல்வர் வாசுகி வரவேற்புரை ஆற்றினார்.…