1. Home
  2. கவிதை

Tag: கவிதை

என்றைக்கும் நிலைக்குந் தமிழ்

என்றைக்கும் நிலைக்குந் தமிழ் (கவிதை) வித்யாசாகர்! சொல்லில் நயம் பொருளி லெழில் கண்ணும் காதும் போல; காணவும் கேட்கவும் இனிப்பு மொழி, கண்டவர் கேட்டவர் போற்றும் தனித்த மொழி; தமிழ்! வரலாற்றுக் கொடை வள்ளுவப் பறை தெல்லுதெளிந்த கிள்ளை நடை சொல்லும் பாட்டும் சிறக்கும் மொழி சந்தத் தமிழ்;…

அம்மாப் பேச்சு

அம்மாப் பேச்சு (வித்யாசாகர்) கவிதை ! சொல்லிலடங்கா சுகமெனக்கு எப்போதுமே அவள்தான், அவளுக்கு மட்டும் தான் அது நானாக மட்டுமே இருக்கிறேன், அவளுக்கு எப்போதுமே நான் அதீதம் தான்; சொல்லைக்கடந்த சுகம் எனக்கு அவளைவிட வேறென்ன? அவளுக்கான சொற்கள் மட்டுந் தான் என் மூச்சு அவளுடைய ஒற்றைப் பெயரை யாசித்து…

ஒரு கவிதைப் பூ

  ஞானத் தலைநகர் கீழக்கரை வள்ளல், கொடை நாயகர் பட்டத்து சுல்தான் முகம்மது வம்சத்தை சேர்ந்த சங்கைக்குரிய பி.எஸ்.எம். ஹபிபுல்லா கான் அவர்களை பாராட்டி வழங்கிய ஒரு கவிதைப் பூ   அஸ்ஸ்லாமு அலைக்கும், அன்பிற்குரியோரே ! அகமெல்லாம் நிறைந்த ஆற்றல் உடையோரே ! பட்டத்து சுல்தான் வம்சத்து…

நா.நாகராஜன் முகநூல் கவிதைகள்

நா.நாகராஜன் முகநூல் கவிதைகள்     கௌரவப் பொய்கள்    பொய்யை கண்டுபிடித்தவன் உண்மையிலேயே புத்திசாலி. அவன் தயவால் தான் நிறையப் பேர் பிழைப்பு இன்று  நிஜத்தில்  ஓடிக்கொண்டு  இருக்கிறது. —————————–   கஷ்டம்   இல்லாதவன்  கஷ்டம் இருப்பவனுக்கு சொன்னால் புரியாது —————————   மரியாதை தேய்பிறை  …

காதலர் தின கவிதைகள்

காதலர் தின கவிதைகள் ==================== கண்ணில் மணியாய்க் கருவிழித் தன்னில் கடப்பதுபோல் எண்ணம் நிறைய இயங்கும் நினைவும் படர்ந்துளது மண்ணில் விழுந்த மழைநீர் உறைந்து மணம்தரும்போல் கண்ணில் அவளுரு காலம் முழுதும் கலந்துளதே. சித்திரம்போ லுன்றன் சிரித்த முகவெழில் முத்திரையாய்ப் பதிந்து முழுவது முள்வாங்கி நித்திரையைக் குலைத்தென்னை நித்தம்…

மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணரின் 118 வது பிறந்தநாள் விழா வாழ்த்துக் கவிதை

மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணரின் 118 வது பிறந்தநாள் விழா வாழ்த்துக்கவிதை மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணரின் 118 வது பிறந்தநாள் இன்று.   அந்தச் சூரியனை வாழ்த்த விரும்பும் சுடர் விளக்கின் கவிதை இதோ: கூவு கருங்குயில் குரலது தமிழே ! நாவு கிளியது நவில்வது தமிழே !…

தஞ்சை குடமுழுக்கு கவிதை

தஞ்சை குடமுழுக்கு கவிதை ——  திருத்தம் பொன்.சரவணன் அஞ்செழுத் துடையாய் ஆலமர் செல்வ நஞ்சினை உண்டோய் நமச்சி வாய நன்செய் யுடன்நல் அறிஞர் சூழ்ந்திடும் தஞ்சை சிவமே போற்றி உலகம் காத்திட உண்டாய் நஞ்சினை அழலது உன்றன் மிடற்றினில் கறையாய் கறையதைக் கழுவத் துடித்திடும் கரங்கள் உறையெனப் பொழிந்திடும்…

எனக்குப் பிடித்த கவிதைகள்

எனக்குப்பிடித்த கவிதைகள் : 1. “ரேசன் கடைக்காரருக்கு குழந்தை பிறந்தது…. எடை குறைவாக…!” 2. “வராந்தாவிலேயே இருந்த வயதான தந்தை…. இறந்த பின் ஹாலுக்குள் வந்தார் புகைப்படமாய்…!” 3. “வீட்டின் பெயரோ அன்னை இல்லம்..! அன்னை இருப்பதோ முதியோர் இல்லம்..!” 4. ” புறாக்கள் வளர்க்கும் எதிர் வீட்டுக்காரர்…

மகளிர் தின கவிதை

என்னை கண்ணே என்றாய் என் கண்ணின் கருமணியே என்றாய் என் உயிரே நீ தான் என்றாய் எனக்கு உலகமே நீ தான் என்றாய் இப்படி ஒவ்வொருமுறையும் நீ மகளிர் தின வாழ்த்து சொல்கின்றாய் தாய் இல்லாத எனக்கு தாய்க்கு தாயாய் இருக்கின்றாயே தாய்மைக்கு பேதம் இல்லை நீ தாயுமானவனாய் இருப்பதனால் மகளிர்தின…

அறத்தான் வருவதே..

அறத்தான் வருவதே.. சின்ன பொய் என்கிறோம் சிரசில் தீ வைக்கிறோம், சின்ன குற்றமென்கிறோம் நம் சமுதாயத்தை சீர்குலைக்கிறோம், சின்ன சின்னதாய் சேரும் காட்டாற்றைப்போல பெரிது பெரிதாய் இன்று – அறம்வீழ்ந்து கிடக்கிறதே அறிந்தோமா? கையில் பணமுண்டு காரும் வீடும் கொழிக்கும் செல்வங்களும் உண்டு கற்றதில் பிழை என்கிறோம் கல்வியில்…